நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நுங்கு பயன்கள்

nungu benefits in tamil

நாம் சமைத்து உண்ணக் கூடிய உணவுகளை விட இயற்கையில் விளைகின்ற பொருட்களை சமைக்காமல் அவற்றினைப் அப்படியே சாப்பிடுவதன் மூலம் அதனுடைய முழுமையான சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றது.

பனை மரத்திற்கு தமிழர்களின் பாரம்பரியதில்  தனிச்சிறப்பு  நுங்கிற்கு உள்ளது.

பனை மரத்திலிருந்து பல வகையான பயனுள்ள பொருட்களை நாம் பெறுகின்றோம். பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பனவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, பதநீர் அதன் வரிசையில் நுங்கும் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

நாம் நுங்கினை சாப்பிடும் பொழுது மேலே இருக்கும் தோலை நீக்கிவிட்டு அதன் உள்ளிருக்கும் சதைப்பகுதியை மட்டும் சாப்பிடுவோம்.

ஆனால் உண்மையில் மேலே உள்ள தோல் பகுதி துவர்ப்பு சுவையுடன் இருந்தாலும் அதில்தான் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.

ஆகவே நுங்கினை சாப்பிடும்பொழுது தோளோடு சேர்த்து சாப்பிட பழகுங்கள்.

இதனை சாப்பிட்டு வந்தால் நமக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ நன்மைகள் என்பதனை பற்றி இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம்.

 கண் பார்வை

கோடை காலத்தில் அதிக வெப்பத்தினாலும் மற்றும் அதிக நேரங்கள் கண்விழித்து இருப்பதாலும் கண் எரிச்சல் மற்றும் கண் வலி போன்றவை ஏற்படுகிறது.

எனவே இவர்கள் தினமும் காலைகளில் நுங்கினை சாப்பிட்டு வருவதன் மூலம் கண்கள் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

மேலும் இது கண் பார்வையினை மேம்படுத்துகிறது.

 உடல் எடையை குறைக்க

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் தங்களது உடல் எடையை குறைப்பதற்கு அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள்.

இந்த நுங்கு உடல் எடையினை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.

நுங்கில் உள்ள சத்துக்கள் அதீத பசி உணர்வினை கட்டுப்படுத்துகிறது மேலும் உடலில் நீர் சுரப்பினை அதிகப்படுத்தி உடல் எடையை குறைக்க வழிவகுக்கின்றது.

 மார்பக புற்றுநோய்

இன்றைய காலகட்டத்தில் நாம் சமைத்து சாப்பிடக் கூடிய உணவே நமக்கு எமனாக விளங்குகிறது.

பெண்களுக்கு ஏற்படுகின்ற புற்றுநோய்களில் முதன்மையாக இருப்பது மார்பகப் புற்றுநோய் தான்.

மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க பெண்கள் தங்களது உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் பெரும்பாலும் இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.

அந்த வகையில் நுங்கினை சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். இதில் உள்ள ஆன்தோசயனின் எனப்படுகின்ற ஒரு வேதிப்பொருள் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க பெருமளவில் உதவி செய்கிறது.

 வாந்தி மற்றும் குமட்டல்

கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு  ஒவ்வாமை பிரச்சனை காரணமாக  வயிற்றில் அட்ரீனலின் சுரப்பு அதிகம் ஏற்படுகிறது.இதனால் குமட்டல் உணர்வு மற்றும் வாந்தி ஏற்படுகிறது.

இந்த பிரச்சனை உள்ளவர்கள் நுங்கினை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம் ஹார்மோன் சுரப்பின் அளவை சரிசெய்து அடிக்கடி வாந்தி குமட்டல் வருவதை குறைக்கும்.

 கருவுற்ற பெண்கள்

கருவுற்ற பெண்களின் வயிற்றில் குழந்தை வளரத் தொடங்கியது முதல் பெற்றெடுக்கும் வரை மிகவும் சிரமப்படுகின்றனர்.

அந்த வகையில் குழந்தை வளரத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் சாப்பிடும் உணவு செரிமானம் ஏற்படாமல் இருப்பது, மலச்சிக்கல் ஏற்படுவது மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகின்றது.

சரியான விகிதத்தில் நுங்கினை கர்ப்பகாலத்தில் சாப்பிட்டு வருவதன் மூலம் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.

நெஞ்செரிச்சல் ஏற்படுவது மலச்சிக்கல் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

உடல் சத்து

கடின உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் உடல் வெப்பம் ஆகும் வகையில் பணிபுரிபவர்கள் ஆகியவர்களுக்கு உடலிலுள்ள நீர்ச்சத்து மிக எளிதில் குறையும்.

மேலும் சில அத்தியாவசியமான சத்துக்கள் உடலை விட்டு வெளியேறுகிறது.

இவர்கள் தினமும் நுங்கினை சாப்பிட்டு வரும்பொழுது இழந்த சத்துக்களை மீண்டும் சமன் செய்ய முடியும்.

வெப்பம் கோடைகாலம் வந்து விட்டாலே வெப்பத்தின் அளவு உச்சநிலையில் இருக்கும் காற்று அனல் காற்றாக வீசும்.

இச்சமயத்தில் ஒரு சிலருக்கு உடலில் உள்ள நீர்ச்சத்து குறைகின்றது மற்றும் இரத்த ஓட்டத்தில் பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

இதனால் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படுகின்ற மயக்கநிலை ஏற்படக்கூடும்.

இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலையில் நுங்கினை சாப்பிட்டுவிட்டு வெளியே செல்வதன் மூலம் உடலினை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கலாம்.

அம்மை நோய்

கோடைகாலம் வந்து விட்டாலே பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது அம்மை நோயினால் தான். வெப்ப அதிகரிப்பால் ஒரு சில கிருமிகள் பெருகுவதாலும் சின்னம்மை பெரியம்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்றது.

கோடை காலங்களில் உடல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அம்மை நோய்களை விரைவில் நீக்கக் கூடிய ஒரு உணவாக நுங்கு இருக்கிறது.

எனவே அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் நுங்கினை சரியான அளவு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

தாகம் தணிய

கோடைகாலத்தில் உடலில் எவ்வளவு நீர் இருந்தாலும் நீர் பற்றாக்குறை ஏற்படும்.

செயற்கை குளிர்பானங்கள், ஐஸ் வாட்டர் போன்றவை குடிக்கும்போது தொண்டைக்கு இதமாக இருந்தாலும் ஆரோக்கியத்தை கெடுப்பதாக உள்ளது.

இதனையும் தாண்டி எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்கவில்லை என்று சொல்பவர்கள் நுங்கு சாப்பிட்டால் தாகம் குறையும்.

 அல்சர்

அல்சர் என்பது உணவுக்குழாய்,இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியில் உருவாகும் ஒரு வகை புண் தான்.

கோடைகாலத்தில் அல்சர் உள்ளவர்கள் உணவு முறையினை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் தவறுபவர்கள் அதிக வீரியத்திற்கு உள்ளாவார்கள்.

சரியான  உணவு பழக்க வழக்கத்தின் மூலமாகவே குடற்புண்களை கட்டுப்படுத்த முடியும்.

தினசரி நுங்கு எடுத்துக்கொள்வதன் மூலம் அல்சரின் தீவிரத் தன்மையிலிருந்து கட்டுப்படுத்த முடியும்.

நுங்கினை சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்று புண் மற்றும் குடல் புண் குணமடைய  வாய்ப்புகள் உள்ளது.

இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்தம் செய்கின்றது.

குடல் பகுதியில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.

நுங்கினை சாப்பிடும்பொழுது அதன் குளிர்ச்சித் தன்மை வயிறு எரிச்சலுக்கு ஒரு இதமான குளுமையை தரும்.

 வியர்குரு

கோடைகாலம் வந்து விட்டாலே அதிகமான வியர்வை துளிகள் உடலில் சுரக்கத் தொடங்கிவிடும்.

இதனால் சருமத்தில் வறட்சி, எரிச்சல் மற்றும் சரும வியாதிகள் உண்டாகும். கோடை காலத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் வியர்குரு பிரச்சனையை ஏற்படுவது உண்டு.

நுங்கு சாப்பிடும் பொழுது அவ்வப்பொழுது வியர்குரு மீது தடவி வரும்பொழுது மறையும். அதேபோன்று சூட்டுக் கொப்புளங்கள் மீது நுங்கு தொடவுவதன் மூலம் எரிச்சல் இல்லாமல் விரைவில் குணமடையும்.

இதையும் படிக்கலாமே

மஞ்சள் தூள் பயன்கள் | Turmeric Powder Benefits

Here we have nungu benefits in tamil. Its also Called as panai nungu or pana nungu or nungu fruit benefits or nungu uses or nungu benefits in tamil or pana nongu or nongu fruit or nungu payangal or nungu uses in tamil or nungu benefits during pregnancy or நுங்கு பயன்கள் or நுங்கு தோலின் பயன்கள் or பனை நுங்கு பயன்கள் or பனை மரம் நுங்கு or பனை மரம் சிறப்பு or pana nungu payangal

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning