அரப்பு தூள் பயன்கள் | Arappu Powder Benefits

அரப்பு தூள் பயன்கள் | Arappu Powder Benefits

அரப்பு என்பது ஒரு மரத்தின் இலை ஆகும். இந்த அரப்பு மரமானது கிராமங்களில் அதிக அளவில் காணப்படுகின்றது.

இதை பண்டைய காலத்தில் வாழ்ந்த அரசர்கள் காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அரப்பு ஒரு மூலிகை குளியல் பொடி என்றும் அழைக்கப்படுகின்றது.

இதனை பற்றி தெரியாதவர்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான்.

அரப்பு தூள் பயன்கள் | Arappu Powder Benefits

உடல் குளிர்ச்சி

அரப்பு தலையானது உச்சந்தலை முதல் கால் பாதம் வரை உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது.

அரப்பு உடலுக்கு குளிர்ச்சியை தரும் கோடை காலங்களில் அரப்பு தேய்த்து குளித்து வருவதன் மூலமாக உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.

அரப்பு தூள் பயன்கள் | Arappu Powder Benefits

பொடுகு

பலரும் பொடுகு பிரச்சனையால் அவதிபடுகின்றனர். அவ்வாறு அவதிப்படுபவர்கள் அரப்பினை நன்றாக அரைத்து தலைக்கு தேய்த்து வருவதன் மூலமாக பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

தூக்கமின்மை

பலரும் இரவு நேரங்களில் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். அரப்பு குளிர்ச்சித் தன்மை உள்ளதால் இதனை நன்றாக தலைக்கு தேய்த்து குளித்து வருவதன் மூலமாக உடல் குளிர்ச்சியடைந்து இரவு நேரங்களில் நன்றாக தூக்கம் வரும்.

அரப்பு தூள் பயன்கள் | Arappu Powder Benefits

தலைமுடி சிக்கு

தலைமுடி சிக்கு பெண்கள் பலரும் தலைமுடி சிக்கின் காரணமாக முடி உதிர்தல் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதற்கு முக்கியமான காரணம் தலைமுடியில் எண்ணெய் பிசுக்கு உடன் இருப்பது தான். அரப்பு கீரை நன்றாக அரைத்து தலைக்கு தேய்த்து அதன் மூலமாக முடியில் உள்ள எண்ணை பிசுக்கு நீங்கும்.

தலைமுடி அடர்த்தி

ஆகவே முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். மேலும் தலை முடியானது அடர்த்தியாக வளர்வதற்கு வழி வைக்கின்றது.

இதனுடைய இலை ஒரு முறை பயன்படுத்தி விட்டால் திரும்பத் திரும்ப பயன்படுத்த உங்களைத் தூண்டும். இதனால் நல்ல ஆரோக்கியமான தலைமுடி, மிக நீளமான தலைமுடி வளர வழிவகுக்கின்றது.

இயற்கை நமக்குத் தந்த அற்புத மூலிகைகளில் ஒன்று அரப்பு என்றே கூறலாம்.

முடியின் வேர்கள் உறுதியாகும், மேலும் அடர்த்தியான முடிகள் வளர வழி வகுக்கும்.

உடல் சூட்டை குறைப்பது மட்டுமல்லாமல் இதனை தேய்த்துக் கொண்டு வருவதன் மூலம் கொத்துக் கொத்தாக கொட்டுகின்ற முடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இறப்பினை நன்றாக மை போன்று அரைத்து அதனை அரிசி கழுவிய தண்ணீரில் சேர்த்து 10 முதல் 15 நிமிடம் வரை தலையில் ஊற வைக்க வேண்டும்.

அதன் பின்னர் குளிக்கும் குறித்து வரும் பொழுது தலை முடியானது பளபளப்பான தோற்றத்துடன் இருக்கும்.

அரப்பு தூள் பயன்கள் | Arappu Powder Benefits

சரும பிரச்சனை

இது சரும பிரச்சனைகளையும் சரி செய்யும் ஆற்றல் கொண்டது. நாம் தினசரி குளிக்கும் பொழுது சிறிதளவு அரப்பினை மை போன்று அரைத்து முகத்திற்கு தேய்த்து குடித்து வருவதன் மூலம் முகம் பளபளப்பான தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

அரப்பு தூள் பயன்கள் | Arappu Powder Benefits

அரப்பு பொடி

அரப்பு இலை மரத்தில் இருந்து பறித்து அதனை காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம்.

அந்த பொடியினை தலைக்கு தேய்த்து வரலாம்.

தினசரி உங்களது பகுதியில் கிடைக்கும் என்றால் அதனை தினசரி சிறிதளவு பறித்து பயன்படுத்தாலம்.

கிடைக்கவில்லை என்றாலும் கூட உங்களது பக்கத்தில் இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடைகளில் அரப்பு பொடியை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இது 50 கிராம் வெறும் இருபது ரூபாய் கிடைக்கின்றது.

இந்த அரப்பு பொடியினை அரிசி கழுவிய நீரில் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கிக் கொண்டு வரும்பொழுது சேம்பு பதத்திற்கு வந்துவிடும்.

நாம் கடைகளில் விற்கப்பட கூடிய கண்ட கண்ட ஷாம்புகளை பயன்படுத்துவதனால் தலைமுடியில் உள்ள அனைத்து சத்துக்களையும் இழந்து விடுவோம்.

ஆனால் இயற்கை குளியல் பொ டியான அரப்பு கொடியினை கொண்டு தலை முடியை சுத்தம் செய்வதால் தலை முடியானது ஆரோக்கியத்துடனும் அனைத்து சத்துகளுடனும் இருக்கும்.

இதனால் நமது தலைமுடி ஆரோக்கியமாக இயற்கை தோற்றத்துடன் இருக்கும்.

அரப்பு தூள் பயன்கள் | Arappu Powder Benefits

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning