பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா | Dandruff Treatment in Tamil
பொடுகு என்பது பெரும்பாலோர்க்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை.
பொடுகு எதனால் ஏற்படுகின்றது? தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது மட்டுமன்றி, மன அழுத்தத்தாலும் ஏற்படுகின்றது.
பொடுகு வருவதால் தலையில் அரிப்பு ஏற்படும். மேலும் முடியும் கொட்டத் தொடங்கும்.
தொடர்ச்சியாக தலையை சொரியும்போது , எண்ணெய் சுரப்பி கொப்பளம் உண்டாகும். இன்றைய பதிவில் பொடுகை நீக்கும் எளிய இயற்கை வழிமுறைகளை பார்ப்போம்.
Treatment 1
இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலை அதை நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை முடியிலும் தலை சருமத்திலும் படுமாறு தேய்த்து முப்பது நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும்.
பின்னர் முப்பது நிமிடங்கள் கழித்து முடியை நன்கு தண்ணீரில் அலச வேண்டும். இந்த சிகிச்சையை வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முடியும் தொடர்ந்து , கருமையாக வளரும்.
Treatment 2
ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து விழுதை, தயிரில் கலந்து தலையில் தேய்த்து ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு தலையை நன்கு அலச வேண்டும்.
இதில் உள்ள வேப்பிலை தயிர் இரண்டுமே பொடுகை போக்கும் வல்லமை கொண்டது.
Treatment 3
சின்ன வெங்காயச் சாற்றை எடுத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலையை அலசினால் பொடுகு போய்விடும்.
இதை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும். சின்ன வெங்காயத்தில் கந்தகம் உள்ளதால் பொடுகையும் நீக்கி புது முடிகளையும் முளைக்க வைக்கும் தன்மை உடையது.
Treatment 4
எலுமிச்சை ஒரு நல்ல பொடுகை நீக்கும் பொருட்களில் ஒன்று. அதற்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாற்றை விட்டு முடி மற்றும் உச்சந்தலையில் தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
பிறகு ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து முடியை நீரில் நன்கு அலச வேண்டும்.
Treatment 5
செம்பருத்தியின் இலை மற்றும் பூ முடிக்கு மிகவும் நல்லது. அதிலும் முடி வளர்ச்சிக்கு மட்டுமன்றி பொடுகை போக்கும் பொருள் ஒன்றாகவும் உள்ளது.
அதற்கு நீரில் செம்பருத்தியின் இலை மற்றும் பூவைப் போட்டு கொதிக்க வைத்து நீரை வடிகட்டிவிட்டு இலை அல்லது பூவை நன்கு அரைத்து அதில் சிறிது வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை சேர்த்து கலந்து முடி மற்றும் உச்சந்தலையில் தடவி ஐந்து நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் பொடுகு நீங்குவதோடு முடி நன்கு கருமையாக வளரும்.
Treatment 6
தினமும் இரவில் படுக்கும் முன், உச்சந்தலையில் ஆலிவ் எண்ணெய் தடவி ஊற வைத்து காலையில் எழுந்து குளித்தால் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
Treatment 7
இரண்டு தேக்கரண்டி பூண்டு விழுதை ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறோடு கலந்து paste செய்து அதனை தலை சருமத்தில் தேய்த்து முப்பதிலிருந்து நாற்பது நிமிடங்கள் வரை ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் பொடுகு போய்விடும். முடியும், நன்றாக வளரும்.
Treatment 8
கற்றாழை ஜெல்ஐ எடுத்து உச்சந்தலையில் இருந்து தலை முழுவதுமாக நன்றாக தடவி ஊற வைக்க வேண்டும்.
அரை மணி நேரத்திற்கு பின்னர் தலையை நன்கு அலச வேண்டும். இதனை வாரத்தில் இரண்டு முறை செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால் பொடுகு போய்விடும். முடியும், நன்றாக வளரும்.
இதனையும் படிக்கலாமே
- உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா
- ஓமம் மருத்துவ பயன்கள் | Omam Benefits in Tamil
- அதிமதுரம் பயன்கள் | Athimathuram Uses in Tamil
- கசகசா பயன்கள் | Kasa Kasa Health Benefits in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்.
14 Comments
Comments are closed.