பொன்னாங்கண்ணி கீரை பயன்கள் | Ponnanganni Keerai Benefits in Tamil

பொன்னாங்கண்ணி கீரை பயன்கள்  | Ponnanganni Keerai Benefits in Tamil

வாரத்துல குறைந்தது ஒரே ஒரு முறையாவது கீரைகளை உணவுல் சேர்த்துக்க வேண்டியது ரொம்ப அவசியம்.

ஒரு சிலர் இதை கடைபிடிக்கிறாங்க பலர் இதை கடைபிடிப்பது இல்லை. கீரை வகைகள்ல சிறந்தது அப்படின்னு சொல்றது பொன்னாங்க கீரை.

இது சாப்பிடுறதுனால, நம்ம உடம்புக்கு, என்னென்ன நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும் என்று பார்ப்போம்.

உடல் எடை

உடல் எடை குறைக்க பொன்னாங்கண்ணி கீரை உதவுது. இந்த கீரையோட மிளகு,உப்பு இதனை சேர்த்து சாப்பிட்டு வந்தோம் என்றால் உடல் எடையானது குறையும்.

பொன்னாங்கண்ணி கீரை உடல் எடையை அதிகரிக்கவும் உதவுது. அதற்க்கு துவரம் பருப்பு மற்றும் நெய் இதனுடன் பொன்னாங்கண்ணி கீரை சேர்த்து சாப்பிட்டு வந்தோம் என்றால் உடல் எடையானது அதிகரிக்கும். இது தான் இந்த கீரையின் தனி சிறப்பு.

பொன்னாங்கண்ணி கீரை பயன்கள்

உடல் வலிமை

பொன்னாங்கண்ணி கீரை தொடர்ந்து அடிக்கடி சாப்பிட்டு வந்தோம் என்றால் உடல் வலிமை பெரும். எலும்புகள் உறுதியாகும்.

பொன்னாங்கண்ணிக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தா வாய் துர்நாற்றம் காணாம போயிடும்.

இதயம் மற்றும், மூளை, புத்துணர்வு பெற்று, சுறுசுறுப்பாக செயல்படுறதுக்கு பொன்னாங்கண்ணிக் கீரையை வாரம் ஒரு நாளாவது வாங்கி சாப்பிட வேண்டியது அவசியம்.

மூலம்

மூலம் நோய் உள்ளவங்களுக்கு பொன்னாங்கண்ணி கீரை ரொம்ப நல்லது.மூலம் நோயை குணப்படுத்துற ஆற்றல் பொன்னாங்கண்ணி கீரையில் உள்ளது.

ponnanganni keerai benefits in tamil

கண் பார்வை

பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பகலில் கூட நட்சத்திரத்தினை பார்க்கலாம் என்று சொல்வாராகள். அந்த அளவுக்கு கண் பார்வை நன்றாக தெரியும்.

இரவு சரியா தூங்காத காரணத்தாலும், செல் போன், கணினி போன்ற மின்னணு சாதனங்களை அதிகம் பயன்படுத்துவதாலும் கண்கள் சிவந்து காணப்படும்.

இதனை சரிசெய்ய பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை நீங்கும்.

Ponnanganni Keerai Benefits

இரத்த சுத்தகரிப்பு

பொன்னாங்கண்ணிக்கீரையை நன்றாக தண்ணீரில் கழுவிட்டு சின்ன சின்னதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் இவை அனைத்தையும் சேர்த்து சேர்த்து வேக வைத்து சாப்பிட்டு வந்தோம் என்றால் நம் உடம்பில் உள்ள அசுத்த ரத்தம் சுத்தமாகும்.

சருமம்

பொன்னாங்கண்ணிக்கீரை தங்கம் போன்று சருமத்தை மாற்ற கூடிய ஆற்றல் கொண்டது. அதனால் பொன்னாங்கண்ணி இந்த கீரையை சாப்பிட்டால் அழகு மேம்படும்.

பொன்னாங்கண்ணி கீரை வளர்ப்பு

பொன்னாங்கண்ணிக்கீரையை வளர்ப்பது ரொம்ப கஷ்டம் ஒன்றும் இல்லை.

இந்த ஒரு கீரையோட தண்டுகளை கிள்ளி மண்ணில் ஊன்றி வைத்தாலே போதும். கீரை செடி நன்றாக வளர்ந்திடும். உங்க வீட்டிலேயே இந்த செடியை நீங்க வளர்க்கலாம்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning