பூசணிக்காய் பயன்கள் | Poosanikai Benefits in Tamil
குளிர்காலங்களில் அதிகமாக கிடைக்கும் மஞ்சள் பூசணி பல மருத்துவ குணங்களை உடையது.
இது பரங்கிக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக பொங்கல் பண்டிகை காலங்களில் இதன் பயன்பாடு அதிகம் இருக்கும்.
மஞ்சள் பூசணியில் வைட்டமின் ஏ,வைட்டமின் பி காம்ப்லெக்ஸ், வைட்டமின் சி,வைட்டமின் டி, வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின், கால்சியம் புரதம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், தாமிர சத்து, துத்தநாகம் என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
மலசிக்கல்
மஞ்சள் பூசணியை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்தை அதிகரிக்கச் செய்யும்.
இது இரட்டை மற்றும் குடல் இயக்கத்தினை மேம்படுத்துவதால், மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
சிறுநீரக கல்
மஞ்சள் பூசணியை சாறு வடிவில் உட்கொண்டால் சிறுநீரகங்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். உடலில் உள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றும் தன்மையை கொண்டுள்ளதால், சிறுநீரகங்களில் கழிவுகள் தேங்காமல் பார்த்துக்கொள்ளும்.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கக்கூடியது.
கெட்ட கொழுப்புகள்
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் தன்மை கொண்டது.
கொழுப்பு கட்டி அதிகம் உள்ளவர்களுக்கு மஞ்சள் பூசணி சிறந்த மருந்தாகும்.
மஞ்சள் பூசணியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கொழுப்பு கட்டிகள் குறையத் தொடங்கும்.
கல்லீரல்
கல்லீரல் மற்றும் பித்தப்பை பாதிப்பு உள்ளவர்கள் இந்த மஞ்சள் பூசணி சாற்றை காலை மற்றும் மாலை அரை டம்ளர் வெறும் வயிற்றில் பத்திலிருந்து, பதினைந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் குறையத் தொடங்கும்.
உடல் சூடு, பித்தம் குறைந்து சீராகும்.
இரத்த அழுத்தம்
மஞ்சள் பூசணியில் பெக்டின் என்ன வேதிப்பொருள் உள்ளதால் உடலில் அதிக கொழுப்புச் சத்து மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்புகளைக் குறைக்கிறது.
கர்ப்பிணிபெண்கள்
கர்ப்பிணிப் பெண்கள் ஏற்ற சிறந்த உணவாகும். இதில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளதால், பெண்கள் கர்ப்ப காலத்தில் உணவாக சமைத்து, அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.
அல்சர்
மஞ்சள் பூசணியை ஜூஸ் ஆகவோ அல்லது கூட்டாகவோ ஏதாவது ஒரு வடிவில் எடுத்துக்கொண்டால், வயிற்றில் உள்ள அதிக அமிலச்சு சமநிலைப்படுத்தி வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் இக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.
சரும ஆரோக்கியம்
மஞ்சள் பூசணியில் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளதால், இதை அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது.
எலும்புகள், பற்கள் ஆரோக்கியம்
இதன் விதைகளில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. மஞ்சள் பூசணி விதைகளை நன்கு வெயிலில் காய வைத்து பொடி செய்து கொண்டு வளரும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் எடுத்துக்கொண்டால் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
தூக்கமின்மை
தூக்கமின்மை பிரச்சனைக்கு இந்த பூசணிக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மஞ்சள் பூசணி சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் நன்றாக தூக்கம் வருவதற்கு உதவுகிறது.
இந்த மஞ்சள் பூசணியை அனைவரும் பயன்படுத்தி வந்தால் மேற்கூறிய அத்தனை நன்மைகளையும் பெற முடியும்.
இதனையும் படிக்கலாமே
- அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
- கம்பு பயன்கள் | Kambu Benefits in Tamil(Opens in a new browser tab)
- சோற்றுக்கற்றாழை பயன்கள் | Katralai Benefits in Tamil(Opens in a new browser tab)
- பனங்கற்கண்டு நன்மைகள் | Panakarkandu Uses in Tamil(Opens in a new browser tab)
- நாயுருவி பயன்கள் | Nayuruvi Plant Uses in Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்