பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும் | How to Reduce Pitham in Tamil
பித்தம் என்றால் என்ன?
நம்ம கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கின்ற ஒரு வகையான திரவத்தை தான் நம்ம பித்தம் என்று கூறுகிறோம். இந்த பித்தநீர் செரிமானத்துக்கு உதவும் பணியினை செய்கிறது.
முக்கியமாக அதிக கொழுப்புள்ள உணவுகள் நம்ம சாப்பிடும்போது, அதற்கு ஏற்றவாறு பித்தநீர் அதிகமாக சுரந்து, நம்ம செரிமானத்தை எளிதாக்கும்.
பித்த நீர் இறந்த ரத்த சிவப்பணுக்களையும், நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகிறது. பித்தநீர் நம்ம கல்லீரலில் சுரக்கப்பட்டு பித்தப்பையில சேகரிக்கப்படுது.
பித்தத்தை ஏற்படுத்தும் உணவுகள்
கொழுப்பு, அதிகமுள்ள உணவுகளை நம்ம சாப்பிடும்போது நம்ம உடலில் பித்தம் அதிகமாகும். காரணம், கொழுப்புச் சத்துள்ள உணவுகளை நம்ம சாப்பிடும்போது செரிமானம் ஆகுவது தாமதப்பட்டு அது பாதிப்பை ஏற்படுத்தும்.
சிலருக்கு பிறவியிலேயே கல்லீரல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் இருந்தாலும், அதன் காரணமாகவும் பித்தம் அதிகரிக்கும்.
நம்ம உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தோம்ன்னா உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு பித்தம் அதிகமாகும்.
அதே மாதிரி தினமும் அளவுக்கு அதிகமான டீ, காபி போன்ற பானங்களை குடிக்கும் போது கூட பித்தம் அதிகமாகுவதற்கான வாய்ப்புகள் இருக்கு.
நாம் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் சாப்பிடு போது கூட பித்தம் அதிகமாகும். அதிகமான மாத்திரைகள் எடுத்து கொள்ளும் போது அது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தி பித்தத்தை உருவாக்கும்.
தினமும் அதிக நேரம் கண்விழித்துக் கொண்டு சரியா உறங்காமல் இருந்தாலும் கூட, பித்தம் அதிகமாகும்.
மது மற்றும் புகைப்பிடித்தல் போன்ற மோசமான பழக்கங்களினால் நம்ம உடல் நலம் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி உடலில் பித்தமும் அதிக ஆகும்.
அதே போன்று நொறுக்குத்தீனிகள், அசைவ உணவுகள், காரம் மற்றும் புளிப்பு சுவை உடைய உணவுகளை அதிகம் சாப்பிடுவது கூட நம் உடலில் பித்தநீரை அதிகமாக சுரக்க வைக்கும்.
மேலும் மனஅழுத்தம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளினால் கூட பித்தம் அதிகரிக்கலாம்.
பித்தம் அதிகமானால் அறிகுறிகள்
நம்ம உடல்ல் அதிகப்படியான பித்தநீர் சுரக்கும் போது தொடர்ந்து தலை வலி, வாந்தி, மயக்கம் மற்றும் குமட்டல் ஏற்படும்.
உடல்ல பித்தம் அதிகமாகும்போது வாயுப் பிரச்சனை, பாதம் மற்றும் உதடுகளில் வெடிப்பு, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வறட்சியாகவும், கடினமாகவும் மற்றும் தோல் உரிந்தும் காணப்படும்.
காலை எழுந்த உடன்கசப்புத் தன்மையுடன் கூடிய வாந்தி மற்றும் மஞ்சள் நிறத்தில வாந்தி வருவது, நம்ம வாய் எப்பவுமே கசப்பா இருக்கும் இவை அனைத்தும் பித்தம் உள்ள அறிகுறிகள்.
குடல் பகுதிகள் கழிவுகள் தேங்கி செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைய ஏற்படுத்தும்.
இளநரை ஏற்படும் அதாவது நமக்கு சிறிய வயதிலே , பித்தம் அதிகமாக இருந்தால் தலை முடி முழுவதும் நரைத்து விடும்.
பொடுகுத் தொல்லை அதிகமா இருக்கும். தோல் சுருங்குதல் மற்றும் தோலின் மினுமினுப்பு குறைய ஆரம்பிக்கும்.
நமக்கு உடல் சூடு அதிகமாகி நீர் வறட்சி ஏற்படும்.
இது போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு தொடர்ந்து இருந்தால் பித்தம் நமது உடலில் அதிகம் உள்ளதற்கான அறிகுறியாகும். ஆகவே கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.
இதனை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு கல்லீரலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துறதுக்கு கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பித்தம் நீங்க இயற்கை வைத்தியம்
தேவையான பொருட்கள்
- சுக்கு
- சீரகம்
- மல்லி
- தேன்
- பனை வெல்லம்
செய்முறை
சுக்கு, சீரகம், மல்லி இவற்றை சம அளவில் எடுத்து ஒரு வாணலில் மிதமான சூட்டில் வறுக்கவும். பின்னர் ஆற வைத்து பொடியாக அறியாது வைத்து கொள்ள வேண்டும்.
அறைத்து வைத்த பொடியில் ஒரு தேக்கரண்டி அளவும் எடுத்த ஒரு டம்ளர் நீரில் நன்றாக கொதிக்க வைக்கவும்.
ஆரிய பின்னர் தேன் மற்றும் பனை வெல்லம் ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து அருந்தி வருவதன் மூலமாக பித்தம் கட்டுக்குள் வரும்.
இதனையும் படிக்கலாமே
- கொடுக்காப்புளி பயன்கள் | Kodukapuli Benefits Tamil
- கரும்பு சாறு நன்மைகள் | Sugarcane Juice Benefits in Tamil
- கலாக்காய் பயன்கள் | Kalakai Benefits in Tamil
- சேப்பங்கிழங்கு பயன்கள் | Seppankilangu Uses in Tamil
- சேப்பங்கிழங்கு பயன்கள் | Seppankilangu Uses in Tamil
- சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil
- ஆஸ்துமா முற்றிலும் குணமாக | Best Good for Wheezing in Tamil
அனைவரும் நமது வளைத்ததின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
9 Comments
Comments are closed.