பார்லி அரிசி பயன்கள் | Barley Rice Benefits in Tamil

பார்லி அரிசி பயன்கள் | Barley Rice Benefits in Tamil

இந்த காலத்தில் வீட்டில் யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பார்லி கஞ்சி வைத்துக் கொடுப்பார்கள். காரணம் நம் உடலில் உள்ள நிணநீர் சுரப்பிகள்தான் உடலில் நீர்ச்சத்தை பராமரிக்கிறது.

அது அடைக்கப்பட்டால் உடலில் உள்ள தேவையற்ற தண்ணீர் வெளியேற வழியின்றி உடலில் அப்படியே தேங்கிவிடும்.

இதனால் காய்ச்சல் உண்டாகும். தேங்கிய நீரை வெளியேற்ற பார்லி கஞ்சி வைத்துக் கொடுப்பார்கள். இதனால் காய்ச்சலும் குணமாகும்.

அது மட்டுமல்ல இதில் ஊட்டச்சத்துக்களும் ஏராளம் நிறைந்துள்ளது. எளிதில் செரிமானமும் ஆகும். அதேபோன்று கால் வீக்கமாக இருந்தால் நீர் இறங்கும் என்பதற்காகவும் பார்லி கஞ்சி வைத்துக் கொடுப்பார்கள்.

 ஆனால் இந்த அற்புதமான கஞ்சியை ஏறக்குறைய நாம் அனைவரும் மறந்துவிட்டோம் என்று சொல்ல வேண்டும்.

சொல்லப்போனால் இந்த கஞ்சியை தினமும் குடித்து வந்தால் கொடிய நோய்களைக்கூட போக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

இன்று நாம் பார்க்க இருப்பது இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள், கருவுற்ற பெண்கள், ரத்த சோகை உள்ளவர்கள் எலும்பு பலகீனமாக உள்ளவர்கள், இந்த பார்லி கஞ்சியை சாப்பிட்டால் கிடைக்க கூடிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.

இதய நோயாளிகள்

இதய நோயாளிகளுக்கு barley ஒரு மிகச்சிறந்த உணவாகும். இது, உடலில் உள்ள, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவதால் இவர்களுக்கு மிகுந்த நன்மையைக் கொடுக்கும்.

இதற்குக் காரணம் பார்லியில் உள்ள அமிலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.

அது மட்டும் அல்ல LDL என்ற கேட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, HDL என்ற நல்ல கொலஸ்ட்ரால் அளவை, அதிகரிக்க செய்வதிலும் பார்லி மிக சிறப்பாக செயல்படுகிறது.

உடல் எடை

இதில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் ரத்த கொழுப்பை குறைக்கவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

மேலும், உடல் எடையை குறைக்கவும், பார்லியை அரிசியை பயன்படுத்தலாம். உண்மையில் உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் இந்த பார்லி அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்துக்கள் உடலில் படியாமல் தடுத்து உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

சொல்லப்போனால் குறைந்த கலோரி கொண்ட உணவான பார்லி இயற்கையான எடை குறைப்பிற்கு உதவும். அரிசியுடன் ஒப்பிடும் பொழுது இதில் மாவு சத்தும் மிகக் குறைவு.

எனவே, தினமும் கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்கப்பட்டு உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

barley powder in tamil

 

புற்றுநோய்

பார்லியில் இருக்கும் தாவர ஊட்டச்சத்துகள் இயற்கையாகவே புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டதாகும்.

இது மார்பக மற்றும் வேறு எந்த விதமான புற்றுநோய் ஏற்படாமலும் தடுக்க உதவுகிறது.

அதுமட்டுமல்ல செரிமான பிரச்சனைகள் சிக்கல் உள்ளவர்கள் பார்லி கொண்டு செய்யப்பட்ட உணவையோ அல்லது பார்லி கஞ்சியோ தயாரித்து சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களின் நலத்திற்கு மிகவும் சிறந்தது என்றும் கூறப்படுகிறது.

கருவுற்ற பெண்கள்

கருவுற்ற பெண்கள் பார்லி கஞ்சியை தினமும் சாப்பிட்டு வந்தால் சாப்பிட்ட உணவுகள் எளிதில் செரிமானம் ஆகும்.

மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தலைசுற்றல், நீரிழிவு போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவும். முக்கியமாக, கை, கால் போன்றவற்றில் ஏற்படும் வீக்கங்களை குறைக்கும்.

மேலும், கருவுற்ற பெண்களின் ரத்தத்தில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேற்றி உடலை தூய்மைப்படுத்தும் ஆற்றல் பார்லிக்கு உண்டு.

பார்லி அரிசி எப்படி இருக்கும்

நோய் எதிர்ப்பு சக்தி

பார்லியில் இருக்கும் வைட்டமின் சி சத்து, உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலிமையை கொடுக்கிறது. இதனால் நோய் தொற்றுகள், சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

அதே போன்று, ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையும் பொழுது அனீமியா எனப்படும் ரத்த சோகை ஏற்படுகிறது.

இந்த ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதற்கு,வைட்டமின் பி பன்னிரண்டு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

அந்த வகையில் பார்லியில் வைட்டமின் பி பன்னிரண்டு அதிகம் நிறைந்துள்ளது. எனவே, தினமும் காலையில் வெறும் வயிற்றில் பார்லி கஞ்சி வைத்து குடித்தால் ரத்த சோகை ஏற்படாமல் காக்கும். உடலுக்கும் வலிமையைத் தரும்.

barley rice benefits in tamil

சர்க்கரை

அதே போன்று, கோதுமையிலும், ஓட்ஸ்சிலும் அதிக நார்ச்சத்து இருந்தாலும் அவை தயாரிக்கும் பொழுது, நார்ச்சத்து ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், பார்லியில் , பீட்டா குளுக்கோஸ், நார்ச்சத்து எந்த வகையான தயாரிப்பு முறையிலும் அழிவதில்லை.

இது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். எனவே, சர்க்கரை நோயாளிகள் பார்லி அரசி கஞ்சியினை தினசரி தினமும் கஞ்சியாக சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. மேலும், பார்லி அரசியில் உள்ள வைட்டமின் டி நரம்புகளையும் பலப்படுத்தும்.

பார்லி அரிசி என்றால் என்ன

எலும்புகளின் வலிமை

பார்லி அரசியில் இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்றவை எலும்புகளை வலிமை படுத்துகிறது. முக்கியமாக இதில் இருக்கும் பாஸ்பரஸ் எலும்பு மற்றும் பல் சார்ந்த கோளாறுகளை, சரி செய்ய உதவுகிறது. எனவே பார்லி கஞ்சி தினமும் குடித்து வருவதன் மூலமாக எலும்பு மற்றும் பற்கள் நன்கு உறுதி அடையும்.

வயதானவர்களுக்கு வரும் கீல்வாதம் மற்றும் osteoporosis போன்ற குறைபாடுகளும் நீங்கும். இது சிறுநீரகத்தின் செயலாற்ற ஊக்குவித்து செரிமான கோளாறுகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.

பித்தப்பை கற்கள்

அன்றாட உணவில் பார்லி அரசி சேர்த்துக் கொண்டு வந்தால் பித்தப்பை கற்கள் உண்டாகாமல் பாதுகாக்கிறது.

இதில் இருக்கும் எளிமையாக கரையும் தன்மை உடைய புரதம் பித்தப்பை கற்கள் அபாயத்தை வெகுவாக குறைக்க உதவுகிறது.

what is barley in tamil

பார்லி கஞ்சி செய்முறை

தேவையான பார்லி அரசியை எடுத்துக்கொண்டு அதை வாணலியில் போட்டு வறுத்து வைத்து கொள்ளவும் அது ஆறிய பின் மிக்ஸியில் போட்டு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டு டம்ளர் தண்ணீர் அளவிற்கு இரண்டு தேக்கரண்டி பார்லி பவுடர் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள்.

இப்பொழுது இதை உப்பு சேர்த்து அல்லது உப்பு சேர்க்காமல், அப்படியே கூட சாப்பிடலாம்.

எனவே இந்த பார்லி கஞ்சியை டயட்டில் இருப்பவர்கள் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை நோயாளிகள் இதயக் கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என்று அனைவரும், தினமும் சாப்பிட்டு வரலாம்.

அடிக்கட சிறுநீர் தொற்றால் பாதிக்கப்படுவோரும், பார்லி கஞ்சி குடிக்கலாம். பொதுவாக இதை காலை வேளையில் குடிப்பது நல்லது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயாம் படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning