கால் நரம்பு வலி குணமாக | Paati Vaithiyam For Leg Pain in Tamil

கால் நரம்பு வலி குணமாக | Paati Vaithiyam For Leg Pain in Tamil

திடீரென கால் நரம்பு சுண்டி இழுப்பது கால்களை அசைக்க முடியாத படி இருப்பது கை, கால், விரல்கள், நரம்புகள் இழுக்கப்பட்டு வளைவது இது போன்ற பிரச்சனைகள்தான் நரம்பு இழுத்தல் என்று கூறுகிறோம்.

பொதுவாக இந்த பிரச்சனை இரவு நேரங்களில் அதிகம் ஏற்படும். கை மற்றும் கால்களில் உள்ள விரல்கள் வளைந்து வலியை கொடுக்கும்.

பொதுவாக இந்த நரம்பு இழுத்தல் பிரச்சனை வயதானவங்களுக்குத்தான் ஏற்படும். ஆனால் இன்று இளம் வயதினருக்கும் சாதாரணமாக இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

கால் நரம்பு வலி அறிகுறிகள்

கால் நரம்பு வலி ஏற்பட காரணம்

பெண்கள் அதிகம் இந்த பிரச்சனையினால் அவதிப்படுகிறார்கள்.நம் உடம்பின் இயக்கத்திற்கு, மிகவும் உதவியாய் இருப்பது மோட்டார் நரம்புகள் என்று சொல்லப்படும் நரம்புகள்.

இந்த மோட்டார் நரம்புகளில் காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது, ஏதேனும் வலுவிழந்து இருந்தாலோ இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படும்.

உடலை பயன்படுத்தி அதிக வேலை செய்வது, உதாரணமாக அதிக எடை தூக்குவது அதிகமாக உடற்பயிற்சி செய்வது, தசைகளின் மிஞ்சிய வேலையை செய்வது இதன் காரணமாகவும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.

உடலில் நீர்ச்சத்து குறையும்போது உடல் வறட்சியாக இருக்கும்போது, இரத்தத்தில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் குறையும்போது, மனஅழுத்தம் மற்றும் நரம்புத்தளர்ச்சி மற்றும் அபார வாயு சீர்கட்டினாலும் இந்த நரம்பு சுண்டி இழுத்தல் பிரச்சனை ஏற்படும்.

Paati Vaithiyam For Leg Pain in Tamil

கால் நரம்பு வலி தடுக்க வழிகள்

சுடு தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு பருத்தி துணியில டிப் பண்ணி நரம்பு சுண்டிஇழுக்கும் இடத்தில் ஒத்தனம் கொடுக்கலாம்.

பொதுவாக தொடை காலுடைய பின்பகுதி கால் பெருவிரலோட சேர்த்துதான் இழுக்கும். இழுக்கும்போது கால்களைப் பிடித்துவிட்டு நடக்க முயற்சி செய்யவும். உடனே முயற்சி செய்யும் போது சரி ஆகிவிடும்.

தேங்காய் எண்ணெயுடன் பச்சை கற்பூரத்தை சேர்த்து காய்த்து வடிகட்டி அந்த எண்ணெயை நன்றாக கால்களில் அழுத்தி தேய்த்து வர இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

அதிகம் குளிர்ந்த பொருட்கள், வாய்வு உண்டு பண்ணக்கூடிய, மாவு பொருட்கள், போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

நரம்புகளை பலப்படுத்தும் உணவுகள்

தினமும் முளைகட்டிய தானியங்கள் உதாரணமாக முளைகட்டிய பச்சை பயிறு,முளைகட்டிய கொண்டைக்கடலை போன்றவற்றை சாப்பிடலாம்.

பழ சாலட் உடன் தேன்கலந்து பண்ணி சாப்பிடலாம். வைட்டமின் ஈ, சோடியம், பொட்டாசியம், அதிகம் உள்ள உணவுகள் உதாரணமாக வாழைப்பழம், ஆரஞ்சு, பாதாம், முந்திரி, போன்ற உணவுகளை சாப்பிட்டு வரவேண்டும்.

உடற்பயிற்சி செய்பவர்களாக இருந்தால் அரை மணி நேரத்துக்குமுன்னதாகவே ததண்ணீர் குடித்து விட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உடல் பிடித்து கொள்ளும் அளவிற்கு கனமான அகனமான வேலைகளை செய்யக் கூடாது.

இது போன்ற விஷயங்களை பின்பற்றி பண்ணிட்டு கண்டிப்பாக கால் நரம்பு வலி பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.

kaal vali maruthuvam in tamil

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

5 Comments

  1. Pingback: indovip
  2. Pingback: url
  3. Pingback: pglike

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning