சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil
வறுக்கப்பட்ட 30 கிராம் சூரியகாந்தி விதையில் உள்ள சத்துக்கள்
கலோரிகள் 163கிராம் , கொழுப்பு14 கி ,கார்போஹைட்ரேட் 6.5 கி, பைபர் : 3 கி,வைட்டமின் ஈ : 37% நியாசின் : 10%,வைட்டமின் பி6 : 11%,இரும்பு : 6% ,மெக்னிசியம் : 9%,துத்தநாகம் : 10% .
நாம் தினசரி சாப்பிட்டு வருகின்ற உணவு முறைகளில் விதைகளை மற்றும் நட்ஸ்களை சேர்த்து சாப்பிடுவது, நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
ஏனென்றால் நட்ஸ்வகைகள் மிகவும் சத்தானவை. மேலும் அது நமது உடலினை நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கின்றது.
இந்த சூரியகாந்தி விதைகளில் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் தாதுச் சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்தது.
இந்த சூரியகாந்தி விதைகளில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று விதைக்காக பயிரிடப்படுகின்றது. மற்றொன்று எண்ணெய்க்காக, பயிரிடப்படுகின்றது.
சூரிய காந்தி விதையானது அளவில் சிறியதாக இருந்தாலும் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இதில் உடலுக்குத் தேவையான எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
மிகவும் குறிப்பாக வெள்ளை விதைகளில், vitamin E, துத்தநாகம், செலீனியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்றவை, நிறைந்துள்ளது.
இது, நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதோடு மட்டும் இல்லாமல். நீண்ட நாள் உள்ள நோய்களும் வராமல் தடுக்கின்றது. இதில் பினோலிக் அமிலம் மற்றும் flavonoids அதிக அளவில் காணப்படுகின்றன.
ஹார்மோன்
இந்த சூரிய காந்தி விதைகளில் உடலில் உள்ள ஹார்மோன்களை சமநிலைப்படுத்தக்கூடிய நூறு வகையான என்சைம்கள் அடங்கியுள்ளன.
குறிப்பாக, பெண்களுக்கு இந்த சூரிய காந்தி விதைகளில் உள்ள நொதிகள் பெண் ஹார்மோன்களாஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகியவற்றின் உற்பத்தியின் அளவினை சமநிலைப்படுத்துகின்றது.
ஆகவே பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய், தைராய்டு அறிகுறிகளை நிர்வகிக்க இது பேருதவி புரிகின்றது.
கற்பகாலத்தில் முதல் மூன்று மாதங்களில் அடிக்கடி ஏற்படக்கூடிய பிரச்சனையான வாந்தி குமட்டல் இது போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்துகிறது.
சூரியகாந்தி விதைகளில் உள்ள vitamin B, புரதம் வளர்ச்சிதை மாற்றத்தினை ஒருங்கிணைக்க உதவுகின்றது. மேலும் இது உடல் சமநிலையினை மேம்படுத்துகின்றது.
கொழுப்பினை கரைக்க
சூரியகாந்தி விதைகளில் எண்ணற்ற மக்னீசியம் சத்து அடங்கியுள்ளதனால் இது இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவுகின்றது.
செல்லுலார் மட்டத்தில் இருந்து இது செயல்படுவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை வேரோடு அழிக்கிறது. மேலும் உடம்பில் இருந்து நச்சுத்தன்மையினையும் கொலஸ்ட்ராலையும் கரைக்கின்றது.
கொலஸ்ட்ரால் உடலில் அதிக அளவில் இருப்பதால் தான் மெட்டா பாலிசம் சரியாக வேலை செய்வதில்லை.
எனவே சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவதன் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, மெட்டா பாலிசத்தினை அதிகரிக்கின்றது. ஆகவே நமது உடலுக்கு இதய நோய்கள எதுவும் வராது.
பசியின்மை
சூரிய காந்தி விதையினை சாப்பிட்டு வந்தால் இதில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்களை குறைக்கும் அளவிற்கு அதிக அளவில் கலோரிகள் உள்ளன.
இதனால் சூரியகாந்தி விதைகளை சாப்பிடு பொழுது நமது வயிறு நிரம்பிய திருப்தியினை அடைகின்றது.
ஆகவே, பசி வேதனை குறைந்து மனநிறைவு தருகின்றது. ஆகவே அதிக அளவில் உணவு எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் அதீத பசி உணர்வு உள்ளவர்கள் சூரியகாந்தி விதையை சாப்பிட்டு வருவது நல்லது.
ஜீரண சக்தி
சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலமாக மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் குடல் நோய் பிரச்சனைகள் குணமாகிறது.
இதில் உள்ள நொதிகள் செரிமான சாறுகளின் சுரப்பினை ஒழுங்குபடுத்தி மலச்சிக்கல் பிரச்சனைய சரி செய்கின்றது.
உடலில் தேவையற்ற நச்சுக்கள் தேங்குவதினை தடுக்கின்றது. ஆகவே, வயிற்று மற்றும் குடலின் செயல்பாட்டினை ஒழுங்குபடுத்துகிறது.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்வதற்கு நமது உடலுக்கு, ஏராளமான ஆற்றல் தேவைப்படுகின்றது. இந்த ஆற்றலானது, நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்படுகின்றது.
நாம் சூரியகாந்தி விதையினை சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலிற்கு தேவையான ஆற்றலை கொடுக்கின்றது.
சூரியகாந்தி விதைகளில் டையாமின் எனப்படுகின்ற சக்தி உள்ளது. இது உடலின் ஆற்றலினை நிர்வகிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
இதில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை உடலுக்கு ஆற்றலை தரக்கூடியது.
சூரிய காந்தி விதைகளை எவ்வாறு சாப்பிட வேண்டும்
- சூரிய காந்தி விதைகளை பொரித்து சாப்பிடலாம்.
- Chicken saladகளை சேர்த்து இதனை சாப்பிடலாம்.
- வதக்கிய காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
- பர்கர் போன்றவற்றில் சேர்த்தும் சாப்பிடலாம்.
- சூரிய காந்தி விதைகளை எண்ணெய்யாக ஆட்டியும் பயன்படுத்தலாம்.
இதனையும் படிக்கலாமே
- தண்டுக்கீரை பயன்கள் | Thandu Keerai Health Benefits
- கேழ்வரகு பயன்கள் | Kelvaragu Benefits in Tamil
- இயற்கை உணவு பட்டியல் | Healthy Food in Tamil
- பூந்திக்கொட்டை பயன்கள் | Boondi Kottai Uses in Tamil
- சோற்றுக்கற்றாழை பயன்கள் | Katralai Benefits in Tamil
- பனங்கற்கண்டு நன்மைகள் | Panakarkandu Uses in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
9 Comments
Comments are closed.