சுக்கான் கீரை பயன்கள் | Sukkan Keerai Benefits in Tamil
நாம் உண்பதற்கு பல வகை கீரைகள் இருந்தாலும் உடலுக்கு ஏற்ற ஒரு கீரையாக, இந்த சுக்கான் கீரை உள்ளது.
இந்தக் கீரை பல நோய்களுக்கு தீர்வு அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. இந்த சுக்கான் கீரையை சாப்பிடுவதன் மூலமாக நமது உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதனை பற்றி பார்க்கலாம்.
குடற்புண்
இன்றைய காலகட்டத்தில் உள்ள உணவு முறையின் காரணமாக வயிற்றில் வாயு அதிகரித்தல், குடல்களில் புண்கள் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இந்த சுக்கான் கீரையினை சாப்பிட்டு வருவதன் மூலம் குடற்புண்கள் வேகமாக குணமாகும்.
அதிலும் முக்கியமாக, சுக்கான் கீரையுடன் புளி சேர்க்காமலும், பாசிப்பருப்புடன் சேர்த்தும் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
இதயம்
ஒரு மனிதனுக்கு இதயமானது ஒரு நிமிடத்திற்கு குறைந்தபட்சம் எழுபத்தி இரண்டு முறையாவது, துடிக்க வேண்டும். அவ்வாறு துடிக்காவிட்டால் உடலில் ஏதோ குறைபாடு உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.
அதிக இரத்த அழுத்தம், மற்றும், குறைந்த அழுத்தம் உடையவர்களுக்கு இதயத்துடிப்பானது சீராக இருக்காது என்று பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் உணவில் சிறிது சுக்கான் கீரை சாப்பிட்டு வருவதன் மூலமாக, இதயம் நன்கு ஆரோக்கியம் பெறும்.
பல்
நாம் உண்ணும் உணவினை நன்று மென்று சாப்பிட உதவுவதற்கு நமது பல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
ஆனால் இயற்கையாகவே பற்களில் பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பற்களில் பிரச்சனை உள்ளவர்கள் சுக்கான் கீரையின் வேரினை நன்றாக உலர்த்தி அதனை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
அந்தப் பொடியினை கொண்டு தினசரி காலையில் பல் துலக்கி வருவதன் மூலமாக பற்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். அதாவது, பல்வலி குணமாகும் மற்றும் ஈறுகள் வலுவாகும்.

மலச்சிக்கல்
மலச்சிக்கல் என்பது இன்றைய காலத்தில் உள்ள junk foodகளை அதிக அளவில் சாப்பிடுவதனாலும் சரியான விகிதத்தில், தண்ணீர் அருந்தாமல் இருப்பதாலும் மலச்சிக்கலானது ஏற்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் தொண்ணூறு சதவீதம் மக்களுக்கு அடிப்படையே மலச்சிக்கல்தான் காரணம் என்கின்றனர்.
இந்த மலச்சிக்கலினை குணமாக்க சுக்கான் கீரையானது நல்ல மருந்தாக விலங்குகிறது.
சுக்கான் கீரையை நன்றாக பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதன் மூலமாக மலச்சிக்கல் ஏற்படாமல் குணமாகும்.
பசி உணர்வு
நமக்கு வேலை, வேலை, நன்றாக பசி எடுத்தாலே நமது உடலில் எந்தவித நோயும் இல்லை என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் ஒரு சிலருக்கு பசி உணர்வானது சுத்தமாக வருவதே இல்லை. மேலும் ஒரு சிலருக்கு, உண்ட உணவானது எளிதில் ஜீரணமாவதில்லை.
இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் சுக்கான் இலையுடன், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து, சட்னி ஆட்டி சாப்பிட்டு வருவதன் மூலமாக, செரிமான சக்தியை அதிகரிக்கும். மேலும், நன்கு பசி உணர்வு ஏற்படும்.
கல்லீரல்
ஒரு மனிதனின் உடலில் உள்ள முக்கிய பகுதிகளில் கல்லீரலும் ஒன்று. இந்த கல்லீரல் ஆனது, நாம் உண்ணக்கூடிய உணவுகளில் உள்ள நச்சுக்கள் ரத்தத்தில் கலந்து கொள்ளும். அந்த ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி ரத்தத்தினை சுத்தம் செய்யும் பணியை கல்லீரல் செய்கின்றது.
மது, புகை, போதை, போன்றவற்றால் அடிமைப்பட்டவர்களுக்கு விரைவில் கல்லீரலானது பாதிக்கப்படுகின்றது.
இதனால், இவர்களின் உடலில் பித்தத்தின் அளவு அதிகரித்து எண்ணற்ற நோய்கள் ஏற்பட வழி வகுக்கின்றது.
ஆகவே கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள், இந்த சுக்கான் கீரையினை,சூப் ஆக செய்து தினசரி குடித்து வருவதன் மூலமாக கல்லீரல் நன்கு வலுப்பெறும்.
தூய்மையான ரத்தம்
நம் உடலில் ஓடக்கூடிய ரத்தமானது சுத்தமாக இருந்தால்தான் நோயற்ற வாழ்வினை வாழ முடியும்.
எனவே, ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி ரத்தம் சுத்தமாக இருப்பதற்கு சுக்கான் கீரையினை சரியான அளவில் நாம் பயன்படுத்த வேண்டும்.
இந்த சுக்கான் கீரையினை நன்றாக சுத்தம் செய்து அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் ஆகியவற்றினை சேர்த்து நன்றாக வதக்கி அதனை சட்னி ஆட்டி சாப்பிடுவதன் மூலம் ரத்தம் சுத்தகரிக்கும்.
இதனையும் படிக்கலாமே
- உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil
- முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?
- ஓரிதழ் தாமரை பயன்கள் | Orithal Thamarai Side Effects
- பிரண்டை மருத்துவ குணங்கள் | Pirandai Benefits in Tamil
- புளி மருத்துவ பயன்கள் | Tamarind Medical Benefits
- பூந்திக்கொட்டை பயன்கள் | Boondi Kottai Uses in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை படிக்கவும்.
16 Comments
Comments are closed.