அதிமதுரம் பயன்கள் | Athimathuram Uses in Tamil
- அதிமதுரம் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை.
- இது உலகின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது.
- ஆயுர்வேத சிகிச்சையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
- ஒவ்வொரு மூலிகைகளிலும், ஒவ்வொரு மருத்துவ குணம் உண்டு.
இதில் அதிமதுரத்தின் மேல் பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. - இதன் சிறப்பு மனிதர்களுக்கு தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது.
- இக்காலகட்டத்தில் உலகெங்கிலும் புதிது புதிதாக நோய்கள் உருவாகி வரும் இந்த சூழ்நிலையில் சித்த மருத்துவம் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளை நாடி மேல்நாட்டவர்களை நம் நாட்டிற்கு வருகிறார்கள்.
- நமது நாடு ஒரு மூலிகைகளின் சுரங்கம். நமது நாட்டில் வளரும் உயிர் காக்கும் மூலிகைகளில் மிகவும் முக்கியமான ஒன்று அதிமதுரம்.
- நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்தது அதிமதுரம்.
- அதிமதுரம் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது அதை பற்றி பார்ப்போம்.
சுகப்பிரசவம்
முந்தைய காலங்களில் நமது முன்னோர்கள் பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறவி என்று சொல்வார்கள்.
முற்காலங்களில் ஒரு குழந்தையை பத்து மாதங்கள் வயிற்றில் சுமக்கும் பெண்கள், பெரும்பாலும் தனக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றே விரும்புவார்கள்.
அதிமதுரம், தேவதாரம் இரண்டையும் சம அளவில் தலா நாப்பது கிராம் அளவுக்கு எடுத்து அதை நன்றாக பொடி செய்து சுடானில் அதை கலந்து பிரசவ வலி பெண்களுக்கு வலி எடுக்க ஆரம்பித்ததில் இருந்தே இரண்டு முறை மற்றும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஆகும்.
உதிரப்போக்கு
கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு பிரச்சனைகளுக்கு அதிமதுரம் ஒரு சிறந்த மருந்தாகும்.
கருவுற்ற பெண்கள் அதிமதுரம் எடுத்து அதை பொடி செய்து வைத்துக்கொண்டு பத்து கிராம் அளவுக்கு பொடியை எடுத்து அதை நூறு மில்லி தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
அது ஐம்பது மில்லியாக சுண்டியதும், அதை வடிகட்டி காலை வேளையில் மூன்று நாட்களுக்கு சாப்பிட்டால் பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரபோக்கு நிற்கும்.
வயிற்றுப் பிரச்சனை
காலை உணவுகள் சாப்பிடாததால் குடல்களில் புண்கள் ஏற்படுகிறது.
இதனை குணமாக அதிமதுரத்தை பொடியாக்கி அதை நீரில் போட்டு நன்றாக கலக்கி இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும்.
அதனை காலையில் அரிசி கஞ்சிடைந்து தண்ணீரையும் சேர்த்து அருந்தி வந்தால் வயிற்றில் குடல்களில் ஏற்படும் புண்கள் குணமாகும்.
வயிற்றில் ஏற்படும் மற்ற பிரச்சனைகளுக்கு அதிமதுரத்தை பொடி செய்து சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
மூட்டு வலி
மூட்டு வலி வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு அதிமதுர தூள் கலந்த நீரை இரவு முழுவதும் ஊற வைத்து குடித்து வர மூட்டு வலிகள் நீங்கும்.
சிறுநீரகங்கள்
சிறுநீரக தொற்று நோய்களால் சிறுநீர் பைகளில் ஏற்படும் புண்கள் குணமாக அதிமதுரத்தை தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.
அந்த தண்ணீரை குடித்துவர சிறுநீர் பையில் இருக்கும் கிருமிகள் அழிந்து புண்கள் ஆறுவதோடு சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் என்று, சித்த மருத்துவம் கூறுகிறது.
தொண்டை
அதிமதுரத்தை சிறிது எடுத்து வாய்க்குள் போட்டு அடக்கிக் கொள்ள வேண்டும். இதனால், நமக்கு அதிக அளவு உமிழ்நீர் சுரக்கும்.
அந்த உமிழ்நீர் கொஞ்சம் கொஞ்சமாக தொண்டைக்குள் இறங்கும் பொழுது தொண்டையில் சளியால் ஏற்படும் குறள் கரகரப்பு மற்றும் தொண்டைக் கட்டையும் குணமாக்கும்.
அதிமதுரம் வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடித்தால் தொண்டை புண் குணமாகும்.
அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண் ஆறும்.
தலைமுடி
சிறிது அதிமதுரத்தை பசும்பாலில் ஊற வைத்து அதை விழுதாக அரைத்து அதை தலையில் நன்றாக அழுத்தி தேய்த்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு மணி நேரம் ஊற வைத்து அதன் பின் தலைக்குக் குளிக்கும் பொழுது தலைமுடி உதிர்வது குறையும்.
தலையில் இருக்கும் புண்கள் ஆறும். இளநரை நீங்கும். முடி பட்டு போன்று மென்மையாக இருக்கும்.
மலட்டுத் தன்மை
ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கும் இருக்கும் மலடு நீங்குவதற்கு அதிமதுரத்தை நன்றாக பொடியாக்கி வைத்து கொள்ளவும்.
அதனை பாலில் கலக்கி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மலட்டு தன்மை விரைவில் நீங்கும்.
வழுக்கை
இப்பொழுது மிக இள வயதிலேயே ஆண்களுக்கு தலைமுடி உதிர்ந்து தலையில் வழுக்கை ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட பிரச்சனை உடையவர்கள் அதிமதுரம் நன்றாக அம்மியில் அரைத்து பொடி செய்து அதனுடன் எருமைப் பாலை விட்டு நன்றாக கலக்கி வைத்து கொள்ளவும்.
அதனை வழுக்கை உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் ஊறிய பின் குளித்து வந்தால் வழுக்கையான இடத்தில் முடி முளைக்கத் தொடங்கும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் பிரச்சனைய போக்க அதிமதுரம் ரோஜா மொக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து நன்றாக இடித்து வைத்து கொள்ளவேண்டும்.
அந்த பொடியினை ஒரு சிட்டிகை அளவு எடுத்து பசும்பாலில் கலந்து இரவு தூங்குவதற்கு முன் குடித்துவர மலசிக்கல் பிரச்சனை நீங்கும்.
கல்லீரல்
அதிமதுரத்தை அவ்வப்பொழுது சிறிதளவு சாப்பிட்டு வருவதன் மூலம், கல்லீரலின் பலம் பெருகும்.
உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கண் எரிச்சல்
கண் எரிச்சல் நீங்க அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து, வறுத்துப் பொடி நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும்.
கண்கள் நல்ல ஒளியைப் பெறும்.
இருமல்
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும், சம அளவு எடுத்து அதை லேசாக வறுத்து அதைப் பொடி செய்து ஐந்து கிராம் அளவு பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் இருமல் நீங்கும்.
ஆஸ்துமா
அதிமதுரம், அரிசி, திப்பிலி, சித்தரத்தை ஒன்றையும், தலா பத்து கிராம் அளவுக்கு எடுத்து கொள்ளவும்.
அதனுடன் இதில் ஆடாத்தொடை, முசு முசுக்கை இரண்டையும், பத்து கிராம் அளவிற்கு சேர்த்து, இவற்றை இருநூறு மில்லி தண்ணீரில் விட்டு காய்ச்சி ஐம்பது மில்லியாக சுண்டியதும் வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சு சளி மற்றும் அனைத்து வகை சளியும் நீங்கும். இருமல் நீங்கும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.
நுரையீரல்
அதிமதுரத்தை நீரில் கொதிக்க வைத்து கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத்தூள் சேர்த்து, பானமாக பருக குரல் வளம் பெருகும்.
மேலும் சுவாச குழாய்களில் உள்ள கபம், தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, வறட்டு இருமலை போக்கி நுரையீரலை ஈரப்படுத்தும்.
ஆஸ்துமா, இருமல், கண் எரிச்சல், மலச்சிக்கல், கல்லீரல், தொண்டை, மலட்டுத்தன்மை, வழுக்கை,உதிர்வு, வயிறு, மூட்டு வலி, இப்படி எண்ணற்ற பிரச்சனைகள் இருக்கக்கூடிய அதிமதுரம், இயற்கை நமக்கு அளித்த பொக்கிஷம்.
இதனையும் படிக்கலாமே
உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா(Opens in a new browser tab)
3 Comments
Comments are closed.