செம்பருத்தி பூ பயன்கள்   semparuthi poo benefits in tamil

செம்பருத்தி பூ பயன்கள் |  semparuthi poo benefits in tamil

செம்பருத்தி பூ பயன்கள் |  semparuthi poo benefits in tamil

நோய்கள் வந்தால் உடனே மருத்துவரிடம் சென்று மணிக்கணக்காக காத்திருந்து நமது பணத்தையும் நேரத்தையும் செலவழித்துவிட்டு இவ்வளவு செலவு என்று புலம்புவோமே தவிர நோய்கள் வராமல் எச்சரிக்கையாக இருக்க மாட்டோம்.

அது எப்படி எச்சரிக்கையாக இருக்க முடியும் என்றுதானே மனதுக்குள் புலம்புகிறீர்கள்.

இறைவன் நோய்களுக்கான இயற்கை தீர்வை நமக்கு அருகிலேயே கொட்டி கொடுத்துள்ளான்.

அதில் ஒன்றுதான் செம்பருத்தி பூ என்கின்ற அற்புத மூலிகை.

இந்த செம்பருத்தி பூவை தினமும் ஐந்து பூக்கள் என்று ஒரு மாதம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.

சித்தர்கள் செம்பருத்தியை தங்கப் புஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றனர்.

இதனால்தான் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர்.

செம்பருத்தி பூ மிகவும் அதிக மருத்துவ குணங்களைக் கொண்டது.

இதில் இரண்டு வகைகள் உள்ளது. ஒரு வகைப் பூக்கள் அடுக்கடுக்காக காட்சியளிக்கும். மற்றொரு வகை தனித்தனியாக அகலமாக காட்சியளிக்கும்.

இதுதான் மருத்துவரீதியில் சிறந்தது.

இதில் அமிலங்கள்,குளுகோசைடுகள், ரிபோஃப்ளேவின், கரோட்டின் என பல வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.

இந்த செம்பருத்தி பூவை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நன்மைகள் என்று இப்பொழுது பார்ப்போம்.

அல்சர்

அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வுகள் சீற்றம் அடைந்து வயிற்றின் உட்புறச் சுவர்களை தாக்குகின்றன.

இதனால் வாயிலும் புண்கள் உருவாகின்றன. இதை அல்சர் என்று சொல்கின்றோம்.

இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி ஐந்து பூக்களின் இதழ்களை மென்று சாப்பிட்டு வயிற்று வந்தால் புண்கள் குணமாகும்.

கருப்பை பாதிப்பு

கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் மிருதுவாக ஆகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்தி பூ சிறந்த மருந்து.

ஐந்து அல்லது பத்து செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் குடித்து வந்தால் வெகு விரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகவும்.

துவர்ப்பு சுவை கொண்ட செம்பருத்தி பூ உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியினை கொடுக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாக ஆகும்.

மாதவிடாய்

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலைவலி, மயக்கம் போன்றவை குறையும். உடலில் ஏற்படும் சோர்வும் நீங்கும். இரத்தம் தூய்மை அடையும், உடல் பளபளப்பாகும்.

குழந்தைகளுக்கு ஏற்றது

வளரும் குழந்தைகள் செம்பருத்திப் பூவை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி, நினைவாற்றல், புத்திக்கூர்மை, மூளை பலம் ஏற்படும்.

சிறுவர்கள் சாப்பிடும் பொழுது இந்த பூவில் உள்ள மகரந்த காம்பை மட்டும் நீக்கி விட வேண்டும்.

பெண்கள் பிரட்சனை

சில பெண்கள் வெள்ளைப்படுதல் ஆல் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இந்த வெள்ளைபடுதல் குணமாக தினமும் ஐந்து செம்பருத்தி பூ இதழ்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

பொதுவாக பெண்கள் தினமும் ஐந்து பூக்களை சாப்பிட்டு வந்தால் வெள்ளை வெட்டை, இரத்த சோகை, பலவீனம், மூட்டுவலி, இடுப்பு வலி, மாதவிடாய் கோளாறுகள் நீங்குவதுடன் கண்களுக்கு நல்ல ஒளியும் தரும், பெண்மையும் வளரும்.

உடல் பலம்

தினமும் ஐந்து செம்பருத்திப் பூக்களை நாற்பத்தி எட்டு நாட்கள் ஒரு ஆண் சாப்பிட்டு வந்தால் இழந்த சக்தியையும் பலத்தையும் பெறுவர்.

தேவையற்ற கொழுப்பு

மேலும் தேவையற்ற கொழுப்பைக் குறைத்து, கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதையும் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

பொதுவாக இப்படி காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் விலகிவிடும் என்றே சொல்லலாம்.

முக்கியமாக இதய நோய் என்பது எட்டி கூட பார்க்காது. ஒரு மாதம் சாப்பிட்டாலே அதன் பலன்கள் தெரிய ஆரம்பிக்கும்.

கண்டிப்பாக நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். எனவே வீட்டில் ஒரு செம்பருத்தி செடி இருப்பது ஒரு மருத்துவர் இருப்பதற்கு சமம் இல்லாதவர்கள் இன்றே ஒரு செம்பருத்தி செடியை நட்டுவிடுங்கள்.

இதனையும் படிக்கலாமே

உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil(Opens in a new browser tab)

உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா(Opens in a new browser tab)

முட்டை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா(Opens in a new browser tab)