முள்ளங்கி கீரை பயன்கள் | Mullangi Keerai Benefits in Tamil

முள்ளங்கி கீரை பயன்கள் | Mullangi Keerai Benefits in Tamil

முள்ளங்கி என்றாலே மணமும், சுவையும் மிகுந்த சாம்பார் தான் நினைவில் வரும். முள்ளங்கி கிழங்கு மட்டுமின்றி, கீரையும் பயனுடையது ஆகும்.

முள்ளங்கியில் வெள்ளை நிற முள்ளங்கி, சிவப்பு நிறமுள்ளங்கி என இரு வகை உண்டு. இதன் கீரைகள் வயிற்றுப் பூச்சிகளை கொல்லும் வல்லமை உள்ளது.

புண்களை எளிதில் ஆற்றக்கூடிய மருத்துவ குணம் கொண்டது.

சரிவர சிறுநீர் வெளியேறாதவர்கள் முள்ளங்கிக் கீரை உண்டு வந்தால் சிறுநீரை பெருக்கி வெளியேற்றும்.

சிலருக்கு எப்போதும் தேகம் உஷ்ணமாகவே இருக்கும். உஷ்ண சரீரம் உடையவர்கள் முள்ளங்கிக் கீரை உண்டுவந்தால் கொதிக்கும் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியாகும். அதேபோல் புளிப்பேற்றத்தையும் குறைத்துவிடும்.

mullangi keerai benefits in tamil

முள்ளங்கிக் கீரையில் உள்ள சத்துகள்

  • ஈரம்- 76.6 கிராம்
  • புரதம் -5.1 கிராம்
  • கொழுப்பு -0.5 கிராம்
  • தாது உப்புக்கள்- 2.8 கிராம்
  • நார் -0.9 கிராம்
  • சர்க்கரைச் சத்து -31.1 கிராம்
  • சக்தி -77 Kcal
  • சுண்ணாம்புச் சத்து -340 கிராம்
  • பாஸ்வரம்-110 மி.கி.
  • இரும்பு- 8.8 மி.கி
  • மாவுப் பொருள்- 5.700 UG
  • தையமின்- 0.4மி.கி
  • ரிபோஃபிளேவின்- 0.37மி.கி
  • நியாசின்- 2.1 மி.கி
  • வைட்டமின் சி- 79 மி.கி.

முள்ளங்கிக் கீரைச் சமையல்

1/4 கிலோ முள்ளங்கிக் கீரையை இடித்துக் எடுக்கவும். அதை மண் சட்டியில் போடவும். தூய நீர் கால் லிட்டர் விட்டு கொதிக்கவிடவும். கொதித்ததும் இறக்கிவிடவும்.

எலுமிச்சம் பழச்சாறு 50 மி.லி. ஊற்றி மூடி வைக்கவும். சின்ன வெங்காயம் 50 கிராம் அரைத்துப் போட்டு உப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்.

பிறகு வடிகட்டவும். காலை உணவுக்கு ஒரு மணி முன் அருந்திவர சுகபேதியாகும்.

mullangi keerai benefits

வேறு முறை சமையல்

கால் கிலோ முள்ளங்கிக் கீரையில் 50 கிராம் சின்ன வெங்காயம் நறுக்கிப் போடவும்,அரை லிட்டர் புழுங்கலரிசிக் கழுநீரை ஊற்றி உப்புபோட்டு வேக வைக்கவும்.

வெந்த கீரையையும், வெங்காயத்தையும் ஒரு துணியில் வைத்துப் பிழியவும் வெந்த கழுநீரில் அதை கலந்து கொள்ளவும். அதை அடுப்பில் வைத்து 50 மி.லி. எலுமிச்சம் பழச்சாற்றையும் அரை ஸ்பூன் மிளகுத் தூளையும் போட்டு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.

தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் வாய்ப் புண், உஷ்ண வயிற்றுவலி குணமாகும்.

benefits of raddish leaves

கால் கிலோ முள்ளங்கிக் கீரையை நீரில் அலசி சிறு துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய கீரைகளை மண் சட்டியில் போட்டு வெந்தயம் 1/2 ஸ்பூன், தேங்காய் துருவல் 100 கிராம், உப்பு போட்டு அடுப்பில் வைத்து வேக வைத்து இறக்கவும்.

பகலில் உணவோடு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்று பூச்சிகள் நீங்கும். குடல் சூடும் தணியும். வயிறு பிரச்சினைகள் தீரும்.

மலக்கட்டு

கால் கிலோ முள்ளங்கிக் கீரையை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். 50 மி.லி. எலுமிச்சம் பழச்சாறு 50 கிராம் நறுக்கிய வெங்காயம். 1 ஸ்பூன் மிளகுத் தூள் உப்பு சேர்த்து மண் சட்டியில் வேக வைக்கவும். இதை பகல் உணவுடன் உட்கொண்டால் மலக்கட்டு நீங்கும். வாயில் வரட்சியும் நீங்கும். தோல் வியாதிகள் மறையும்.

mullangi keerai health benefits

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயாமாக படிக்கவும்

 

Related Posts

4 Comments

  1. Pingback: หอพัก

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning