வைட்டமின் ஏ அதிகம் இருக்கும் உணவுகள் | Vitamin a Foods in Tamil

வைட்டமின் ஏ அதிகம் இருக்கும் உணவுகள் | Vitamin a Foods in Tamil

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க நமது உடலில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் சீராக இருக்க வேண்டியது அவசியம்.

இந்த வைட்டமின் ஏ சத்தும் நமது உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது. வைட்டமின் ஏ சத்து போதுமான அளவில் இருந்தால் தான் கண் பார்வை சிறப்பாக இருக்கும். கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் தொடர்பான ஒரு ஆராய்ச்சியில் வைட்டமின் ஏ சத்தானது கண்களின் செயல்பாட்டை மேம்படுத்த உ உதவும் என்றும், கண்டறியப்பட்டுள்ளது.

வைட்டமின் ஏ

சருமம் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் ஏ சத்து மிக மிக முக்கியம். அதுமட்டுமல்ல நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகள் சரியாக செயல்படவும் உதவுகிறது. அதே போன்று, நரம்பியல் செயல்பாடுகளை, பராமரிக்கவும் எலும்பு, மற்றும், பற்களின் வலிமையை மேம்படுத்தவும் உதவும்.

மேலும் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. உண்மையில் இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும்.

பொதுவாக உடலால் தானாக வைட்டமின்களை உற்பத்தி செய்ய முடியாது என்பதால் நாம் சாப்பிடு உணவுகள் மூலமாக மட்டுமே பெற முடியும். அந்த வகையில் வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை பற்றி பார்ப்போம்.

கேரட்

கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே முடிந்தவரை இதை உணவில் அதிகம் சேர்த்து வருவது நல்லது.

இதை பச்சையாகவோ அல்லது ஜூஸ் போன்றோ குடித்து வரலாம். உண்மையில் இதில் வைட்டமின் ஏ சத்தோடு, நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடென்ட், பீட்டா கரோட்டின், கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் ஏ என்று பெரிய சத்துக்கள் பட்டாளமே உள்ளது.

எனவே, தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு தேவையான அளவு வைட்டமின் ஏ சத்தை பெற முடியும்.

carrot health benefits in tamil

கேரட்டில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்ள 

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

கிழங்கு வகைகளில் சர்க்கரை வள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ அதிக அளவில் நிறைந்துள்ளது மேலும் இதில் வைட்டமின் பி, வைட்டமின் சி, பொட்டாசியம்,மெக்னீசியம், நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடென்ட், இரும்பு சத்து, கால்சியம், செலீனியம் போன்ற பல வித சத்துக்கள் நிறைந்துள்ளது.

பொதுவா, கிழங்கு வகைகளில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. உண்மையில் உடலில் கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது.

முக்கியமாக இதில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே இதை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.

sweet potato tamil
சர்க்கரைவள்ளி கிழங்கு பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள 

முருங்கைக்கீரை

முருங்கைக்கீரையிலும்,அதிக அளவு வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே அடிக்கடி இந்த முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் உங்களின் கண் பார்வை கூர்மையாக இருக்கும்.

உண்மையில் ஏராளமான சத்துக்கள் கொண்ட இதன் நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். முக்கியமாக இது ரத்த சோகையை போக்கும். மலச்சிக்கலை தடுக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் பெறவும் உதவும். எனவே எங்கும் எளிதாக கிடைக்கும் இந்த முருங்கைக்கீரையை வாரம் இரண்டு முறை உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முருகை மரத்தின் பயன்கள் | Moringa Tree Benefits

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்ள

பசலைக் கீரை

இந்தக் கீரை நன்மைக்கு அளவே இல்லை. காரணம் இதில் ஏராளமான சத்துக்களோடு வைட்டமின் ஏ சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளது.

இந்த பசலைக் கீரையில் உள்ள சத்து , கண்புரை மற்றும் கண் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்தும் கண்களுக்கு நல்ல பாதுகாப்பு கொடுக்கும்.

அதே போன்று நல்ல அழகான சருமத்தை பெற, அடிக்கடி உணவில் இந்த பசலைக் கீரையை சேர்த்து வருவது நல்லது.

பசலைக்கீரை பயன்கள்

பசலைக் கீரையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்ள

பப்பாளி

இந்த பப்பாளி பலத்திலும் வைட்டமின் ஏ சத்து மிக அதிகமாக உள்ளது. எனவே இந்த பப்பாளியை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

சருமத்தை பொலிவாக்கும். கண்களுக்கு மிக நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். முடியை ஆரோக்கியமாக வளர செய்யும். மன அழுத்தத்தைப் போக்க உதவும். புற்றுநோய் வராமல் தடுக்கக் கூடியது.

எனவே பப்பாளியை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.

பப்பாளிப்பழம் மருத்துவகுணங்கள்
பப்பாளியில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்ள

மாம்பழம்

பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தில் அனைத்து அத்தியாவசிய வைட்டமின் சத்துக்களும், அதிகமாக நிறைந்துள்ளது. அவற்றில் முக்கியமானது வைட்டமின் ஏ சத்தாகும்.

ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான இருபத்தஞ்சு சதவீதம் வைட்டமின் ஏ சத்தை ஒரு கோப்பை நறுக்கிய மாம்பழங்கள் தருகிறது.

இது கண்பார்வைக்கு, மிகவும் நல்லது. முக்கியமாக இது, மாலைக்கண் நோய் மற்றும் வறட்சியான கண்களைத் தடுக்கும்.

மேலும் சருமத்தை பொலிவோடும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். முக்கியமாக இதில் உள்ள பெக்டின் என்ற கரைக்குடி நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்திட உதவும்.

மாம்பழம் பயன்கள்

மாம்பழதில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்ள

முட்டை

அனைவருக்கும் முட்டையில் புரதம் மட்டும்தான் அதிகம் உள்ளது என்று தெரியும். ஆனால் இதில் வைட்டமின் ஏ சத்தும் அதிகம் உள்ளது.

குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் அதிகம் நிறைந்துள்ளது. தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

மேலும் இந்த முட்டையில் அதிக அளவு புரதம், வைட்டமின் ஏ, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் டி, ஆன்டஅக்சிடெண்ட் மற்றும் பலவித சத்துகள் நிறைந்துள்ளது.

ஈரல்

அதாவது ஆட்டிறைச்சி, கோழியில் உள்ள ஈரலில், அதிக அளவு, வைட்டமின் ஏ மற்றும் கனிம சத்து உள்ளது.

எனவே விட்டமின் A குறைபாடு உள்ளவர்கள் அடிக்கடி ஈரல் சாப்பிட்டு வருவது நல்லது.

மீன்கள்

மீன்களில், சல்மானில் விட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது இதய ஆரோக்கியத்திற்கும், மூளை ஆரோக்கியத்திற்கும், கண்களுக்கும் தேவையான சத்தாகும்.

எனவே வாரம் இரண்டு முறையாவது இந்த மீனை உணவில் சேர்த்து வாருங்கள்.

மீன் வகைகள் படம்

மீன்களில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்ள

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை  கட்டயமாக படிக்கவும்.

 

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning