வெள்ளை சர்க்கரை தீமைகள் | Side Effects of White Sugar in Tamil
இன்றைக்கு வெள்ளை சர்க்கரையை நாள் முழுவதும் உட்கொள்ளாமல் இருந்தால் உடலில் நடக்கும் எண்ணற்ற மாற்றங்களை பற்றி பார்க்கலாம்.
நமது பாரம்பரிய இனிப்பு வகைகளான நாட்டுச் சர்க்கரை கருப்பட்டி, வெல்லம், பனங்கற்கண்டு, தேன் போன்றவற்றை பயன்படுத்துவதை குறைத்து விட்டு வெள்ளை விஷம் எனப்படும் இந்த வெள்ளை நிற சர்க்கரையை தினந்தோறும் Tea, Coffee இல் மட்டுமின்றி சாக்லேட்ஸ், மிட்டாய்கள் இனிப்பு பலகாரங்கள் என அனைத்திலும் கலந்து உட்கொண்டு வருகிறோம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த வெள்ளைச் சர்க்கரையை ஏதாவது ஒரு வடிவில் தினந்தோறும் எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் படிப்படியாக பாதிக்கிறது.
வெள்ளை சர்க்கரை அது நமது உடலுக்குள் செல்லாமல் இருந்தால் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்று பார்க்கலாம்.
வெள்ளை சர்க்கரை எப்படி தயாரிக்கப்படுகிறது?
கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் brown நிற சர்க்கரையை வெண்மை நிறமாக மாற்றுவதற்கு chlorine, sulfur dioxide, caustic soda, சலவை சோடா என இன்னும் நமக்குத் தெரியாத எத்தனையோ ரசாயனங்கள் கலந்து அதிகப்படியான கொதிநிலையில் தயாரிக்கப்படுகிறது.
ரசாயன சர்க்கரையை உட்கொள்வதே உடலுக்கு மிகப்பெரிய தீமைகளை ஏற்படுத்தும். இதைவிட கொடுமை என்னவென்றால் இது தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்கு மேல் இந்த சர்க்கரையை சாப்பிட்டால் அதில் உள்ள sulfur dioxide எண்ணும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியம் மிகுந்த விஷத்தன்மையாக மாறிவிடுமாம்.
வெள்ளை சர்க்கரை தீமைகள்
ரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகரிப்பதற்கு இந்த வெள்ளைச் சர்க்கரையும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
வெள்ளைச் சர்க்கரையை ஒரு நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உடலில் கெட்ட கொழுப்புக்களை ஏற்படுத்தும் காரணிகள் குறைந்து உடலில் இருந்து வெளியேறுகிறது.
ரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மையும் விஷத்தன்மையும் குறைந்து ரத்தம் படிப்படியாக சுத்தம் அடைகிறது.
இன்று சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் இந்த வெள்ளைச் சர்க்கரை உடலுக்குள் செல்லாமல் இருக்கும் பொழுது கல்லீரல் மற்றும் கணைய செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கிறது.
மேலும் தன்னைத்தானே புதுப்பிக்கவும் செய்கிறது. மேலும் எலும்புகளில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உறிஞ்சப்படுவதும் அரிக்கப்படுவதும் குறைகிறது.
எலும்புகள், மூட்டுக்கள் பாதுகாக்கப்படுகிறது. எலும்பு இணைப்புகளில் உள்ள பசைத்தன்மையும் அதிகரிக்கிறது.
வெள்ளை சர்க்கரை தீமைகள்
இருபத்தி நான்கு மணி நேர வெள்ளை சர்க்கரை உடலுக்குள் செல்லாமல் இருக்கும் பொழுது புற்றுநோய் செல்கள் பெருகுவது தடுக்கப்படுகிறது.
வெள்ளை சர்க்கரையை நாம் சாப்பிடாமல் இருந்தால் இரைப்பை, உணவுக்குழல், குடல் போன்றவற்றின் உட்சுவர் அரிக்கப்படும் தன்மை குறைகிறது. அல்சர் வருவதற்கு இந்த வெள்ளை சர்க்கரையில் உள்ள ஆபத்தான ரசாயனங்களும் ஒரு மறைமுக காரணமாக அமைகிறது.
வெள்ளை சர்க்கரையால் நமது உடலில் கலந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கு நமது சிறுநீரகங்கள் அதிகப்படியாக வேலை செய்வதால் நாளடைவில் சிறுநீரக பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
மேலும் ரத்த அழுத்தம் மோசமான நோய் எதிர்ப்பு மண்டலம் போன்றவையும் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.
பாதிப்புகளை ஏற்படுத்தும் வெள்ளை சர்க்கரையை எப்பொழுதும் நாம் உட்கொள்ளாமல் இருந்தால் எண்ணற்ற நோய்கள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.
மாற்று பொருட்கள்
வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு, வெல்லம் போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமும் பன்மடங்கு அதிகரிக்கும்.
இதனையும் படிக்கலாமே
- துவரம் பருப்பு பயன்கள் | Thuvaram Paruppu in Tamil(Opens in a new browser tab)
- கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)
- கொடுக்காப்புளி பயன்கள் | Kodukapuli Benefits Tamil(Opens in a new browser tab)
- மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்
- உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil
- கருப்பு உளுந்து பயன்கள் | Karuppu Ulunthu
- பலாப்பழம் சாப்பிட்டால் கிடைக்க கூடிய நன்மைகள்
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்
23 Comments
Comments are closed.