பூசணி விதை நன்மைகள் | Pumpkin Seeds Benefits in Tamil

பூசணி விதை நன்மைகள் | Pumpkin Seeds Benefits in Tamil

ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் காய்கறிகளுக்கு மட்டுமல்ல அதன் விதைகளுக்கும் முக்கிய பங்கு உண்டு.

எத்தனையோ விதைகள் இருந்தாலும் பூசணிக்காயிலிருந்து கிடைக்கக்கூடிய பூசணி விதைகளின் மருத்துவ பயன்கள் மிகவும் அதிகம்.

பார்ப்பதற்கு தட்டையாக இருந்தாலும் இதில் ஏராளமான விட்டமின்களும், இதர அத்தியாவச ஊட்டச்சத்துக்களும் ஏராளமான அளவில் நிரம்பி இருக்கிறது.

நூறு கிராம் பூசணி விதையில் இருந்து அறநூறு கலோரிகள் வரை பெற முடியும். இதில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமி இ போன்ற சத்துக்களும் மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்த போன்ற அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது.

இவ்வளவு சத்துக்களைக் கொண்ட இந்த பூசணி விதைகளை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வர என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும்? மற்றும் குணமாகக்கூடிய நோய்கள் என்ன? என்பதனை பற்றி பார்ப்போம்.

பூசணி விதை நன்மைகள் Pumpkin Seeds Benefits in Tamil

மாரடைப்பு

இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான மக்னீசியம் மற்றும், phyto estrogen உடலில் உள்ள கெட்ட இரத்தத்த்தின் அளவை குறைத்து ரத்த அழுத்தத்தை சீராக்கும்.

இதன் மூலமாக இருதயம் ஆரோக்கியமாக இருக்கும். தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வர அன்றைய நாள் முழுவதும் தேவையான மக்னீசியம் கிடைத்துவிடும்.

இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான மக்னீசியம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். இருதய சுவர்களுக்கு நல்ல வழி கொடுப்பதோடு மாரடைப்பு ஏற்படாமலும் தடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

பூசணி விதைகள் இருக்கக்கூடிய, அதிகப்படியான துத்தநாகச் சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.

ஒரு கப் பூசணி விதையில் இரண்டு மில்லி அளவு துத்தநாகம் இருக்கிறது. உடலில் துத்தநாகச் சத்து குறையும் போது நோய் எதிர்ப்பு சக்தி வலுவிழந்து சளி, காய்ச்சல் நாட்பட்ட சோர்வு மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அடிக்கடி இது போன்ற பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சர்க்கரை நோய்

தாவர உணவுகளின் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா மூன்று அமிலம் பூசணி விதைகளில் அதிக அளவில் இருக்கிறது.

இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். இதன் மூலமாக ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவு கட்டுப்படும். சர்க்கரை நோய் வராமலும் தடுக்கும்.

பூசணி விதை நன்மைகள் Pumpkin Seeds Benefits in Tamil

கல்லீரல்

கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது பூசணி விதைகள். பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிக அளவில் இருக்கிறது.

இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்றி கல்லீரல் சீராக இயக்குவதற்கு உதவி செய்யும்.

ஆழ்ந்த தூக்கம்

ஆழ்ந்த தூக்கத்தை தரக்கூடியது பூசணி விதைகள். தூக்கமின்மை பிரச்சனையினால் அவதிப்படுபரவர்கள் தினமும் ஒரு கையளவு பூசினி விதை சாப்பிட்டு வர பூசணி விதைகளில் இருக்கக்கூடிய அமிலம் தூக்கத்தை தூண்டும்.

எனவே தூக்கமின்மை பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் அரைதேக்கரண்டி ஆளி விதைப் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து படுக்கச் செல்வதற்கு அரை மணி நேர முன்பு குடித்து வர நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும்.

பூசணி விதை நன்மைகள் Pumpkin Seeds Benefits in Tamil

உட்க்காயங்கள்

உடலில் ஏற்படக்கூடிய உள்காயங்களுக்கு அருமருந்து இந்த பூசணி விதைகள். இந்த விதைகளில் இருக்கக்கூடிய anti inflammatory பொருள் உடலின் உட்காயங்களை ஆற்றும் தன்மை கொண்டது.

நாட்பட்ட இரத்தக்கட்டுகள் மற்றும் உட்காயத்தினால் அவதிப்படுபவர்கள் பூசணி விதைகளை சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய anti inflammatory பொருள் ரத்த திட்டுக்களை கரைத்து எளிதில் வெளியேற்றும்.உட்காயங்களையும் ஆற்றும்.

உடல் வலிமை

இந்த விதைகளை காய வைத்து பொடி செய்து அந்த பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கலந்து சாப்பிட்டு வர உடல் சோர்வு மற்றும் உடல் வலி நீங்கும்.உடல் வலிமை அதிகரிக்கும்.

பூசணி விதை நன்மைகள் Pumpkin Seeds Benefits in Tamil

மாதவிடாய் பிரச்சனை

மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பூசணி விதைகளை நெய்யில் வறுத்து தினமும் அதனை சாப்பிட்டு வர மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலி மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

ஆண்கள்

ஆண்களுக்கு மிகவும் நல்லது பூசணி விதைகள். பூசணி விதைகளில் இருக்கக்கூடிய அதிகப்படியான ஜிங்க் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் ஆண்களின் prostate சுரப்பை மேம்படுத்தும்.

பாலியல் ஹார்மோன்களை தூண்டி ஆண் தன்மையை அதிகரிக்கும். இந்த விதைகளை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர உடல் உஷ்ணம் குறையும்.

விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மேலும் உடலில் உள்ள testosterone அளவும் சிறப்பாக செயல்படுறதுக்கு உதவி செய்யும்.

பூசணி விதை நன்மைகள் Pumpkin Seeds Benefits in Tamil

முதுமை கால பிரச்சனை

Osteoporosis நோயை குணமாக்கும். முதுமைக் காலத்தில் ஏற்படக்கூடிய, கனிமச் சத்துக்கள் குறைபாட்டினால், எலும்புகளின் அடர்த்தி குறைந்து, osteoporosis போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகும்.

பூசணி விதையில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிக அளவில் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரித்து, osteoporosis போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

இது போன்ற பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வர மிக நல்லது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்

Related Posts

1 Comment

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning