தைராய்டு குணமாக எளிய வழிகள் | Thyroid Symptoms in Tamil
இன்றைக்கு அதிகமாகி வரும் உடல்நலப் பிரச்சனைகளில் தைராய்டு குறைபாடு என்பது அவர்களுடைய இயல்பு வாழ்க்கையை பாதிக்கக்கூடிய பிரச்சனையாக உள்ளது.
இது அனைத்து வயதினரையும் பாதிக்கும் என்றாலும் குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கிறது. அந்த வகையில் இங்கே தைராய்டு குறைபாடு என்றால் என்ன? எதனால் வருகிறது? இதன் அறிகுறி என்ன? ஒரு தைராய்டு குறைபாடு இருந்தால் என்ன உணவுகள் சாப்பிட வேண்டும்? எந்த உணவுகளை சாப்பிடக் கூடாது? இந்த தைராய்டு சுரப்பி ஏன் முக்கியம்? என்பது பற்றி பார்ப்போம்.
தைராய்டு
தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்ப்பகுதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இது தைராக்ஸின் என்ற ஹார்மோனை சுரக்கிறது.
இந்த ஹார்மோன் ரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு அனைத்து திசுக்களின் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக தைராய்டு பிரச்சனை என்றால் உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்குள்ளாகும். அதாவது இந்த தைராய்டு சுரப்பி குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி முழுமையான உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பின் உறுதி, தசையின் உறுதி, புத்தி கூர்மை என பலவற்றுக்கும் காரணமாக உள்ளது.
முக்கியமாக கார்போஹைட்ரேட் புரதம், கொழுப்பு போன்ற உணவு சத்துக்களின் வளர்சிதை மாற்றுப் பணிகளை ஊக்குவிப்பதும் புரத சத்தைப் பயன்படுத்தி உடல் வளர்ச்சியைத் தூண்டுவதும் சிறுகுடலில் உள்ள, உணவில் இருந்து குளுக்கோஸ்ஐ பிரித்து ரத்தத்தில் கலப்பதும் இரத்த கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதற்கு thyroid சுரப்பி தேவை.
தைய்ராடு வகைகள்
இந்த குறைபாடு, இரண்டு வகைப்படும். ஒன்று, தைராய்டிசம். இது தைராய்டு சுரப்பி, போதுமான அளவு தைராய்டு ஹார்மோன்களை சுரக்காமல் இருக்கும் நிலை.
தைய்ராடு அறிகுறி
ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருக்கும். செயல்கள் மந்தமாகும். சாதாரண குளிரைக் கூட தாங்க முடியாது. முகம் வீங்கும்.
முடி கொட்டும், தோல் வறண்டு போகும், பசி இருக்காது,, ஆனால், உடல் எடை அதிகரிக்கும்.
ஞாபக மறதி, அதிக தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்சனை,மூட்டு வலி, இப்படி பல பிரச்சனைகள் ஏற்படும்.
ஹைப்பர் தைராய்டிசம் அறிகுறி
இது உடலின் தேவையை விட அதிக தைராய்டு ஹார்மோன் சுரக்கும் நிலை. இந்த நிலையில் தைராய்டு சுரப்பி மாறாக வீக்கம் அடைந்து, அதிகமாக பணி செய்வதால் தைராய்டு சுரப்பு, பல மடங்கு அதிகரித்துவிடும்.
இந்த நிலையின் பொழுது அதிகமாக பசிக்கும். அடிக்கடி, உணவு சாப்பிடுவார்கள். ஆனாலும் உடல் மெலியும், அடிக்கடி, மலம் மற்றும் சிறுநீர் வெளியேறும்.
பொதுவாக இந்த தைராய்டு குறைபாடு எதனால் ஏற்படுகிறது? என்றால் உணவில் சத்து குறைபாடு மன அழுத்தம் பரம்பரை பரம்பரையாக வருவது, போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வது ஹார்மோன் மாற்றங்கள், தொடர்ந்து மன உளைச்சலில் இருப்பது, தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்றவை, தைராய்டு பிரச்சனைக்கு, முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.
அதே போன்று இந்த குறைபாடு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது என்றும் அறியப்பட்டுள்ளது.
இன்னும் சொல்லப் போனால் பிறக்கும் குழந்தை முதல், இளம் வயதினர், நடுத்தர வயதினர் என்று, பெண்களில் பலரையும் பாதிக்கும் பிரச்சனையாக உள்ளது.
இதை ஆரம்ப நிலையிலேயே கவனித்து சிகிச்சை பெற்றுக் கொண்டால் அறிவாற்றல் குறைபாடு, மலட்டுத் தன்மை போன்ற பல சிக்கல்களைத் தவிர்க்கும் முடியும்.
அடுத்து இந்த குறைபாடு ஏற்பட்டால் உணவுமுறை, எப்படி இருக்க வேண்டும்? அதாவது எந்த உணவுகளை சாப்பிட வேண்டும்? எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்? என்பதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
முதலில், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதே போன்று, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்
தினமும் ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிக்க வேண்டும். இதனால் மூன்றில் ஒரு பங்கு அயோடின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
செலீனியம்
செலீனியம் குறைபாடும் தைராய்டு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே செலீனியம் அதிகம் உள்ள காளானை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
செலீனியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று.
முட்டை
ஒரு முட்டையில் பதினாறு சதவீதம் அயோடின்னும் இருபது சதவீதம் செலினியமும் உள்ளதால் தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது.
மேலும் இதிலுள்ள வைட்டமின் டி , எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். அதே போன்று இதில் இருக்கும் lசத்துக்கள் கண் நோய்கள் மற்றும் கண்புரை ஏற்படாமல் தடுக்கும்.
மேலும் அதிக தரமான மட்டுமல்ல கால்சியம் மற்றும் இரும்பு சத்தும் இருப்பதால் தைராய்டு பாதிப்பிலிருந்து விடுபட தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டியது அவசியம்.
தானியங்கள்
தானியங்களில், ஓட்ஸ், பார்லி மற்றும் பழுப்பு அரிசி இவற்றில் வைட்டமின் பி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால் அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி உடலுக்கு தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்க உதவும்.
அதே போன்று தயிரில் இருந்து தயாரிக்கப்படும் யோ கார்ட் அதிக அயோடின் சத்துள்ள உணவாகும்.
கடல் சார்ந்த உணவு
கடல் சார்ந்த உணவு வகைகளில், அயோடின் சத்து அதிகம் என்பதால் மீன், நண்டு போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.
அதிலும், மத்தி மீன், சால்மான் போன்ற மீன்களில், விட்டமின் டி மற்றும் ஒமேகா ஒமேகா மூன்று ஆன்டிஆக்ஸிடென்டு போன்ற சத்துக்களும் வளமாக உள்ளது.
முக்கியமாக சமையலுக்கு சாதாரண உப்பை பயன்படுத்துவதை விட, அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவது நல்லது.
அதே போன்று தேங்காய் எண்ணெயில் சமைத்து உணவை சாப்பிடுவது நல்லது.
இஞ்சி
இஞ்சி டீ தயாரித்து அதில் தேன் கலந்து குடிப்பதால் தொண்டைக்கு இதமளிப்பதோடு இஞ்சியில் உள்ள பொட்டாசியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் தைராய்டு பிரச்சனைய குறைக்கிறது.
பச்சை கொத்தமல்லி சட்னியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் செரிமான அமைப்பு சிறப்பாக இயங்குவதோடு தைராய்டு பிரச்சனையும் இருக்காது.
முக்கியமாக யோகாவில் பிராணாயாமம் செய்து வருவது நல்லது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
தவிர்க்க வேண்டிய உணவுகள் என்று பார்த்தால் முதலில் துரித உணவுகள். இந்த உணவுகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இருப்பதால் தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் அவற்றை சிறிது சாப்பிட்டாலும் அது தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதே போன்று பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு சோடியம் சேர்க்கப்பட்டிருப்பதால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் அயோடின் அளவையும் குறைத்துவிடும்.
மேலும் பேக்கரி உணவுகளை தவிர்ப்பதும் நல்லது. முக்கியமா , வெள்ளை உப்பை அதிகம் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
சோளம், ஆளி விதை, சர்க்கரை வெள்ளிக்கிழங்கு இவற்றில் சல்பர் அதிகம் உள்ளதால் இந்த உணவுகள் தைராய்டு சுரப்பியால் அயோடின்னை உறிஞ்ச முடியாமல் செய்கிறது. எனவே இவற்றை தவிர்ப்பதும் நல்லது.
ஹார்மோன்களில், ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குவதுதான் இவற்றையும் தவிர்க்க வேண்டும்.
மேலும் மைதாவில் தயார் செய்யப்பட்ட உணவுகள், காபி, டீ, சிக்கன், ஆட்டிறைச்சி, அதிக மிளகாய், மசாலா சேர்த்த உணவு, அதிக புளிப்பு நிறைந்த உணவு இவற்றை அதிகம் சாப்பிடுவதாய் , குறைத்துக்கொள்ள வேண்டும்.
எனவே, தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் இங்கே சொன்னவற்றை கடைபிடித்து வந்தால் விரைவில் தைராய்டு குறைபாடு நீங்கி இயல்பு வாழ்க்கைய வாழ முடியும்.
இதனையும் படிக்கலாமே
- கிராம்பு பயன்கள் | Kirambu Benefits in Tamil
- கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil
- துவரம் பருப்பு பயன்கள் | Thuvaram Paruppu in Tamil
- மூக்கிரட்டை கீரை பயன்கள் | Mookirattai Keerai Benefits in tamil
- விளாம்பழம் மருத்துவ குணங்கள் | Vilampazham Fruit Benefits
- பூந்திக்கொட்டை பயன்கள் | Boondi Kottai Uses in Tamil
- ஆளி விதை பயன்கள் | Ali Vithai Benefits in Tamil
- பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாகா படிக்கவும்.
12 Comments
Comments are closed.