புரோட்டீன் உணவுகள் பட்டியல் | Protein Rich Food in Tamil
புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கும் தசை வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமான சத்தாகும். இந்த புரதச்சத்து தான் உடலின் பில்டிங் பாக்ஸ் என்று கூறுகிறார்கள்.
ஒவ்வொரு செல்களின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது புரதச்சத்து தான்.
குறிப்பாக வளரக்கூடிய குழந்தைகளுக்கும், மெலிந்த தேகம் உடையவர்களுக்கும் உடல்நிலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இது மிகவும் அவசியமான சத்து ஆகும்.
உடலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த புரதச்சத்தினை நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் புரதச்சத்து உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வரும் பொழுது மிக எளிதாக பெற முடியும்.
இந்த புரதச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடும் பொழுது அது தசை வளர்ச்சிக்கும், உடல் வலிமைக்கும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.
முட்டை
புரதச்சத்து மிகுந்த உணவுகளில் முதன்மையானது முட்டை. 100 கிராம் முட்டையில் 13 கிராம் புரதம் அடங்கியுள்ளது.
இது தவிர உடலின் வளர்ச்சிக்கு தேவையான விட்டமின்கள் அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
ஆகவே உடலினை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் தினசரி இரண்டிலிருந்து மூன்று முட்டையாவது சாப்பிட்டு வர வேண்டும்.
கோழி இறைச்சி
100 கிராம் கோழி இறைச்சியில் 27 கிராம் புரதச்சத்தானது அடங்கியுள்ளது. ஆகவே உடலின் தசைகளினை விரைவில் வலுவாக்க செய்ய நினைப்பவர்கள் தினசரி கோழி இறைச்சியினை சாப்பிட்டு வர வேண்டும்.
சோயா பீன்ஸ்
அசைவ உணவுகளுக்கு இணையான புரதச்சத்து நிறைந்த உணவு என்று பார்த்தால் அது சோயா பீன்ஸ் தான். 100 கிராம் சோயா பீன்ஸில் 28 கிராம் புரதச்சத்தானது அடங்கியுள்ளது.
ஆகவே இந்த சோயா பீன்ஸ் வேகவைத்தோ அல்லது ஏதேனும் ஒரு முறையில் ரெசிபி போன்ற செய்து சாப்பிட்டு வரலாம்.
மேலும் சோயா சார்ந்த உணவுகளான சோயாச்சி, சோயா மில்க் இது போன்ற உணவுகளையும் சாப்பிட்டு வரலாம். இதிலும் அதிக அளவு புரதச்சத்து அடங்கியுள்ளது.
பயிறு வகைகள்
பயிறு வகைகளில் பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிக அளவு புரதச்சத்து அடங்கியுள்ளது. 100 கிராம் பயிரில் 24 கிராம் புரதச்சத்து அடங்கியுள்ளது.
ஆகவே இந்த பச்சை பயிறு மற்றும் கொண்டைக்கடலையினை முளைக்கட்டி வைத்து சாப்பிடலாம்.
இந்த முளைக்கட்டி வைக்கப்பட்ட பயிரில் அதிக அளவு புரதச்சத்து அடங்கியுள்ளது. அதாவது இரண்டு மடங்காக புரதச்சத்தானது பெருகும்.
ஆகவே உடல் எடையினை விரைவில் அதிகரிக்க நினைப்பவர்கள் மற்றும் தசையினை வலுவாக மாற்ற நினைப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆகவே இந்த பச்சை பயிறு மற்றும் கொண்டைக்கடலையை முளைகட்டி வைத்து சாப்பிட்டு வரலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது.
பால்
பாலில் புரதச்சத்து மட்டுமில்லாமல் கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது.
பாலானது தசைகளின் வளர்ச்சிக்கு மட்டுமில்லாமல் எலும்புகளின் உறுதிக்கும் உதவியாக இருக்கும்.
எனவே உடற்பயிற்சி செய்பவர்கள் காலை மாலை என இருவேளைகளிலும் ஒரு டம்ளர் பால் குடித்து வரும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது வேகமாக உடல் வளர்ச்சி அடைவதற்கும் மட்டுமில்லாமல் எலும்பு உறுதியாக இருப்பதற்கும் உதவியாக இருக்கும்.
பன்னீர்
சைவ உணவுகளில் இறைச்சிக்கு நிகராக பார்க்கக்கூடிய ஓர் உணவு என்னவென்றால் பன்னீர் தான். 100 கிராம் தண்ணீரில் 18 கிராம் புரதச்சத்தானது அடங்கியுள்ளது.
சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாகும். உடல் எடையினை அதிகரிக்க நினைப்பவர்கள் இந்த பன்னீரினை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். இது உடல் வளர்ச்சி அடைவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
நட்ஸ் வகைகள்
நட்ஸ் வகைகளில் பாதாம் மற்றும் வேர்க்கடலை இவை இரண்டும் புரதச்சத்து மட்டுமில்லாமல் அதிக அளவிலான ஜிங்க் சத்துகளும் அடங்கியுள்ளன.
இந்த ஜிங்க் சத்தானது ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த நட்ஸ் வகைகளை ஆண்கள் சாப்பிட்டு வரும் பொழுது உடலானது நல்ல கட்டுக்கோப்பாகவும், வலுவாகவும் இருக்கும். ஆகவே தினசரி ஒரு கையளவு பாதாம் அல்லது பீனட் சாப்பிட்டு வருவதன் மூலமாக உடல் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கும்.
இதனையும் படிக்கலாமே
- வாந்தி நிற்க பாட்டி வைத்தியம் | How To Stop Vomiting in Tamil
- பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும் | How to Reduce Pitham in Tamil
- கை கால் மூட்டு வலி நீங்க | Mootu Vali Maruthuvam in Tamil
- கோதுமை பயன்கள் தமிழ் | Godhumai Benefits in Tamil
- ஊமத்தங்காய் பயன்கள் | Umathai benefits in tamil
- ஜாதிக்காய் பொடி பயன்கள் | Jathikai Benefits in Tamil Language
- மன அழுத்தம் நோயின் அறிகுறிகள் | How to Reduce Stress in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்
1 Comment
Comments are closed.