மைதா மாவு தீமைகள் | Maida Side Effects in Tamil

மைதா மாவு தீமைகள் | Maida Side Effects in Tamil

இன்று பெரும்பாலும் மைதா கொண்டு சமைக்கப்பட்ட உணவு வகைகளையும் தின்பண்டங்களையும் அனைவரும் விரும்பி உண்கின்றோம். அது உடலுக்கு தீங்கானது என்று தெரிந்திருந்தும் அதை உண்ணுகின்றோம்.

மைதா பயன்படுத்தி செய்யப்பட்ட உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு கிடைக்க கூடிய பின் விளைவுகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மைதா மாவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது

மைதா மாவானது பெரும்பாலும் கோதுமையில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது. மேலும் ஆரோரூட் கிழங்கு, மரவள்ளி கிழங்கு போன்றவற்றிலிருந்தும் மைதா மாவு எடுக்கப்படுகிறது.

கோதுமையில் நன்மை தரக்கூடிய அனைத்து விஷயங்களும் தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டு கோதுமை மாவு மற்றும் ரவை போன்று பிரித்து விற்கின்றனர்.

மேலும் மீதமுள்ள சக்கையை தான் ஒரு சில ரசாயனங்களை சேர்த்து மைதா மாவு என்ற பெயரில் விற்கின்றனர். மேலும் இதில் நார்ச்சத்தானது சுத்தமாக கிடையாது.

வியாபாரிகள் வியாபார நோக்கத்துடன் மீதமுள்ள சக்கையை கூட மைதா என்ற பெயரில் விற்கின்றனர். ஆனால் அந்த மைதாவில் எந்த ஒரு சத்தும் கிடையாது.

maida side effects in tamil

மைதாவின் ஈர்ப்பு

நாம் தென்னிந்தியாவில் எந்த ஒரு உணவகத்திற்கு சென்றாலும் பரோட்டா என்பது இல்லாமல் இருக்காது. நாம் உணவகளுக்கு சாப்பிட செல்லும் பொழுது அங்கே நம்மிடம் ஆர்டர் எடுக்கும் சர்வர் கூட தானாகவே பரோட்டா வேணுமா என்கின்ற வார்த்தையினை கூறுவார்.

ரோட்டு கடைகள் முதல் ஏசி ஹோட்டல்கள் வரை பரோட்டா இல்லாத கடை இல்லை.

பரோட்டாவின் சுவைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை ஹோட்டலுக்கு சென்று விட்டாலே எனக்கு பரோட்டா தான் வேண்டும் என்று கூறும் நிலை வந்து விட்டது.

உணவகங்களில் எந்த வேலை சென்றாலும் எப்பொழுதும் ரெடியாக இருக்கக்கூடிய ஒரு உணவு வகைகளில் இந்த புரோட்டாவும் ஒன்று.

புரோட்டா மட்டுமில்லாமல் பல இனிப்பு பண்டங்கள், பேக்கரி உணவு பொருட்கள், சிற்றுண்டி உணவுகள், பட்டர் நான், இது போன்ற பல வகை உணவுகள் மைதாவினை மூலதனமாகக் கொண்டு சமைக்கப்படுகிறது.

இப்பொழுது மைதாவினை கொண்டு சமைக்கப்பட்ட உணவினை சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்க கூடிய தீமைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

disadvantages of maida

செரிமான பிரச்சனை

நாம் சாப்பிடக்கூடிய எந்த ஒரு உணவும் செரிமானம் ஆவதற்கு நார்ச்சத்து என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் இந்த மைதாவில் நார்ச்சத்தானது சுத்தமாக கிடையாது.

மைதா மாவு குடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவது கிடையாது. இந்த மைதா இயற்கையாகவே ஒட்டும் தன்மை கொண்ட ஒன்று.

இது குடல் உறுப்புகளில் ஒட்டிக் கொள்ளும் எனவே இந்த மைதாவினை செரிமானம் செய்வதற்கே இரைப்பையானது அதிக வேலை செய்ய வேண்டியுள்ளது.

இதனால் இரைப்பையில் பிரச்சனை ஏற்படுவது மற்றும் கொழுப்பினை அதிகரிக்கிறது. இதுவே உடல் எடையை அதிகமாக்குவதற்கு முக்கிய காரணியாக உள்ளது.

மேலும் பெண்களுக்கு ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என்னை உண்டாக்குகின்றது.

உடல் பருமன்

மைதா சம்பந்தப்பட்ட உணவுகளை அதிக அளவில் சாப்பிட்டு வரும் பொழுது, மேலே சொன்னவாறு உடலில் கொழுப்பு அதிகமாகி உடல் எடை கூடும்.

உடல் எடை அதிகரிப்பதன் காரணமாக இதய கோளாறு ரத்த அழுத்தம் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

மைதா மாவு தீமைகள்

சர்க்கரை நோய்

மைதா சம்பந்தப்பட்ட உணவுகளில் அதிக அளவில் கிளைசெமிக்ஸ் இன்டெக்ஸ் கொண்டுள்ளது. ஆகவே இந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிடும் பொழுது இரத்த சர்க்கரையின் அளவானது மிக வேகமாக அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது.

அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மைதா உணவுகளை சாப்பிடக்கூடிய 90% மக்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதய பிரட்சனை

இந்த மைதா சம்பந்தப்பட்ட உணவுகளினை சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்த நாளங்களில் அதிக அளவில் கொழுப்பு படிகின்றது. இதனால் ரத்தக்குழாய் அடைப்பு இருதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.

ஆகவே மைதா உணவுகளினை தவிர்த்து, தானிய உணவுகளை சாப்பிட பழகிக் கொள்ளவும்.

மலச்சிக்கல்

இந்த மைதாவில் நார்ச்சத்தானது சுத்தமாக இல்லை, ஆகவே செரிமானம் செய்வதற்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். மேலும் இந்த மைதா மாவினை அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும்.

எலும்பு அரிப்பு

மைதா மாவில் காணப்படக்கூடிய அமிலத்தன்மையானது எலும்புகளுக்கு தீமை விளைவிக்க கூடியது. இந்த அமிலத்தன்மையானது எலும்பில் இருக்கக்கூடிய கால்சியம் சத்தினை குறைத்து, எலும்பின் அடர்த்தியினை குறைத்து விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும் கீழ்வாதம் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மைதா மாவுகளை அறவே ஒதுக்க வேண்டும்.

side effects of maida

முக்கிய குறிப்பு

மைதா மாவிற்கு பதிலாக பாதாம், தேங்காய், ராகி, ஓட்ஸ் இது போன்ற ஆரோக்கியமான உணவுகளை பயன்படுத்தலாம்.

இந்த உணவுகள் நார்ச்சத்து நிறைந்ததாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது. மேலும் இது எலும்பு மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பயனுள்ள ஒன்று.

ஆகவே மைதா மாவினை பயன்படுத்துவதற்கு பதிலாக தானிய உணவுகள் என்னை பயன்படுத்தி உடலினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning