பெருஞ்சீரகம் பயன்கள் PerunJeeragam Uses

பெருஞ்சீரகம் பயன்கள் | PerunJeeragam Uses

பெருஞ்சீரகம் பயன்கள் | PerunJeeragam Uses

பெருஞ்சீரகம் பயன்கள் | PerunJeeragam Uses  வாசனை பொருட்கள் என்றாலும், சாப்பிடுபவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பலவித நோய்களை தீர்க்கும் திறன் இந்த பொருட்களுக்கு உண்டு. பெருஞ்சீரகம் அப்படிப்பட்ட ஒரு வாசனைப் பொருள் மற்றும் மூலிகைப் பொருளாகும். இதனை சோம்பு என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகின்றது.

 

இந்தப் பெருஞ்சீரகத்தை சாப்பிட்டால், என்னென்ன நன்மைகளை நாம் பெறலாம் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம். பெருஞ்சீரகம் பயன்கள் PerunJeeragam Uses

செரிமானம்

பலருக்கும் நேரம் தவறி சாப்பிட்ட உடன், நெஞ்செரிச்சல் ஏற்படுகின்றது. மேலும், சிறு குழந்தைகளுக்கு வாயுத் தொல்லை, வயிறு ஒப்புதல் போன்ற பிரச்சனைகளும் உருவாகின்றது. இப்படிப்பட்ட சமயங்களில், பெருஞ்சீரகத்தை சிறிதளவு நீரில் போட்டு, அதை நன்கு கசக்கி, சற்று இதமான சூட்டில் அந்த நீரை வயிறு கோளாறுகள் உள்ளவர்கள் பருகினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சுவாச கோளாறுகளை சரி செய்கிறது

குளிர் காலங்களில் சிலருக்கு, ஜலதோஷம் பிடித்துக் கொண்டு சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுகின்றது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் வானிலை மாறுபடும்போது சுவாசிப்பதில் சற்று சிரமத்தை உணர்வார்கள். தினமும் சிறிது பெருஞ்சீரகத்தை மென்று தின்று சிறிது வெந்நீரை அருந்தினால், மேற்கொண்ட சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் உடனடியாக தீரும்.

தாய்பால் அதிகரிக்கிறது

குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு மார்பகங்களில் பால் சுரப்பு சில சமயங்களில் குறைந்து போய்விடும். பாலூட்டும் தாய்மார்கள், பெருஞ்சீரகத்தை அவ்வப்போது சாப்பிட்டு வருவதும் நல்லது. இதில் உள்ள அணிதோல் எனப்படும் வேதிப்பொருள் பெண்களின் உடலில் estrogen hormoneஐ தூண்டி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கின்றது.

வாய் துர்நாற்றம் போக்குகிறது

மாமிச உணவுகள் சாப்பிட்ட போதும் வேறு பல உடல் நல குறைபாடுகளாலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுகின்றது. இந்த பிரச்சனை உள்ளவர்கள், ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு முடித்த பின்பு, சிறிது பெரும் ஜீரகத்தை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

சர்க்கரை நோயினை கட்டுப்படுத்திக்கறது

சர்க்கரை வியாதி கொண்டவர்களுக்கு சிறந்த இயற்கை மருத்துவ பொருளாக, பெருஞ்சீரகம் இருப்பதாக பல மருத்துவ ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் சீரகங்களில் வைட்டமின் சி சக்தி அதிகமாக உள்ளது. இது உடலின் இரத்த சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் இருக்க செய்வதில் பெரும் உதவி புரிகின்றது. இதனால் நோயாளிகள் பெரும் சீரகத்தை அவ்வப்போது சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

நீர் கோர்ப்பினை சரிசெய்கிறது

நீர் கோர்ப்பு அல்லது நீர் கோர்த்துக் கொள்ளுதல் என்பது சிலரின் உடலில் இருக்கும் திசுக்களின் நீர் அதிகம் சேர்ந்தோ மிகுந்த துன்பத்தை கொடுக்கும். பெருஞ்சீரகம் உடனடி பலன் தராது என்றாலும், இந்த நீர் கோர்ப்பு பிரச்சனை உள்ளவர்கள் அவ்வப்போது பெரும் சீரகத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் சேர்ந்திருக்கும் அதிக அளவு நீரை, சிறுநீர் மூலமாக வெளியேற்றும் சக்தி கொண்டது இந்த பெரும் ஜீரகம்.

மலட்டுதன்மை சரிசெய்யவல்லது

இன்னைய காலங்களில் திருமணம் ஆன பிறகும், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத, மலட்டுத் தன்மை பிரச்சனை, ஆண் மற்றும் பெண் இருவருக்குமே, அதிகமாக இருக்கின்றது. இந்தப் பிரச்சனை உள்ளவர்கள், மற்ற ஆங்கில அல்லது சித்த மருந்துகளைச் சாப்பிடும்போது, சிறிதளவு பெருஞ்சீரகங்களை சேர்த்து சாப்பிடுவதால், விரைவிலேயே மலட்டுத்தன்மை நீங்கி, குழந்தை பெற்றெடுக்கும் திறன், ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் கிடைக்கும்.

கல்லீரல் வலுப்பெற செய்கிறது

உடலை, பலவித நச்சுக்களின் பாதிப்பிலிருந்து நீக்கும் வேலையை, நமது கல்லீரல் தொடர்ந்து செய்து வருகின்றது. தினசரி ஒருமுறையேனும் சிறிதளவு பெருஞ்சீரகத்தினை நன்கு மென்று சாப்பிட்டு வர கல்லீரல் பலம் பெரும். அதில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் முழுமையாக நீங்கி, கல்லீரல் மற்றும் கணையம் போன்றவை தூய்மையாகும். கல்லீரல் தொற்று ஏற்படுவதை தடுக்கும்.

மாதவிடாய் காலங்களில் அருமருந்து

பெண்களை மாதந்தோறும் பாடுபடுத்தும் இயற்கை அமைப்பு மாதவிடாய் ஆகும். இந்த காலத்தில் சில பெண்களுக்கு அடிவயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு அதிகரிக்கின்றது. இந்த காலகட்டங்களில் பெருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பெண்களின் estrogen hormoneகள் நன்கு துண்ட பெற்று மாத கால வலி மற்றும் இதர குறைபாடுகளை நிவர்த்தி செய்கின்றது.

நரம்பு பிரஞ்சனைகளை சரிசெய்கிறது

நரம்புகளால் பாதிக்கப்பட்டவர்கள், பலருக்கும் ஆழ்ந்த தூக்கம் ஏற்படுவதில் பிரச்சனைகள் உண்டாகின்றது. பெருஞ்சீரகத்தின் magnesium சத்து அதிகமாக நிரம்பி உள்ளது. இது நரம்புகளை வலுவாக்கி ஆழ்ந்த தூக்கம் ,ஏற்பட செய்கின்றது.

English Blog

நமது வலைபதிப்பில் தினம் தினம் ஒரு சித்த மருத்துவம் சார்ந்த பதிவு பதிவிடபடுகிறது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் வினாக்கள் இருந்தால் contact us இல் பதிவிடவும். இதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Contuct Us  

One thought on “பெருஞ்சீரகம் பயன்கள் | PerunJeeragam Uses

Comments are closed.