வெங்காயத்தாள் பயன்கள் | Vengaya Thal Benefits in Tamil

வெங்காயத்தாள் பயன்கள் | Vengaya Thal Benefits in Tamil

வெங்காயத்தாலும் ஒரு கீரை வகையை சேர்ந்தது தான். இந்த வெங்காயத்தால் நம்ம எல்லாருமே சாப்பிட்டிருப்போம். ஆனால் நிறைய பேருக்கு இதன் பயன்களும், இதன் மருத்துவ குணங்களும் தெரியாது.

கண் நோய், மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வெங்காயத்தால் மிகச்சிறந்த மருந்து.

வெங்காயத்தாளில் கந்தக சத்து மிக அதிக  அளவில் உள்ளது. வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் பி2 போன்ற சத்துக்கள், நிறையவே அடங்கியுள்ளது.

செம்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகிய சத்துக்களும் இந்த வெங்காயத்தாளில் நிறையவே உள்ளது. இதில் உள்ள பெக்டின் என்ற சத்து பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய்களை வரவிடாமல் தடுக்கும் வல்லமை கொண்டது.

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு நல்ல மருந்தாக செயல்படும் சக்தி இந்த வெங்காயத்தாளுக்கு நிறையவே உள்ளது.

உடல் சூடு, மூலக்கடுப்பு, ரத்தமூலம், பித்த நோய்கள், நாக்கில் ஏற்படும் புண்கள், தீராத தாகம், வயிற்றுக்கடுப்பு, மந்தம், ஜன்னி, காசநோய், வயிறு உப்புசம், உடம்பில் உண்டாகும் தடுப்புகள், நமைச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு வெங்காயத்தால் நல்ல மருந்து.

உஷ்ணத்தன்மையால் ஏற்படும் உடல் பருமனை குறைப்பதில் வெங்காயத்தால் முன்னோடியாக உள்ளது. சிறுநீரக கோளாறுகள் மாதவிலக்கு கோளாறுகள் குடல் புண்கள் போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதிலேயும் வெங்காயத்தால் முன்னோடியாக உள்ளது.

pring onion in tamil

தைராய்டு

தைராய்டு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் வெங்காயத்தாளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது மிக மிக நல்லது.

தீராத தாகம்

வெங்காயத்தாளுடன் சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து கசாயம் செய்து சாப்பிட்டால் தீராத தாகம் தீர்ந்து போகும்.

உடல் உஷ்ணம்

வெங்காயத்தாளை அரைத்து அதில் வெந்தயத்தை ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து தினமும் ஒரு தேக்கரண்டி அளவில், சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

வெங்காயத்தால் பொடுதலைக் கீரை வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் உஷ்ணத்தால் ஏற்படும் கட்டிகளும், புண்களும் குணமாகும்.

vengaya thal in tamil

ஆண், பெண்

வெங்காயத்தால் ஓரிதழ் தாமரை இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து, அரைத்து சாப்பிட்டு வந்தால், ஆண், பெண் உணர்வுகள் அதிகரிக்கும்ங்க.

பசியுணர்வு

வெங்காயத்தாலுடன் சிறிது இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல பசி உண்டாகும்.

நீர் எரிச்சல்

வெங்காயத்தாளுடன் ஒரு தேக்கரண்டி பார்லியை பொடியாக்கி போட்டு கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் மற்றும் நீர் அடைப்பு நீங்கி, சிறுநீர் நன்றாக பிரியும்.

pring onion benefits in tamil

பெண்கள் ஆரோக்கியம்

வெங்காயத்தாளை அரைத்து, அதில் கருப்பு எள் மற்றும் கருஞ்சீரகம் இரண்டையும் சம அளவு கலந்து நன்கு காய வைத்து பொடியாக்கி பெண்களுக்கு மாதவிலக்கு வராத பிரச்சனைகள் ஏற்படும் போது ஒரு தேக்கரண்டி அளவு காலை மாலை இரு வேளையும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் பிரச்சனை தீரும். ஆனால் இதை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாதுங்க.

சளி, இருமல்

வெங்காயத்தாளை அரைத்து அதில் திப்பிலியை கலந்து, காய வைத்து பொடியாக்கி தினமும் ஒரு கிராம் அளவில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், நாள்பட்ட ஆஸ்துமா போன்றவை குணமாகும்.

Vengaya Thal Benefits in Tamil

புண்கள்

வெங்காயத்தால் மற்றும் துத்தி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடற்புண் மற்றும் வாய்ப்புண் போன்ற புண்கள் சீக்கிரமே குணமாயிடும்.

இவ்வளவு நன்மைகளும் மருத்துவ குணங்களும் நிறைந்த இந்த வெங்காயத்தாளை நாமும் உணவோடு சேர்த்து பயன்பெறுவோம்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைத்தளத்தின்  Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning