கொடிய நோய்களை குணமாக்கும் மணத்தக்காளி கீரை
நம் வீட்டை சுற்றிலும், தானாகவே வளர்ந்து நிற்கும் ஒரு கீரைதான் இந்த மணத்தக்காளிக் கீரை. இந்தக் மணத்தக்காளிக் கீரையை நாம் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலமாக பல நோய்கள் ஏதும் வராமல் பார்த்துக்கொள்ள முடியும்.
பல நோய்களை போக்கவும் முடியும். ஆனால் நம்மில் நிறைய பேர் இதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை சொல்ல வேண்டும். ஆனால், அன்று நம் முன்னோர்கள் போன்ற மருத்துவ நன்மைகள் கொண்ட கீரைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டதால் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருந்தார்கள்.
இன்னும் சொல்லப் போனால், இன்று போல் அன்று எதற்கு எடுத்தாலும் மருத்துவமனைக்கு செல்ல மாட்டார்கள். இது போன்று வீட்டை சுற்றியுள்ள மூலிகைகளை கொண்டே வீட்டு மருத்துவம் செய்து குணப்படுத்தி விடுவார்கள்.
அந்த வகையில் அதிக மருத்துவ தன்மையுள்ள கீரைகளில் மிகவும் முக்கியமான ஒரு கீரையான இந்த மணத்தக்காளிக் கீரையைக் கொண்டு எந்தெந்த உடல் நல பிரச்சனைகளுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதைப் பற்றி இங்கே பார்க்கப் போகிறோம்.
உண்மையில் பல ஆபத்தான நோய்களைக் கூட குணப்படுத்தக் கூடியது இந்த மணத்தக்காளிக் கீரை.
கொடிய நோய்களை குணமாக்கும் மணத்தக்காளி கீரை
வாய்ப்புண்
வாய்ப்புண் வருவது சாதாரண விஷயமாக இருந்தாலும் சில சமயங்களில் இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் பிரச்சனை பெரிதாக வாய்ப்புள்ளது.
தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு போன்ற இடங்களில் சிறிதாக இருந்த கொப்பளங்கள் நாளடைவில் குழிப் புண்களாக மாறிவிடும்.
அதே போன்று வயிற்றிலும் உடல் உள் உறுப்புகளிலும் புண்கள் இருந்தால் அது வாய் மூலமாகவே வெளிப்படும். அதாவது வாய்ப்புண் இருந்தால் வயிற்றிலும் புண்கள் உள்ளது என்று அர்த்தம்.
எனவே வயிற்றுப்புண் குணமானால்தான் வாய்ப்புண்ணும் குணமாகும். இப்படி வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு சாப்பிட முடியாத அளவுக்கு வலி எரிச்சல் இருக்கும்.
இதற்கு மிக அருமையான மருந்து இந்த கீரை. இதற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் நல்ல பசுமையான பத்து இலைகளை வாயில் போட்டு மென்று சிறிது நேரம் வாயிலே வைத்திருந்து விழுங்கலாம்.
அதாவது இந்த கீரையை நன்றாக மென்று உமிழ்நீரில் கலந்து சாப்பிடு பொழுது உடனே பலன் தெரியும். இப்படி தொடர்ந்து சாப்பிடு பொழுது தீவிரமான அல்சர் கூட முற்றிலும் குணமாகும்.
மேலும் உடல் சூடும் தணியும். பொதுவாக உடல் சூடு காரணமாகவும் வாய்ப்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அதே போன்று இந்த மன கீரையுடன், தேவையான நெய் சேர்த்து வதக்கி துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தாலும் வாய்ப்புண் குணமாகும்.
அதே போன்று சின்ன வெங்காயம், தேங்காய்ப்பால் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தாலும் நல்ல குணம் தெரியும்.
மலசிக்கல்
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் இந்த மணத்தக்காளிக் கீரையை கூட்டு செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் செரிமானம் சிறப்பாக நடைபெற்று மலச்சிக்கல் பிரச்சனையே வராது.
முக்கியமாக, உடலுக்குத் தேவையான சத்துக்களும் கிடைத்துவிடும்.
கொடிய நோய்களை குணமாக்கும் மணத்தக்காளி கீரை
கல்லீரல்
கல்லீரல் பாதிக்கப்படுவதால், மஞ்சள் காமாலை போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளது. எனவே கல்லீரல் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த கீரை சாற்றை குடித்து வந்தால் நோய்கள் நீங்கி, ஆரோக்கியம், மீண்டும் கிடைக்கும்.
முக்கியமாக, மணத்தக்காளி சாறு கசப்பாக உள்ளதால் குடிக்க முடியவில்லை என்பவர்கள் ஒரு டம்ளர் மோரில் கலந்தும் குடிக்கலாம்.
காசநோய்
காசநோய் என்பது ஒரு வகையான கிருமி நமது உடலுக்குள் புகுந்து நுரையீரலை பாதித்து சுவாசிக்கும் பொழுது மூச்சுத்திணறல், வறட்டு இருமலை உண்டாக்கி மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.
இவர்கள் தினமும் சிறிதளவு மணத்தக்காளிக் கீரை மற்றும் அதன் பழங்களை சாப்பிட்டு வந்தால் காசநோயின் தாக்கம் குறையும்.
பெண்கள் ஆரோகியாம்
பெண்களுக்கு கருப்பை வலிமை பெற மணத்தக்காளிக் கீரை சிறந்த உணவாகும். உண்மையில் கருப்பைக்கு வலு சேர்க்கும் உணவுகளில் இந்த மணத்தக்காளிக் கீரைக்கு முக்கிய இடம் உண்டு.
எனவே கருப்பை பிரச்சனை உள்ளவர்கள் இந்தக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக, இது, கருப்பையில் இருக்கும் நச்சு கிருமிகளை வெளியேற்றுவதால் கருத்தரிக்கும் வாய்ப்பு எளிதாகிறது.
இதே போன்று வெள்ளைப்படுதல் பிரச்சனை உள்ள பெண்கள் மணத்தக்காளிக் கீரை சாற்றிக் குடித்து வந்தால் நல்ல குணம் தெரியும்.
கொடிய நோய்களை குணமாக்கும் மணத்தக்காளி கீரை
ஆண்கள் ஆரோக்கியம்
ஆண்களுக்கும் மிக மிக நல்லது. முக்கியமாக இன்று அதிகரித்து வரும் ஆண் மலட்டுத்தன்மை போக்க இந்த கீரை மிகச்சிறந்த மருந்து.
எனவே, மலட்டுத்தன்மை உள்ளவர்கள் மணத்தக்காளிக் கீரையை வாரத்தில் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் உயிர் அணுக்களின் வலிமை அதிகரிக்கும்.
சிறுநீரக பிரட்சனை
சிலருக்கு சிறுநீர் சரியாகப் பிரியாமல் பெரிதும் அவதிப்படுவார்கள். இவர்கள் தொடர்ந்து மணத்தக்காளிக் கீரையை உணவில் சேர்த்து வந்தால், சிறுநீர் நன்றாகப் பிரியும்.
மேலும் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் இதனால் சிறுநீரகமும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் கரைந்துவிடும்.
மணத்தக்காளி வத்தல்
நாக்கில் சுவை உணர்வு இன்மை, வாந்தி ஏற்படும் உணர்வு, இதனை போக்கும் தன்மையானது மணத்தக்காளி வத்தலுக்கு உண்டு. எனவே, கர்ப்பிணிப் பெண்கள், குறைந்த அளவில் தினமும், இந்த வத்தலை, உணவுடன் சேர்த்துக் கொண்டு வரலாம்.
மார்பு சளி இளகி உடலில் இருந்து வெளியேறவும், மலச்சிக்கல் பிரட்சனை குணமாகவும் மணத்தக்காளி வத்தல் பயன்படுகிறது.
நாட்டு மருந்து கடைகளில், இந்த மணத்தக்காளி வத்தல் கிடைக்கும்.
மேலும்
கண்பார்வை பிரச்சனைகள் வராமல் தடுத்து, கண்களை ஆரோக்கியமாக வைக்கிறது.
முக்கியமாக இந்த கீரையானது இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும்.
உடல் களைப்பை போக்கி, நல்ல உறக்கத்தை கொடுக்கும். எனவே, இத்தனை நன்மைகள் கொண்ட கீரையை அடிக்கடி உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
உண்மையில் உடலின் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு, வைட்டமின், இரும்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் அவசியம். அந்த வகையில் இதில் எல்லா சத்துக்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது.
எனவே இந்த மணத்தக்காளிக் கீரையை வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நம்முடைய ஆரோக்கியத்தை நிச்சயம் அதிகப்படுத்தும்.
மணத்தக்காளி கீரை சமையல்
பொதுவாக இந்த கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு போன்று செய்து சாப்பிடலாம். அதேபோன்று, சின்ன வெங்காயம், சீரகம், தேங்காய்ப்பால் சேர்த்து சூப் செய்து சாப்பிடலாம்.
மேலும் பருப்பு சேர்த்து சாம்பார் வைத்தும் சாப்பிடலாம். முக்கியமாக இந்த கீரையை சமைக்கும் பொழுது, அதிகம் நேரம் வேக வைக்கக்கூடாது. அதாவது, கீரை நிறம் மாறாமல் சமைக்க வேண்டும்.
எனவே நாமும் நம் முன்னோர்கள் போன்றே இது போன்ற இயற்கை உணவுகளை நமது உணவில் இருக்குமாறு, பார்த்துக் கொள்வோம்.
இதனையும் படிக்கலாமே
- ஆளி விதை பயன்கள் | Ali Vithai Benefits in Tamil
- பூந்திக்கொட்டை பயன்கள் | Boondi Kottai Uses in Tamil
- பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil
- கால் நரம்பு வலி குணமாக | Paati Vaithiyam For Leg Pain in Tamil
- சிறுநீரக கல் கரைய பாட்டி வைத்தியம் | Kidney Stone Treatment in Tamil
- நார்ச்சத்து மிகுந்த உணவுகள் | Fiber Rich Foods in Tamil
- பூங்கார் அரிசி பயன்கள் | Poongar Rice Benefits in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
6 Comments
Comments are closed.