மூங்கில் அரிசி பயன்கள் | Bamboo Rice Health Benefits in Tamil

மூங்கில் அரிசி பயன்கள் | Bamboo Rice Health Benefits in Tamil

மூங்கில் அரிசி பார்ப்பதற்கு நெல் போன்றே இருக்கும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. பழங்குடி மக்களின் முக்கிய உணவு வகையாக இது உள்ளது.

மூங்கில் அரிசி ஆனது 60 வயது முதிர்ந்த மூங்கில் மரங்களின் பூ பகுதியில் இருந்து சேகரிக்கக் கூடிய விதையாகும்.

மூங்கில் விதைகள் தான் மூங்கில் அரிசி என்று அழைக்கப்படுகின்றது. இது அரிதாக கிடைப்பது இல்லை.

இந்த மூங்கில் அரிசி ஆனது பச்சை நிறத்தில் இருக்கும் மூங்கில் அரிசியின் சுவையானது கோதுமையின் சுவையினை போன்று இருக்கும். மேலும் இது சிறிது காரமான வாசனையுடன் இருக்கும். இந்த அரிசி பச்சையம் அதிகம் இல்லாததாகும்.

moongil arisi benefits in tamil

மூங்கில் அரிசியில் உள்ள சத்துக்கள்

  • கால்சியம் 5 மில்லி கிராம்
  • இரும்புச்சத்து 9.2மில்லி கிராம்
  • பாஸ்பரஸ் 18 மில்லி கிராம்
  • நிக்கோடினிக் அமிலம் 0.03 மில்லி கிராம்
  • வைட்டமின் பி10.1 மில்லி கிராம்
  • கரோட்டின் 12 மில்லி கிராம்
  • ரைபோ பிளவின் 36.3 கிராம்

பெண்கள் கருவுறுதல்

இந்த மூங்கில் விதைகளை முதன் முதலில் பெண் எலிகளுக்கு கொடுக்கப்பட்ட போது அந்த எலிகளானது கிட்டத்தட்ட 800 குட்டிகளை ஈன்று எடுத்தது.

இந்த மூங்கில் விதைகளில் இருந்து எடுக்க பட்ட மூங்கில் என்னை பாலியல் ரீதியாக சிறப்பாக செயல்படுகின்றது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்த மூங்கில் அரிசிகளை கொண்டு தயாரிக்கப்படக்கூடிய மூங்கில் எண்னெய் குரோமோசோமில் மாற்றத்தினை ஏற்படுத்தி கருவுறுதலை மேம்படுத்துகின்றது என்று தெரியவந்துள்ளது.

கருவுறாமல் இருக்கக்கூடிய பெண்கள் மூங்கில் எண்ணெய் கொண்டு சமைக்கும் பொழுது உடலில் உள்ள நாளமில்லா மற்றும் வளர்ச்சிதை மாற்றக் கோளாறுகளை குணப்படுத்துகிறது.

ரத்த அழுத்தம்

அதிக அளவில் உள்ள கொலஸ்ட்ராலானது ரத்த அழுத்தத்திற்கு மிக முக்கிய காரணமாகும். மூங்கில் அரிசி இல் உள்ள நார்ச்சத்தானது கொழுப்பினை அளவினை குறைப்பதற்கு பெருமை புரிகிறது.

மேலும் இது தமனிகளின் தடிப்பினை குறைக்க மற்றும் ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த உதவுகிறது.

moongil arisi health benefits

மனநிலை ஆரோக்கியம்

மூங்கில் அரிசியிணை உணவாக பயன்படுத்தி வருவதன் மூலமாக மனநிலை பிரச்சனைகள் இருந்து விடுபடலாம்.

இதிலிருந்து தயாரிக்கப்படக் கூடிய பிரவுன் ரைஸ் ஆனது மனநிலை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

சிரோட்டோனின் மற்றும் டோபமைன் ஆகிய இரண்டும் முக்கிய நரம்பு மண்டலத்தினை மற்றும் மூலையின் செயல்பாட்டினை மேம்படுத்துகின்றது. ஆகவே நமது மனநிலையினை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பேருதவி புரிகிறது.

எலும்புகளின் ஆரோக்கியம்

நமது உடலில் எலும்பானது ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். நமது உடலில் ஏற்படக்கூடிய வீக்கம், முடக்குவாதம் போன்ற நோய்கள் முக்கிய காரணமாகும்.

உடலில் உள்ள மூட்டுகள் மற்றும் எலும்புகளை பாதிக்க கூடிய ஒரு நோயாகும். இந்த மூங்கில் அரிசியில் ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் இது போன்ற சேர்மங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

இவை ஆக்சிஜனேற்ற பண்புகளும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. ஆகவே இது மூட்டு வலி, முடக்குவாதம், முதுகு வலி இதுபோன்ற நோய்களினை கட்டுப்படுத்த உதவுகின்றது.

moongil arisi health benefits

பற்கள் ஆரோக்கியம்

இந்த மூங்கில் அரிசியில் வைட்டமின் பி6 ஆனது அதிக அளவில் உள்ளது. பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய சிதைவு, பற்குலி, பல் சொத்தை மற்றும் பல் துவாரங்கள் ஆகியவற்றை ஏற்படாமல் தடுக்கின்றது.

இந்த வைட்டமின் பி6 ஆனது பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், வலுவாக இருக்கவும் உதவுகிறது.

புரதச்சத்து

மூங்கில் அரிசியில் இருக்கக்கூடிய அமினோ அமிலங்கள் கல்லீரல் கொழுப்பு, அதிக அளவில் முடி வளர்ச்சி போன்ற ஊட்டச்சத்து தொடர்புடைய கோளாறுகள் அனைத்தையும் சரி செய்ய உதவுகின்றது.

செரிமான பிரச்சனை

மூங்கில் அரிசியில் உள்ள நார்ச்சத்தானது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகிறது. குடலின் இயக்கத்தினை ஊக்குவித்து மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏதும் வராமல் தடுக்கின்றது. செரிமான மண்டலம் சீராக செயல்பட்டாலே போதும் உடல் நலமானது ஆரோக்கியமாக இருக்கும்.

மூங்கில் அரிசி தீமைகள்

உடல்நல குறைபாடுகள் இருப்பவர்கள் மூங்கில் அரிசியினை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

மூங்கில் அரிசியினை கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும்.அவ்வாறு சாப்பிடுவதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிட வேண்டும்.

தைராய்டு கட்டி உள்ளவர்கள் மூங்கில் அரிசி சாப்பிடக்கூடாது. தைராய்டு மருந்துகளை சாப்பிட்டு கொண்டு இருப்பவர்களும் மூங்கில் அரசியை தவிர்க்க வேண்டும்.

மூங்கில் அரிசினை எவ்வாறு சமைக்க வேண்டும்?

தேவையான பொருட்கள் மூங்கில் அரிசி ஆனது ஒரு கப், பாசிப்பருப்பு கால் கப், பிரியாணி இலை 4, பூண்டு 4, பல் பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப கருவேப்பிலை மற்றும் புதினா, கொத்தமல்லி, சிறிய வெங்காயம் 10, தேவைக்கேற்ப உப்பு, சிறிதளவு முந்திரிப் பருப்பு, இரண்டு ஏலக்காய், தேங்காய் பால் ஒரு கப்.

செய்முறை

மூங்கில் அரிசி மற்றும் பாசிப்பருப்பினை ஒரு வாணலில் நன்றாக பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும்.

பின்னர் அதனை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். இதனை ஒரு மண் பாத்திரத்தில் தேங்காய் பாலினைத் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் போட்டு நீரில் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பினை சேர்த்து தேவையான அளவு நீருடன் கஞ்சியாக காய்த்துக்கொள்ளவும்.

பின்னர் காய்த்து வைத்த கஞ்சியினை இறக்கி அதில் தேங்காய் பாலினை சேர்த்து குடிக்கலாம்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கண்டிப்பாக படிக்கவும்

Related Posts

2 Comments

  1. Pingback: link do aplicativo

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning