திணை அரிசி பயன்கள் |Thinai Arisi Benefits in Tamil

திணை அரிசி பயன்கள் | Thinai Arisi Benefits in Tamil

திணை அரிசி நம் முன்னோர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்திய சிறுதானிய உணவுகளில் ஒன்று திணை.

உலகிலேயே அதிகம் பயிரிடப்படக்கூடிய தானியமும் கூட திணை தான்.

இதனுடைய தாயகம் சீனா என்பதினால் இதனை Chinese millet என்றும் அழைக்கின்றனர்.

திணையில மெந்தினை, கருந்தினை, மஞ்சள்தினை என மூன்று வகையான திணை அரிசிகள் உண்டு.

திணையில் உள்ள சத்துக்கள்

புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, Bவைட்டமின்ஸ்களான, டயமின்,நியாசின்,மற்றும் அதிகப்படியான அமின அமிலங்களையும் கொண்டது திணை அரிசி.

இவ்வளவு சத்துக்கள் கொண்ட திணை நம் உடலுக்கு உணவாக மட்டுமல்ல மருந்தாகவும் செயல்படக்கூடியது.

உடலை உறுதி

உடற்பயிற்சி மற்றும் கடினமான வேலை செய்பவர்களுக்கு மிகச்சிறந்த உணவு, திணை அரிசி. திணையில தசைகளுக்கும், எலும்புகளுக்கு அவசியமான புரதம் மற்றும் கால்சியம் அதிக அளவில் நிறைந்திருக்கிறது.

இது தசைகள் மற்றும் எலும்புகள் உறுதியாகவும், வலிமையாக இருக்க உதவி செய்யும். நீண்ட நாட்கள் நோயினால் அவதியுட்டு உடல் மெலிந்தவர்களின் உடலையும் தேற்றும் ஆற்றல் இந்த திணை அரிசிக்கு உண்டு.

எனவே உடலை உறுதியாகவும், வலிமையாகவும் வைத்து கொள்ள நினைப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவு தினை அரிசி.

திணை அரிசி பயன்கள் Thinai Arisi Benefits in Tamil

இருதயம்

திணையில் இருதய ஆரோக்கியத்துக்கு அவசியமான வைட்டமின் பி, வைட்டமின் பி2 போன்ற சத்துக்கள், நல்லளவில் இருக்கிறது.

இது இருதய தசைகளை பலப்படுத்தி இருதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவி செய்யும். இதில் இருக்கக்கூடிய நல்ல கொழுப்பு அமிலங்கள் இதயத்தில் படிந்த கெட்ட கொழுப்பை கரைத்து இருதய அடைப்பு வராமல் தடுக்கும்.

எனவே பலவீனமான இருதயம் இருப்பவர்கள் திணை அரிசி சாப்பிட்டு வர மிகவும் நல்லது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. திணை ஒரு low glycemic index கொண்ட உணவு என்பதினால் இது ரத்தத்தில் மெல்ல மெல்ல சர்க்கரையாக மாறும்.

இதன் மூலமாக ரத்தத்தில் திடீரென சர்க்கரையின் அளவு கூடுதல் தடுக்கப்படும். எனவே இரண்டாம் வகை சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் அரிசிக்கு மாற்றாக இந்த திணை அரிசியை பயன்படுத்தி வர மிகவும் நல்லது.

ரத்த சர்க்கரையின் அளவுகள் சீராக இருக்கும்.

திணை அரிசி பயன்கள் Thinai Arisi Benefits in Tamil

உயிரணுக்கள்

ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்கும். மாறி வரக்கூடிய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இன்றைய தலைமுறை ஆண்கள் பலரும் உயிரணு குறைபாடு தன்மை போன்ற பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.

இவர்கள்திணை மாவுடன் சிறிது நெய் சேர்த்து களியாக சாப்பிட்டு வர ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ஆண்மை குறைபாடு நீங்கும்.

பெண்களுக்கு ஏற்றது

பெண்களுக்கு மிகவும் நல்லது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் கோளாறு காரணமாக anemia போன்ற பிரச்சனையினால பலரும் அவதிப்படுகின்றனர்.

இவர்கள் தினைமாவுடன் கருப்பட்டி சேர்த்து உருண்டைகளாக தினமும் சாப்பிட்டு வர கருப்பை பலப்பட்டு, கருப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுமே குணமாகும்.

திணையில இருக்கக்கூடிய அதிகப்படியான இரும்புச்சத்து உடலில் புதிய ரத்த செல்களை உற்பத்தி செய்து, இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.

திணை அரிசி பயன்கள் Thinai Arisi Benefits in Tamil

ஞாபக மறதி

ஞாபக மறதி பிரச்சனையினால் அவதிப்படுபவர்களுக்கு , மிகவும் நல்லது திணை அரிசி.

திணையில் இருக்கக்கூடிய அதிகப்படியான அமினோ அமிலங்கள் மூளையில் ஆக்சிஜன் சீராக இருக்கவும் மூளையில் புதிய செல்களை உற்பத்தி செய்வதற்கும் உதவி செய்யும்.

இதன் மூலமாக ஞாபக மறதி நோய் குணமாகும். வளரும் குழந்தைகளுக்கு இந்த திணை அரிசி உணவாக கொடுத்து வர அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

தசை பிடிப்பு

தசை பிடிப்பை தடுக்கும். நீண்ட நேரம் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் பலருக்கும் தசைப்பிடிப்பு மற்றும் கால் மறுத்துப்போகுதல் போன்ற பிரச்சனையால் அவதிப்படுவர். அப்படிப்பட்டவர்கள் திணை அரிசி சாப்பிட்டு வர மிகவும் நல்லது.

இது நரம்புகளில் ரத்தம் சீராக இருக்கவும் உடலின் அனைத்து பாகங்களுக்கும் பிராண வாயு என்று சொல்லக்கூடிய ஆக்சிஜன் பரிமாற்றம் சீராக இருக்கவும் உதவி செய்யும்.

திணை அரிசி பயன்கள் Thinai Arisi Benefits in Tamil

சிறுநீரை பெருக்கம்

சிறுநீரகங்களில் கற்கள், அடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற காரணங்களினால் சிறுநீர் சரியாக கழிக்க முடியாமல் சிசிரமப்படுபவர்கள் தினை அரிசி சாப்பிட்டு வர மிகவும் நல்லது.

இது உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து உடல் வறட்சியை நீக்கி சிறுநீரைப் பெருக்கி சிறுநீர் நன்கு பிரிய உதவி செய்யும்.

உடலில் தேவையில்லாமல் இருக்கக்கூடிய கழிவுகளையும், வெளியேற்றும்.எனவே சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த தினை அரிசி சாப்பிட்டு வர மிகவும் நல்லது.

செரிமான உறுப்பு

செரிமான உறுப்புகளை பலப்படுத்தும். நூறு கிராம் தினை அரிசியில் ஆறு புள்ளி ஏழு கிராம் செரிமானத்துக்கு தேவையான நார்ச்சத்து அடங்கி உளள்து.

இது சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணம் ஆவதற்கு உதவி செய்வதோடு செரிமான உறுப்புகளான இரைப்பை, கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகளை பலப்படுத்தி பாதுகாக்கும்.

செரிமான உறுப்புகளில் பிரச்சனை இருப்பவர்கள் இந்த திணை அரிசியை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

திணை அரிசி பயன்கள் Thinai Arisi Benefits in Tamil

பசையம் ஒவ்வாமை(Gluten Allergy)

பசையம் ஒவ்வாமையை போக்கும். கோதுமை, மைதா போன்ற உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு gluten allergyஏற்படுகிறது.

Gluten allergyன்னு சொல்லக்கூடிய எப்போதும் அதிக சோர்வு, வயிற்று இரைச்சல், தலை வலி மற்றும் தோலில் allergy போன்ற பிரச்சனைகள் வந்து அவதிபடுவார்கள்.

திணை அரிசி ஒரு முற்றிலும் gluten free உணவு.எனவே gluten அலர்ஜியினால் அவதிபடுவார்கள் gluten உணவுகளுக்கு மாற்றாக சாப்பிட சிறந்த உணவு இந்த திணை அரிசி.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயம் படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning