ஏலக்காய் மருத்துவ பயன்கள் | Elakkai in Tamil
சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்படுத்தி வரும், ஒரு அற்புதமான மூலிகை இந்த ஏலக்காய்.
ஏலக்காய் ஒரு சிறந்த வாசனை பொருள் மட்டும் இல்லாமல் நம் உடல் நலத்திற்கு, எண்ணற்ற நன்மைகளை தரக்கூடியதாகவும் இருக்கிறது.
சித்த மருத்துவத்தில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த ஏலக்காய்.
சிறிய அளவிலான இந்த ஏலக்காயில் சிறிதளவு புரதம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் ,இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின் ஏ, பி, சி போன்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது.
இவ்வளவு சத்துக்கள் கொண்ட ஏலக்காயை, வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர, ஏராளமான நோய்கள் குணமாகும்.
ஜீரண கோளாறுகள்
பசியே இல்லை, சாப்பிட பிடிக்கலை, என்று கூறுபவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை, வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
ஜீரண உறுப்புகளின், பலம் அதிகரிக்கும். மேலும் ஜீரண உறுப்புகளை துரிதப்படுத்தி, ஜீரண நீரை சுரக்கச் செய்யும் இந்த ஏலக்காய்.
இதன் மூலமாக, நன்கு பசி செய்யும்.
வயிறு உப்புசம், வயிற்று வலி, வயிற்று பொருமல் போன்ற பிரச்சனையால் அவதிப்படுறவங்க தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர இந்த பிரச்சனைகள் குணமாகும்.
நெஞ்சு சளி
அதிக மார்புச் சளியின் காரணமாக, மூச்சு விடுவதில் சிரமம், மற்றும் அதிகஇருமலினாலும் அவதிப்படுபவர்கள் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வர நெஞ்சில் உள்ள சளி கரைந்து வெளியேறும்.
மேலும் நெஞ்சு சளியை உருவாக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராடி அழிக்கக் கூடியது இந்த ஏலக்காய்.
எனவே அதிக நெஞ்சு சளியினால் அவதிப்படுறவங்க, இந்த ஏலக்காயை மென்று சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
வாய் துர்நாற்றம்
ஜீரண உறுப்புகளில் ஏதேனும் கோளாறுகள் இருப்பதன் விளைவாகத்தான் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
வாய் துர்நாற்றத்தினால் அவதிப்படுறவங்க, தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வர, வாய் துர்நாற்றம் நீங்கும் மற்றும் வாயில் நல்ல மனத்தையும் கொடுக்கக் கூடியது, இந்த ஏலக்காய்.
உடல் நச்சு
நமக்கு அடிக்கடி நோய்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால் நம் உடலில் தேங்கி இருக்கக் கூடிய நச்சு கழிவுகள் தான்.
இந்த தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றக் கூடியது இந்த ஏலக்காய். தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வர, உடல்ல இருக்கக்கூடிய நச்சு கழிவுகள் நீக்கும்.
மேலும் உடல் புத்துணர்ச்சி பெறும்.
வாய் ஆரோக்கியம்
வாய்ப்புண், பற்சொத்தை, பல்வலி, பல் ஈறுகளில் வீக்கம் போன்ற பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் ஒரு ஏலக்காயை உமிழ்நீருடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வர வாய்ப்புண், பல்வலி போன்றவை குணமாகும்.
பற்சொத்தை உண்டாக்கக்கூடிய கிருமிகளையும் அழிக்கக்கூடியது இந்த ஏலக்காய்.
தலைசுற்றல்
நிறைய பேர் பார்த்தீங்கன்னா, வாகனங்கள்ல பயணம் செய்யும்போது, அல்லது வெயிலில் போகும்போதோ தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனையினால அவதிப்படுவார்கள்.
இதுபோன்ற பிரச்சனையினால அவதிப்படுவார்கள், ஒருஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டே பயணம் செய்ய வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.
ஆஸ்துமா
ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் நல்லது இந்த ஏலக்காய். ஆஸ்துமா பிரச்சனையால், அவதிப்படுவார்கள் மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்வாங்கள்.
இது போன்ற, சிரமங்களிலிருந்து, எளிதில் விடுபட உதவக்கூடியது இந்த ஏலக்காய்.
இது போன்ற பிரச்சனையால அவதிப்படுவார்கள் தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வர சுவாசம் சீராக்கும் மற்றும் சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகளும் குணமாகும்.
இதனையும் படிக்கலாமே
- கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil
- சுண்டலின் நன்மைகள் |Benefits of Chives
- நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்(Opens in a new browser tab)
- சுண்டைக்காய் பற்றி இது வரை அறியாத மறுத்துவ பயன்களின் பட்டியல்(Opens in a new browser tab)
- திராட்சை ஏன் சாப்பிடவேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
- பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்(Opens in a new browser tab)
- கத்திரிக்காய் சாப்பிடுவார்களா நீங்கள் கட்டாயம் படியுங்கள்(Opens in a new browser tab)
- நிலக்கடலை பயன்கள் | Nilakadalai payangal in Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்
10 Comments
Comments are closed.