காலை உணவு என்பது நமக்கு மிக முக்கியமான ஒன்று. காலை உனவினை அரசனை போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள்.
இதில் அதிகமான ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இருப்பினும் நாம் அவசரமாக வெளியே செல்லும் போது நமக்கு முதலில் ஞாபகம் வருவது வாழைப்பழம் தான்.
காலையில் அவசர அவசரமாக வெளியே செல்பவர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கும் உணவு வாழைப்பழம்.
வாழைப்பழத்தில் அதிகபடியான நன்மைகள் அடங்கியுள்ளன. வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
மேலும் இது இரத்த அழுத்தம், மன அழுத்தம், நெஞ்சு எரிச்சல், அல்சர் மற்றும் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. இதில் அதிகபடியான இரும்புச்சத்து உள்ளது.
இது உடலில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கையினை அதிகரிப்பதோடு இரத்தத்தின் அளவினையும் அதிகரிக்கிறது.
சத்தான உணவாக இருந்தாலும் இதை நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா என்று பார்ப்போம்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் பைபர் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்களின் சிறந்த ஆதாரமாக இருக்கிறது. இது உங்கள் ஆற்றலை அதிகரிக்கிறது மற்றும் பசியை குறைக்கிறது.
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது சிறந்தது. வாழைப்பழத்தில் இருபத்தி ஐந்து சதவீதம் சர்க்கரை அடங்கியுள்ளது. இது இரும்பு , வைடமன் பி ஆறு மற்றும் வைடமன் பி ஆகிய மற்ற ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது.
பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளின் படி வாழைப் பழங்களில் பொட்டாசியம் பைபர் மற்றும் மெக்னீசியம் நிறைந்திருப்பதால் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது இல்லை என்று சொல்கிறார்கள்.
அதற்கான காரணங்கள். வாழைப்பழத்தில் உள்ள சர்க்கரை உங்களுக்கு சக்தியை அடித்தாலும் சில மணி நேரத்தில் அதை உறிஞ்சி எடுக்கிறது.
வாழைப்பழங்கள் தற்காலிகமாக புத்துணர்வை கொடுத்தாலும், சிறிது நேரத்திற்கு பின்னர் தூக்கம் மற்றும் களைப்பாக உணர்வை கொடுக்கிறது.
வாழைப்பழங்களில் இயற்கையில் அமிலங்கள் இருக்கின்றன, எனவே இது வயிற்று பிரச்சினைக்கு காரணமாக அமையலாம்.
மேலும் இதைப்பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும்போது, வாழைப்பழங்கள் இல் இயற்கையாகவே அமிலங்கள் உள்ளன.
மேலும் அவற்றை அதிக அளவு பொட்டாசியம் அடங்கியுள்ளது. இவை காலையில் உன்ன சிறந்ததுதான், ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிட்ட சிறந்தது அல்ல.
இதை ஆப்பிள் மற்றும் பிற பழங்களுடன் கலந்து சாப்பிடுவது வாழைப்பழத்தில் உள்ள அமிலங்களை குறைக்க உதவுகிறது .
ஆயுர் வேதத்தின் படி, ஒருவர் வெரும் வயிற்றில் எந்த ஒரு பழத்தையும் சாப்பிடுவது சிறந்தது அல்ல. மேலும் இப்போது கிடைக்கும் பழங்கள் எதுவும் இயற்கையான பழங்களாக கிடைப்பதில்லை.
நாம் செயற்கையாக வளர்க்கப்பட்ட பழங்களையே சாப்பிடுகிறோம். இதில் உள்ள கெமிக்கல்கள் நம் உடலுக்கு சிறந்தது அல்ல.
நாம் நினைப்பதை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே வாழைப்பழத்தினை பிற பழங்களுடன் கலந்து சாப்பிடுவது சிறந்தது.
வாழைப்பழம் ஒரு சிறந்த உணவு தான். அதை நீங்கள் வேறு சில பொருட்களுடன் சேர்த்து எடுத்துக் கொள்வது, உங்கள் காலை நேரத்தை புத்துணர்ச்சி யுடன் தொடங்க உதவியாக இருக்கும்.
8 Comments
Comments are closed.