கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு | Eye Health Tips in Tamil

கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு | Eye Health Tips in Tamil

இன்றைக்கு பள்ளி பருவத்திலிருந்தே கண்ணாடி அணியும் நிலை அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சத்து குறைபாடும் ஒரு காரணமாகும்.

அதாவது வைட்டமின் ஏ சத்து குறைந்தால் கண் தொடர்பான பாதிப்புகள் உருவாகும். இப்படி தொடர்ந்து வைட்டமின் ஏ பற்றாக்குறை நீடித்தால் நாளடைவில் முழு பார்வை விழுந்து விடும் நிலை ஏற்படும்.

இங்கே கண் பார்வையை அதிகரிக்கும் சத்துக்கள் நிறைந்த சில உணவுகள் மற்றும் கண் பார்வைத் திறனை மேம்படுத்தும் ஒரு பயிற்சி பற்றியும் பார்க்கப் போகிறோம்.

இங்கே சொல்வதை கண் பார்வை பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே கடைபிடித்தால் கண்ணாடி அணியும் நிலை வராது. மேலும் கண்ணாடி அணிபவர்கள் கூட மீண்டும் கண்ணாடி அணியாத நிலையை பெற முடியும்.

கண் பார்வை மிகவும் அவசியம். எனவே, காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, வைட்டமின் இ, இரும்பு மற்றும் கால்சியம் சத்துகள் உள்ள உணவுப் பொருட்கள அதிகமாக சாப்பிட வேண்டும்.

இவை கண்களை பாதுகாத்து பார்வைத் திறனை அதிகரிக்கும். முக்கியமாக வைட்டமின் ஏ இல் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது.

கண்ணுக்கு நல்ல காய்

கேரட்

வைட்டமின் ஏ அதிகம் உள்ள கேரட் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்டுகளான, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி , உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு குறிப்பாக கண்களை பாதுகாக்கிறது.

எனவே,கேரட் பச்சையாகவோ அல்லது ஜூஸ் போட்டோ அடிக்கடி சாப்பிடலாம்.

முருங்கை பூ

ஒரு அருமையான வீட்டு வைத்தியம் முருங்கை பூ பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை, மாலை என இரண்டு வேலையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும். இதனால் கண் பார்வை குறைபாடு, நீங்கும்.

சீரகம்,கொத்தமல்லி, வெல்லம்

சம அளவு சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம், ஆகிய மூன்றையும் நன்றாக இடித்து பொடியாக்கி, சலித்து வைத்துக்கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

eye power increase food in tamil

நல்லெண்ணெய் குளியல்

அதே போன்று வாரம் இரண்டு முறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையில் தெளிவு பெறச் செய்யும்.

பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் ஏ  அதிகம் உள்ளதால், இதை அடிக்கடி சாப்பிட்டால், கண் பார்வை அதிகரிக்கும்.

மீன்

கடல் மீன்களில் குறிப்பாக சல்மான் மீன்களில் வைட்டமின் ஏ அதிக அளவில் நிறைந்துள்ளது.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

சர்க்கரை வள்ளிக் கிழங்கு கிடைக்கும் காலங்களில் அதனை அவித்தோ அல்லது உணவில் சமைத்தோ சாப்பிட்டு வந்தால் இதிலுள்ள வைட்டமின் ஏ கண்பார்வையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

முட்டை

அதே போன்று, முட்டையில் அதிக அளவில் சிஸ்டின், சல்பர், லிசிடின், அமிலங்கள் இருப்பதோடு, வைட்டமின் பி இரண்டு  சத்தும் உள்ளது. இதனை அடிக்கடி சாப்பிட்டால் கண்புரை ஏற்படாமல் தடுக்கலாம்.

மேலும் முட்டையில் உள்ள மஞ்சள் கரு விழிப்புள்ளி சிதைவு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

கீரை வகைகள்

முக்கியமாக வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது நாம் உண்ணும் உணவில் கீரையை சேர்த்துக் கொண்டு வந்தால் ஏற்படும் கண் பார்வை கோளாறுகளை தடுக்கலாம்.

அதிலும் வைட்டமின் ஏ அதிகம் உள்ள அகத்திக்கீரை, பசலைக் கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, முளைக்கீரை, அரைக்கீரை, வெந்தயக்கீரை, கருவேப்பிலை போன்ற கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

மேலும், இதில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி பன்னிரண்டு ஆகிய சத்துக்கள் அடங்கி இருப்பதால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

வைட்டமின் ஏ உணவுகள்

வைட்டமின் ஏ அதிகம் உள்ள, அன்னாசி, கொய்யா, மஞ்சள், பரங்கிக்காய், நெல்லிக்காய், பால், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி போன்றவற்றை, உணவில் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு

பார்வைத் திறனை அதிகரிக்க பயிற்சி

இப்பொழுது பார்வைத் திறனை அதிகரிக்கும் எளிதாக செய்யக் கூடிய ஒரு பயிற்சி ஒன்றைப் பார்வை பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளையான சிவரை பார்த்து தலையை அசைக்காமல் திருப்பாமல் கண்களால் எட்டு போட வேண்டும்.

இப்படி ஐந்து முறை பயிற்சி செய்தாலே கிட்டப்பார்வை, தூரப்பார்வை பிரச்சனை கொஞ்சம், கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.

மேலும் இது போன்று தொடர்ந்து செய்து வந்தால் பார்வைத் திறனை மேம்படுத்தும். கண்ணாடி அணிய வேண்டிய அவசி இருக்காது.

முக்கிய குறிப்பு

பொதுவாக மொபைல், கணினி, டி.வி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும்.

மொபைல் மற்றும் கணினி வெளிச்சத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொடர்ந்து இருபது நிமிடங்களுக்கு மேல், இவற்றைப் பார்க்கக் கூடாது.

முக்கியமாக அடிக்கடி கண்களை சிமிட்டுவதால் கண்ணின் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். பார்வைத் திறன் மேம்படும்.

எனவே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த உணவுகளை தவிர்க்காமல் சாப்பிட்டு, இந்த பயிற்சியும் செய்து வந்தால் கண்பார்வை பிரச்சனையே வராது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயாமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning