ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள் | Hemoglobin Increase Food in Tamil

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள் | Hemoglobin Increase Food in Tamil

ஹீமோகுளோபின் தான் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆக்ஸிஜன்ஐ எடுத்துச் செல்கிறது.

இந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை ஏற்படும். அதாவது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறையும் பொழுது உடல் சோர்வு, மயக்கம், சீரற்ற இதயத்துடிப்பு, தலை வலி, கண்கள், நகங்கள் வெளிறி காணப்படுதல் உடலில் வலு இல்லாதது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.

ஒரு வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் பொழுது பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளி போடும் மனநிலை ஏற்படுதல். போன்ற அறிகுறிகள் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும்.

இரும்பு சத்து குறைபாட்டால் ஹீமோகுளோபின் குறைந்தாலும் வைட்டமின் சி பற்றாக்குறை இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறையும்.

hemoglobin tamil

பேரீச்சம் பழம்

பேரீச்சம் பழத்தில் அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. அதாவது நூறு கிராம் பேரீச்சம் பழத்தில் ஒரு நாளுக்குத் தேவையான இரும்பு சத்தில் ஐம்பது சதவீதம் நிறைந்துள்ளது.

அது மட்டுமல்ல இதில் கால்சியம், புரதம், நார்ச்சத்து மற்றும் கனிம சத்துகள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே தினமும் இரண்டு அல்லது மூன்று பேரீச்சம் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

ய்யாப்பழம்

கொய்யாப்பழத்தில் புரதம், கொழுப்பு மற்றும் மாவு சத்துக்கள் சிறிதளவே இருந்தாலும் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம், பொட்டாசியம் ஆகியவை அதிகமாக உள்ளன.

முக்கியமாக விட்டமின் சி அதிக அளவில் இது நிறைந்துள்ளது. சொல்லப்போனால் இரும்பு சத்தை கிரகிக்க வைட்டமின் சி மிகவும் அவசியம்.

மேலும் இதில் இரும்பு சத்து நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலிமை பெறும். முக்கியமாக, ஹீமோகுளோபின் விரைவில் அதிகரிக்கும்.

மேலும் இது ஒரு சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுவதால் குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

முருங்கைக்கீரை

முருங்கைக்கீரையில் அதிக அளவில் இரும்பு சத்து நிறைந்துள்ளது. எனவே முருங்கைக்கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஓட ஆரம்பிக்கும்.

ஆரஞ்சு பழத்தில் உள்ளவை போன்று ஏழு மடங்கு அதிக அளவில் வைட்டமின் சி இதில் உள்ளது. இரும்பு சத்தை உறிஞ்ச வைட்டமின் சி முக்கியம் என்பதால் முருங்கைக்கீரை ஒரு அருமையான ஹீமோகுளோபின் அதிகரிக்கும் உணவு.

மேலும் முருங்கைக்கீரை சூப் செய்து அடிக்கடி சப்பிட்டு வந்தாலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை உடலும் பலம் பெறும்.

hemoglobin rich foods in tamil

தேன்

தேனில் இரும்பு சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால் இவற்றை வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தி வந்தால் உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. எனவே ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க அடிக்கடி பீட்ரூட்டை சேர்த்துக் கொள்வது அவசியம்.

பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள் மூலம் நமது உடலில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே போன்று வாரத்தில் மூன்று முறை பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முடியும்.

செம்பருத்திப் பூ

செம்பருத்திப் பூவின் நடுவில் இருக்கும் மகரந்தத்தை நீக்கி விட்டு சுற்றியுள்ள இதழ்களை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் போதும் புதுரத்தம் உற்பத்தியாகும்.

உலர்ந்த திராட்சை

நூறு கிராம் உலர்ந்த திராட்சையில் இருபத்தி மூணு சதவீதம் இரும்பு சத்து நிறைந்துள்ளது. எனவே, தினமும் ஒரு பத்து உலர்ந்த திராட்சையை முதல் நாள் இரவு ஊற வைத்து அடுத்த நாள் காலையில் நீரையும் பழத்தையும் சாப்பிட்டு விட வேண்டும்.

தொடர்ந்து சாப்பிட்டு வந்தால ஒரே வாரத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிப்பதை கண்கூடாக காண முடியும்.

hemoglobin increase food in tamil

மேலும்

மேற்கண்ட உணவு வகைகளை ம் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் ஒரே வாரத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிப்பதை கண்கூடாக பார்க்க முடியும். முக்கியமாக காபி தேநீர் அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இதனையும் படிக்கலாமே

அணைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning