Milagu Benefits in tamil

Milagu Benefits in tamil

மிளகின் பயன்கள்

Milagu Benefits in tamil மிளகின் பயன்கள் பல வகையான உணவுப் பொருட்களும், மூலிகைகளும், நம்ம நாட்டில் விளைகிறது. அந்த வகையிலே, மிக மிக பழங்காலத்தில் உலகத்தில் உள்ள ஒன்று மிளகு. பல நாட்டில் இருந்து நம்ம நாட்டுக்கு வந்து வாங்கி சென்ற ஒரு அற்புதமான பொருள்தான் மிளகு. இந்த மிளகு சாப்பிடுவதானால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கு காண்போம்.

மிளகு தொற்றுநோயில் இருந்து காப்பாற்றுகிறது

மிளகு தொற்றுநோயில் இருந்து காப்பாற்றுகிறது

மிளகில் கார சத்து அதிக அளவில் உளள்து. இந்த காரத்தன்மை உடலில் உள்ள கிருமிகளை கொள்கிறது. தொற்று நோய்கள், காய்ச்சல் போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கவல்லது. சிகரெட், பீடி மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்கள் உடலுக்கு கெடுதல் தரவல்லது. இதை பயன்படுத்தும் நேரத்தில் , சில மிளகுகளை வாயில போட்டு மென்று சாப்பிட்டு வரும் அந்த பழக்கம் குறையும்.

மிளகு விஷத்தன்மையினை முறிக்கிறது

நம் அன்றாட பழக்கத்துல உள்ள உணவுகளில் விஷத்தன்மை அதிக அளவில் உள்ளது. இதையெல்லாம் சாப்பிடுவதனால், சில ஆண்களுக்கு, மலட்டுத்தன்மை ஏற்படுது. மிளகு, தினந்தோறும் உணவுல சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆண்களுடைய மலட்டுத்தன்மையும் நீங்கும்.

மிளகு வாயு கோளாறுகளை குணப்படுத்துகிறது

வாதத்தன்மை, அதிகம் கொண்ட உணவுகளை உண்பதனால் வாயுத் தன்மை அதிகமாகிறது. சிலருக்கு வாயு கோளாறு ஏற்படுது. மிளகை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பதன் மூலம் வாயு கோளாறுகள் நீங்கும்.

மிளகு புற்றுநோயில் இருந்து காப்பாற்றுகிறது

நார்ச்சத்து இல்லாத உணவுகளையும், மாமிசங்களையும் அதிக அளவில் நாம் உண்கிறோம். இதனால் வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சில கருத்துக்கள் உள்ளது . நம் சாப்பிடுற உணவில் மிளகு அடிக்கடி சேர்த்துக்கொண்டால் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

மிளகு சளி இருமல் அருமருந்தாக உள்ளது

மிளகு சளி இருமல் அருமருந்தாக உள்ளது

Milagu Benefits in tamil

மழை மற்றும் குளிர் காலங்களில் பலருக்கு ஜலதோஷம் மற்றும் சளி, இருமல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் பலரும் அவதிப்படுகின்றனர். இந்த மாதிரியான காலங்கலில் சில மிளகினை வாயில் போட்டு நன்கு மென்று வரவும். சிறிது வெந்நீரை குடிக்கும் போது, அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம். நம் உணவை நன்றாக மென்று உண்பதன் மூலம் நமக்கு பற்கள் வலுவாகவும் , ஆரோக்கியமாயாவும் இருக்கும்.

மிளகு வாயில் ஏர்படும் பிரச்சினைகளுக்கு மருந்தாக உள்ளது

Milagu Benefits in tamil

வாயில் நிறைய பேருக்கு, ஈறுகள்ல, வீக்கம், பல் சொத்தை போன்ற பிரச்சனைகள் இருக்கும். இதனை தடுக்க, மிளகுசிறந்த மருந்தாக திகழ்கிறது . மேலும் வாயில் கிருமிகள் உற்பத்தியாகாமலும் தடுக்கிறது.

மிளகு பொடுகில் இருந்து விடைபெற பயன்படுகிறது

Milagu Benefits in tamil

கொழுப்பு நிறைந்த உணவுகளை, அதிகமா சாப்பிடுவதனால், நம் உடலுடைய தன்மையாலயும், சிலருக்கு தலையில் பொடுகு தொந்தரவு ஏற்படுகிறது. தினந்தோறும், சில மிளகுகளை, மென்று சாப்பிட்டு வருவதனால் பொடுகுத் தொல்லை கூட நீக்கும்.

மிளகு உடல் உபாதைகளை குறைக்கிறது

வயது ஆக ஆக தோல் சுருக்கங்கள் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு, தோலுடைய சில பகுதிகள்ல, நிறம் மாற்றம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைய போக்க, சில மிளகுகளை, தினமும் சாப்பிட்டு வர, இந்த பிரச்சனையில இருந்து விடுபடலாம்.

நாற்பது வயசு நிறைந்த எல்லாருக்கும், ரத்த அழுத்த ஏற்படுவதும் இயற்கையானது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில வைத்துக்கொள்ள வேண்டும். எனவே தினமும் சில மிளகுகளை மென்று சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும், மிளகினை உணவில் சேர்த்து உண்பதன் மூலம் பல நன்மைகள் உள்ளது.

மிளகு பற்றிய காணொளியினை காண கீலே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்

Play Video

மிளகு பற்றிஆங்கிலத்தில் படிக்க கீலே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்

English Blog

நமது வலைபதிப்பில் தினம் தினம் ஒரு சித்த மருத்துவம் சார்ந்த பதிவு பதிவிடபடுகிறது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் வினாக்கள் இருந்தால் contact us இல் பதிவிடவும். இதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Contuct Us