அவல் நன்மைகள் | Aval Benefits in Tamil

அவல் நன்மைகள் | Aval Benefits in Tamil

எப்பொழுது நாகரீகம் என்ற பெயரில் நமது பாரம்பரிய உணவுகளை மறந்தோமோ அன்றே நமக்கு நோய்களும் வரத் தொடங்கிவிட்டது.

அப்படி மறந்த உணவுகளில் ஒன்றுதான் இந்த அவல். அவல் என்பது நெல்லை ஊற வைத்து பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமி நீக்கி பயன்படுத்தப்படது.

அன்று snacks என்றால் அவல் மாதிரியான சத்துள்ள உணவுகளை கொடுத்தார்கள்.

ஆனால் இன்றோ இரண்டு நிமிடங்களில் தயாராககிவிடும் என்று விளம்பரத்தில் காட்டப்படும் நூடுல்ஸ் போன்ற தீமை என்று தெரிந்தும் அதை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து சந்தோஷப்படும் பெற்றோர்கள்தான் இன்று அதிகம்.

கண்டிப்பாக இது ஆரோக்கிய கேடுதான். உண்மையில் சிறியவர்கள் முதல் பெரியோர் வரை சாப்பிடக் கூடிய சத்தான உணவுகளில் ஒன்றுதான் அவல்.

வெள்ளை அவல் நன்மைகள்

அவல் தயாரிக்கப்படும் முறை

தனித்து உண்ணும் போதே நல்ல ருசியாக இருக்கும். விதவிதமான உணவு வகைகளாக சமைத்தும் சாப்பிடலாம்.

தற்போது நாம் சாப்பிடும் வெள்ளை அரிசி என்பது நெல்லை உமியெடுத்து நன்கு தீட்டி அதன் சத்தான முனைப்பகுதிகள் எல்லாம் தீட்டப்பட்ட பிறகு வருவது.

ஆனால் அவள் என்பது அப்படியே அரிசியின் முழுமையான சத்துக்களையும் உள்ளடக்கியதாக உள்ளது.

இது நெல்லை ஊற வைத்து இடித்து, அதிலிருந்து உமியை நீக்கி அவளாக பயன்படுத்தப்படுகிறது.

கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும் ஊட்டச்சத்துக்கள் ஏராளம். முக்கியமாக அரிசி நிறத்தைப் பொறுத்து ஊட்டச்சத்திலும் மாற்றங்கள் ஏற்படும்.

வெள்ளை மற்றும் சிவப்பு அவலைத்தான் நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.

இரண்டில் எது மிகவும் நல்லது என்று பார்த்தால் சிவப்பு அவல் தான்.

avul in tamil

அவல் பயன்கள்

உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சி தருகிறது. காலையில் அவள் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உடல் உதவும். அவலை அப்படியே வேக வைக்காமல் வெல்லம் கலந்து சாப்பிடத் தரலாம்.

நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும் பொழுது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

சிவப்பு அவல் நன்மைகள்

இது பிசினி போன்ற சிவப்பு அரிசி ரகங்கள்ல இருந்து தயாரிக்கப்படுகிறது.

இதிலுள்ள நிறமி அவலி ன் சி வப்பு நிறத்திற்கு காரணம். சிவப்பு அவளில், நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், துத்தநாகம், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

இந்த சிவப்பு அவளை உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

நேரத்திற்கு பசிக்காது. உடலை உறுதியாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பசியைப் போக்கும்.

சிவப்பு அவல் தீமைகள்

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும். உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து ஆரோக்கியமான உடல் எடையைப் பெற உதவும்.

ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கைக்கு உதவும். ரத்த சோகை வராமல் காக்கும். மூளை புத்துணர்ச்சியாக்கும்.

புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களை குடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கும். வாய்ப்புண்ணை குணப்படுத்தும்.

முக்கியமாக பட்டை தீட்டப்படாத அரிசியில் தயாரிக்கப்படுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கும், இது பரிந்துரைக்கப்படுகிறது.

எப்படி சாப்பிடலாம்?

பச்சையாக அப்படியே சாப்பிடலாம். வேற காய்கறிகளுடன் சேர்த்து வேகவைத்தும் சாப்பிடலாம்.

வெந்நீர், பால்,ஜூஸ், தயிரில் ஊற வைத்தும் சாப்பிடலாம். நெய் அல்லது வெண்ணெயுடன் கலந்து சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம்.

பாயாசம், புட்டு, கஞ்சி, உப்புமா என சமைத்தும் சாப்பிடலாம். அதே போன்று உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு வேளை உணவாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு, அவளை ஊற வைத்து சிறிதளவு நாட்டுச் சர்க்கரை துருவிய தேங்காய் சேர்த்துக் கொடுத்தால அத்தனை நல்லது.

நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து உருண்டை செய்தும் குழந்தைகளுக்குத் தரலாம்.

முக்கியமாக, திணையவல், கம்பு அவல், கேழ்வ அவள் போன்ற விதவிதமான அவல்கள் தற்போது கிடைக்கின்றன. அவற்றையும் வாங்கி பயன்படுத்தலாம்.

சத்துக்களும் அதிகம். சுவையும் வித்தியாசமாக இருக்கும். மேலும் ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகளும், உடல் எடையை குறைக்கவும், நீரிழிவு நோய் மூலம் ஏற்படும் பாதிப்புகளை குறையவும் உதவியாக இருக்கும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning