சடா மாஞ்சில் மருத்துவ பயன்கள் | Jatamansi in Tamil

சடா மாஞ்சில் மருத்துவ பயன்கள் | Jatamansi in Tamil

சடா மாஞ்சில் இந்தியாவில், மூன்றாயிரம் வருடங்களுக்கு மேலாக உபயோகிக்கப்பட்டு வரும் ஒரு மூலிகை செடியாகும்.

இது இமயமலையில் மூன்றாயிரம் முதல் நான்காயிரத்து ஐநூறு மீட்டர் உயரத்தில் சிக்கிம்,கூடான் பகுதிகளிலும் வளரும்.

தாவர விவரம்

மனமுடைய சடா மாஞ்சில் தாவரம் பத்து முதல் அறுபது சென்டிமீட்டர் உயரம் வரை வளரும்.

தன் தடிப்பு பூமிக்கு மேல் மிருதுவான குறைந்த நீளமுள்ள நார்களுடன் காணப்படும்.

இலைகள் பதினைந்திலிருந்து இருபது சென்டிமீட்டர் நீளமும், இரண்டு புள்ளி ஐந்து சென்டிமீட்டர் அகலமும் உடையவை.

இதில் நீண்ட தண்டுக்கிழங்கு அல்லது ஆணிவேர் மற்றும் பல சன்னி வேர்களும் உண்டு.

பூக்கள், மங்கிய சிவப்பு அல்லது நீல நிறமுள்ளவை. இதன் தண்டு, கிழங்கு முடி போன்ற நார்களுடன், தாடி போல் காணப்படுவதால் சடா மாஞ்சில் என்ற பெயர் வந்தது.

Sada Manjal Uses in Tamil சடா மாஞ்சில் மருத்துவ பயன்கள்1

இதன் தண்டுகளும், வேர்களும் மருத்துவத்தில் பயன்படுகின்றன.

தண்டுக்கிழங்கு பழுப்பு நிறத்துடன் எட்டு முதல் பனிரெண்டு மில்லி மீட்டர் சுற்றளவுடன் வாசனையாக இருக்கும்.

சடா மாஞ்சில் பயிரிட குளிர்ந்த உலர்ந்த சீதோஷ்ண நிலை தேவை. இதற்கு ஈரமும், இலை மக்கும் நிறைந்த மண் ஏற்றது.

நட்ட பின் அடிக்கடி களை எடுக்க வேண்டும். சடாமாஞ்சில் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் நல்ல பலன் தர ஆரம்பிக்கும்.

ஒரு ஹெக்டேருக்கு எழுநூற்று எண்பது கிலோ தண்டு கிழங்கும், வேர்களும் மண் நீக்கப்பட்டு நிழலில் காய வைக்கப்படுகின்றன.

பின் தரத்திற்கேற்ப பிரிக்கப்பட்டு சாக்கு மூட்டைகளில் கட்டப்படுகின்றன. பிறகு நீராவியானால் ஆவியாக்கி குளிரசெய்யும் முறையினால் தண்டுகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படும்.

இந்த எண்ணெய் எளிதில் ஆவியாகும்.

Sada Manjal Uses in Tamil சடா மாஞ்சில் மருத்துவ பயன்கள்1

சடா மாஞ்சில் பொது குணங்கள்

உஷ்ணம் உண்டாக்கும், சிறுநீர் பெருக்கி, கோலை அகற்றி, மலம் விலக்கி.

பயன்கள்

நரம்புத்தளர்ச்சி, மனநோய், காக்காய் வலிப்பு போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. மனதை அமைதிப்படுத்தும், தூக்கம் வரச் செய்யும்.

நீண்ட நாள் மலச்சிக்கலுக்கு ஓமம், இஞ்சி, லவங்கப்பட்டை, சர்க்கரை சேர்த்து சடா மாஞ்சில் கொடுக்கப்படுகிறது.

வயிற்று வலி, இசைவுகள், வயிற்றுப் பூச்சிகள் இவற்றை நீக்கும்.

Sada Manjal Uses in Tamil சடா மாஞ்சில் மருத்துவ பயன்கள்1

பித்தத்தை தணிக்கும். மாதவிடாய் கோளாறுகளுக்கு வலி மிகுந்த கடினமான மாதவிடாய்க்கு சடா மாஞ்சில் நல்ல மருந்து.

இது மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.

இதயத்துடிப்பு, இதயத்துடிப்பை சீராக்கவும், குறைந்த இரத்த அழுத்தத்திற்கும், சடா மாஞ்சில் பயன்படுத்தப்படுகிறது.

சரும நோய்கள், குஷ்ட ரோகத்திற்கும், இதர தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், சடா மாஞ்சில் மருந்தாக கொடுக்கப்படுகிறது.

மேனிக்கு பளபளப்பை உண்டாக்குகிறது.

சடா மாஞ்சில் எண்ணெயின் பயன்கள்

நரைத்த தலைமுடியை கருப்பாகும். தலைமுடி நன்கு வளரும். பல தலைமுடி தைலங்களில், சடா மாஞ்சில் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

இதனை நல்லெண்ணையுடன் கலந்து, தலைக்கு தேய்த்து குளித்தால், நரம்பு தளர்ச்சி குறையும்.

வாசனை திரவியங்கள் தயாரிப்புகளிலும், சடா மாஞ்சில் எண்ணெய் பயன்படுகிறது.

Sada Manjal Uses in Tamil சடா மாஞ்சில் மருத்துவ பயன்கள்1

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயம் படிக்கவும்.

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning