கருப்பு கவுனி அரிசி பயன்கள் | Karuppu Kavuni Rice Uses in Tamil

 கருப்பு கவுனி அரிசி பயன்கள் | Karuppu Kavuni Rice Uses in Tamil

கருப்பு கவுனி அரிசி இன்று நிறைய பேர் இதை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். இதன் விலை சற்று அதிகம் என்றாலும் இதன் மருத்துவ நன்மைகளோடு ஒப்பிடும்பொழுது விலையை பற்றி யோசிக்காமல் வாரத்தில் இரண்டு நாட்களாவது கட்டாயம் நம் உணவில் சேர்த்து வர வேண்டும்.

பொதுவா அதிகமாக மருத்துவ நன்மைகள் உள்ளது என்று சொல்வதே விட என்னென்ன நன்மைகள் உள்ளது என்று உங்களுக்கும் தெரிந்தால்தான் இதன் உண்மையான மதிப்பு தெரியும்.

கவுனி அரிசி கருப்பு நிறத்தில் இருப்பதற்கு காரணம், இதில் அந்தோசயனின் என்ற மூலக்கூறு அதிகமாக உள்ளது.

மிக முக்கியமாக இந்த கருப்பு கவுனி அரிசியில் இயற்கையாகவே பசையம் எனப்படும் ஒட்டும் தன்மையுள்ள வேதிப்பொருளும் கிடையாது.

கருப்பு கவுனி அரிசி பயன்கள் | Karuppu Kavuni Rice Uses in Tamil

நோய் எதிர்ப்பு சக்தி

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு தேவையான இரும்பு சத்து என்று பல சத்துக்கள் அதிகம் நிறைந்தது.

இந்த கருப்பு கவுனி அரிசி எனவே வாரம் இரண்டு முறை இதை உணவில் சேர்த்து வரும் பொழுது நம் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதனால் எல்லா காலங்களிலும் நம்மை நோய்கள் அண்டாமல் பாதுகாக்கும்.

Karuppu Kavuni Rice images

மலச்சிக்கல்

முக்கியமாக இதில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. அதாவது நூறு கிராம் கருப்பு கவுனி அரிசியில் 4.9 கிராம் அளவு நார்ச்சத்து உள்ளது.

பொதுவா நாம் சாப்பிடு உணவு, எளிதில் ஜீரணம் ஆவதற்கு, நார்ச்சத்து மிகவும் அவசியம். ஆனால் நாம் இன்று தினமும் சாப்பிடு வெள்ளை அரிசியில் நார்சத்து என்பது அறவே இல்லாத கார்போஹைட்ரேட் மட்டுமே கொண்டதாகும்.

நம்முடைய பல நோய்களுக்கு காரணம் இந்த பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசிதான்.  ஆனால் அரிசி வகைகளிலேயே மிகக்குறைந்த அளவு கார்போஹைட்ரேட், அதே சமயம் மிக அதிக அளவிலான நார்ச்சத்து கொண்ட அரிசி இந்த கருப்பு கவுனி அரிசி.

எனவே இதை அடிக்கடி உணவில் சேர்த்து வரும் பொழுது மலச்சிக்கல்  என்ற பிரச்சனைக்கு வேலை இல்லை.

சர்க்கரை நோய்

இது குறைந்த கிளைசெமிக் குறியீடு குறியீட்டைக் கொண்டதால் எந்த ஒரு பயமும் இல்லாமல் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வரலாம்.

முக்கியமாக இதில் அதிக நார்சத்து  இருப்பதால் வகை இரண்டு நீரிழிவு ஏற்படுவதை தடுக்கிறது.

எனவே சர்க்கரை நோய் இருப்பவர்கள் வெள்ளை அரிசியை குறைத்துக் கொண்டு இந்த கருப்பு கவுனி அரிசியை அதிகம் உணவில் சேர்த்து வந்தால் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

காரணம், இந்த கவுனி அரிசியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்,  நார்ச்சத்து,அந்தோசயனின்  போன்றவை ரத்த சர்க்கரை கட்டுக்குள் உதவுகிறது.

Karuppu Kavuni Rice Uses in Tamil

வைட்டமின் பி 12

இந்த அரிசியில் அதிக அளவு வைட்டமின் பி 12 உள்ளது. பொதுவாக  இந்த  வைட்டமின் பி 12  என்ற சத்தானது அசைவ உணவுகளில்  மட்டுமே அதிகம் உள்ளது. ஆனால் இந்த கருப்பு கவுனி அரிசியில் வளமாக உள்ளது.

இந்த சத்தானது மூளை செல்களை ஆரோக்கியமாக வைத்துகொள்ள  உதவுகிறது. உண்மையில் இந்த சத்து குறைவால்தான் மனச்சோர்வு, டிமென்ஷியா போன்ற பல்வேறு நரம்பியல் கோளாறுகள் ஏற்படுகின்றன.

எனவே இந்த அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது அறிவாற்றல் திறன், நினைவாற்றல் திறன், செறிவுத்திறன் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.

கருப்பு கவுனி அரிசி பயன்கள் | Karuppu Kavuni Rice Uses in Tamil

மன அழுத்தம் 

இந்த கருப்பு கவுனி அரிசியில் உள்ள சத்துகள் மூளையில் இருக்கக்கூடிய என்ற மன அழுத்த ஹார்மோன்ஐ கட்டுப்படுத்தும் என்றும் இதனால் மன அழுத்தமும் குறையும் என்றும் ஆய்வுகள் கூறுகிறது.

எனவே அதிகமான அழுத்தம், மனச்சோர்வு, கவலைபோன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த கருப்பு கவுனி அரிசியை சாப்பிட்டு வரும்பொழுது மனதிலும், உடலிலும் புத்துணர்ச்சி உண்டாகும்.

கருப்பு கவுனி அரிசி பயன்கள்

கட்டிகள் 

கொரியாவின் பிரபல பல்கலைக்கழகம்  செய்த ஆராய்ச்சியில்  இந்த கருப்பு கவுனி அரிசி வீக்கத்தை குறைப்பதாக கண்டறிந்துள்ளனர்.

அதாவது இந்த கருப்பு கவுனி அரிசி நீர்க்கட்டிகளை குறைக்க உதவும் என்பதால் இந்த அரிசியை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டு வரும் பொழுது உடலில் உள்ள எந்தவித கட்டிகளையும் குறைக்க உதவும்.

வலிமையான எலும்பு

வலுவான எலும்புகளை உருவாக்க கால்சியம்  தேவை அந்த வகையில் கால்சியம் அதிகம் கொண்ட இந்த கருப்பு கவுனி அரிசியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்புகளில் கால்சியத்தின் அளவு அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

கருப்பு கவுனி அரிசி பயன்கள் | Karuppu Kavuni Rice Uses in Tamil

தேவையற்ற கொழுப்பு 

மிக முக்கியமாக இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைப்பதால் இதயத்தின் ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

இந்த கருப்பு கவுனி அரிசியில் உள்ள அந்தோசயனின் ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது.

மேலும் இது இதயத்தில் உள்ள சிறு ரத்தக் குழாய்களில் அடைப்பட்டிருக்கும் கொழுப்புகளையும் கரைக்க உதவும்.

கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. இதில் கல்லீரல் கொழுப்பு நோய் என்பது, கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உருவாகிறது.

இந்த கருப்பு கவுனி அரிசி கொழுப்பு அமிலங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதால் ட்ரைகிளிசரைடுகள்  மற்றும் tமொத்த கொழுப்பு அளவை குறைத்து கொழுப்பு கல்லீரல் நோய்க்கான அபாயத்தை குறைப்பதாக கூறப்படுகிறது.

Karuppu Kavuni Rice side effects in tamil

உடல் எடை 

அதிக உடல் எடையினால் அவதிப்படுபவர்கள் இந்த கருப்பு கவுனி அரிசியை சாப்பிட்டு வரும் பொழுது இதில் இருக்கக் கூடிய அதிகப்படியான நார்ச்சத்து கொழுப்பை கரைத்து வெளியேற்றும்.

இதனால் உடல் எடையும் வேகமாக குறையும்.

ஆஸ்துமா

மூச்சுக்குழாய்களில் உள்ள நீர்க்கோவை அல்லது சளியால் ஏற்படும் பாதிப்புகளையும் இது குறைப்பதால், ஆஸ்துமா கட்டுப்படுத்துகிறது.

உயர் ரத்த அழுத்தம்

முக்கியமாக முற்றிலும் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த உதவுகிறது. அதே போன்று ரத்த சோகையைப் போக்கவும் இது உதவுகிறது.

உடலில் புதிய சிவப்பு  அணுக்களின் உற்பத்திக்கு மிகவும் அவசியமான சத்து இரும்பு சத்து. அந்த வகையில் கருப்பு கவுனி அரிசியில்,மிக அதிக அளவிலான இரும்பு சத்து அடங்கியுள்ளது.

எனவே ரத்த சோகை உள்ளவர்கள் இதை அதிக உணவில் சேர்த்து வர வேண்டியது அவசியம். முக்கியமாக இது ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

Karuppu Kavuni Rice side effects in tamil

முக்கிய குறிப்பு 

இப்படி இது நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இதை தினமும் சாப்பிடலாமா? என்றால், நிச்சயமாக தினமும் கூட சாப்பிடலாம்.

அதே சமயம் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிடுவது வேண்டாம்.

இதனால் செரிமான சிக்கல் ஏற்படக்கூடும்.

அதே போன்று, இதை சாதாரண அரிசியில் என்னவெல்லாம் செய்து சாப்பிடுகிறோமோ அது அத்தனையும் இதிலும் செய்து சாப்பிடலாம்.

எனவே நீங்களும் இந்த கருப்பு கவுனி அரிசியை இனி அடிக்கடி உங்கள் உணவில் சேர்க்க தொடங்குங்கள். மருத்துவமனை செல்ல தேவையே இருக்காது.

 இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயாமாகா படிக்கவும்.

Related Posts

1 Comment

  1. Pingback: Visit Your URL

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning