பேரிக்காய் பயன்கள் | Pear Fruit in Tamil
பேரிக்காய் ஆப்பிள் வகையை சார்ந்தது. எனினும், ஆப்பிளில் இல்லாத வைட்டமின் ஏ சத்தானது இதில் உள்ளது. ஆப்பிளை விட இது விலை மலிவு என்றாலும், ஆப்பிளை விட பல மருத்துவ குணங்கள் உடையது.
பேரிக்காய் கிடைக்கும் காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் கிடைக்கும்.
எலும்புகள் மற்றும் பற்கள் பலப்படும்.
வயிறு பிரச்சனை
இரைப்பை, குடல் மற்றும் பிற ஜீரண உறுப்புக்களை பலமாக்கும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு.
அடிக்கடி பேரிக்காய் உண்ணும் போது நல்ல பசியும் எடுக்கும். ஜீரணமும், நன்றாக ஆகும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றலும் பேரிக்காய்க்கு உண்டு.
பலவீனம்
திடீரென இதயம் சிலருக்கு படபடக்கும். மனதில் அச்சம் தோன்றும். வியர்வை ஏற்படும். கை, கால் நடுங்கும் இப்படிப்பட்டவர்கள் பேரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பலவீனங்கள் நீங்கும்.
சிறுவர்கள், கட்டாயம் சாப்பிட வேண்டிய, பழங்களுள் ஒன்று பேரிக்காய். அவர்கள், எலும்புகளுக்கும், பற்களுக்கும், பலமாக இருக்கவும், பல நோய்கள் வராமல் இருக்கவும் பேரிக்காய் துணை செய்யும்.
கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணி பெண்கள் பேரிக்காயை சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல திடமாக ஆரோக்கியமாக இருக்கும். பால் கொடுக்கும் தாய்மார்கள், பேரிக்காயை சாப்பிட்டு வந்தால், பால் சுரக்கும்.
புற்றுநோய்
அதிக சத்து நிறைந்ததும், சுவையானதுமான பேரிக்காய் மலைப்பகுதிகளில் விளையக்கூடியது. பேரிக்காய் தோலில் அதிக அளவு உள்ள, தாவர ஊட்டச்சத்துக்கள், புற்றுநோய் மற்றும் இதய நோயை குணப்படுத்துகின்றன.
பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து, உடலுக்கு நன்மை தருகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதோடு புற்றுநோய் செல்கள் உருவாகாமலும் தடுக்கிறது.
உடல் பருமன்
குறைந்த கலோரிகளை பேரிக்காய் கொண்டுள்ளது. எனவே இது உடல் பருமனை குறைப்பதற்கு உதவுகிறது.
இதயம்
ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்றுகிறது. மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதயம் பலவீனமாக உள்ளவர்களும் அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும், இரு வேளை, ஒரு பேரிக்காய் வீதம், சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு நீங்கும்.இதயம் வலுவாகும்.
வளரும் குழந்தைகள்
வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் அவசியம் தேவை. இந்த சத்துக்கள், பேரிக்காயில் நிறைந்துள்ளன.
பேரிக்காய் ஒரு சில மாதங்கள் மட்டுமே, கிடைக்கும். கிடைக்கும் காலங்களில் இரவு உணவுகளுக்கு பின் படுக்கைக்கு செல்லும் முன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதனையும் படிக்கலாமே
- நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil
- காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?
- சோற்றுக்கற்றாழை பயன்கள் | Katralai Benefits in Tamil
- புளி மருத்துவ பயன்கள் | Tamarind Medical Benefits
- பூந்திக்கொட்டை பயன்கள் | Boondi Kottai Uses in Tamil
- சிறுகீரை பயன்கள் | Siru Keerai Benefits
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயாம் படிக்கவும்.
5 Comments
Comments are closed.