இயற்கை உணவு பட்டியல் | Healthy Food in Tamil
இயற்கையாக கிடைக்கும் உணவை சாப்பிடும்போது புரதச்சத்துடன் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடென்ட் போன்ற சத்துக்கள் கிடக்கிறது.
இவை உடல் ஆரோக்கியத்திற்கு மேலும் வலுசேர்க்கும். ஆனால், செயற்கை உணவை உட்கொள்ளும் போது அதில் உள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும்.
மற்ற சத்துக்கள், முழுமையாக கிடைக்காது. செயற்கை உணவுகளில் உள்ள, ஊட்டச்சத்துக்கள் செரிமானமாக, அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
நமது உடலின் தசைகளுக்கு வலிமை சேர்க்கக் கூடிய இயற்கை உணவுகளை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.
முட்டை
நாம் சாப்பிடும் ஒவ்வொரு முட்டையிலும் ஆறில் இருந்து, எட்டு கிராம் வரையிலான புரதச் சத்து கிடக்கிறது.
ஒன்பதிற்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும், முட்டையில் விட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம், துத்தநாகம் போன்ற தாது சத்துக்கள் நிறைவாக உள்ளன.
இவை அனைத்தும், உடல் வலுப்பெற உதவுகிறது.
இறைச்சி
நூறு கிராம் கோழி இறைச்சியில் முப்பது கிராம் புரத சத்து உள்ளது. இவை செல்களின் தேய்மானத்தை குறைத்து புதுப்பிக்க உதவுவதோடு நம் உடலின் தசைகளுக்கு வலு சேர்க்கிறது.
தண்ணீர்
மனித உடலானது அறுபது சதவீதம் முதல், எழுபது சதவீதம் வரை தண்ணீரால் உருவாக்கப்பட்டுள்ளது. என்பது நாம் அனைவரும் அறிந்தது உண்டு.
அதே போல் தசை திசுக்கள், எழுபத்தைந்து சதவீதம் தண்ணீரால் ஆனது. எனவே தினமும் சரியான அளவு, தண்ணீர் குடிக்க வேண்டியது தசையின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது.
இல்லையெனில் நமது உடலில் நீரிழப்பு ஏற்படும். இதனால் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்பான தசை வலிமை குறைய வாய்ப்புள்ளது.
எனவே, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தசையின் வலிமைக்கு உதவும்.
மீன் எண்ணெய்
மீன் எண்ணெயில் தசை வளர்ச்சிக்கு தேவையான அழற்சி எதிர்ப்பு தன்மை அதிக அளவு உள்ளது. இவை உடலின் வளர்ச்சிதை ஊக்குவிக்கும்.
இதனால், உடலில் தேவையில்லாத கொழுப்பு குறைவதோடு வலிமையான தசைகள் உருவாக்க உதவும்.
ஓட்ஸ்
ஓட்ஸ்சில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதச்சத்து, தாதுப்பொருட்கள் மற்றும் விட்டமின்கள் நிறைவாக உள்ளதால் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
உடற்பயிற்சி செய்ததும் எடுத்துக் கொள்ள வேண்டிய சிறந்த உணவாகும்.
பசலைக் கீரை
பசலைக் கீரையில் உள்ள, phytosterol என்ற வேதிப்பொருள் இருபது சதவீதம், தசை வளர்ச்சிக்கு உதவுவதாக, அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அன்னாசிப் பழம்
அன்னாசிப் பழத்தில், பிரமிலின் என்ற நொதி உள்ளது. இது தசைகளில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதுடன் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உடற்பயிற்சிக்கு பிறகு அன்னாசிப் பழம் சாப்பிடுவது நல்லது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் உள்ள பிரமிலின் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவுகிறது. உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமானால் தசை வளர்ச்சிக்கு உதவும்.
பாதாம்
பாதாம் பருப்பில் கொழுப்புச்சத்து, புரதம், வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிறைவாக உள்ளன.
இவை தசை வளர்ச்சிக்கு ஊட்டமளிப்பதுடன் வலிமை பெறவும் உதவுகிறது.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியுடன் தக்காளி, மக்காச்சோளம், மிளகு சேர்த்து சாப்பிடலாம். இதிலுள்ள விட்டமின் சி, தசை திசுக்களின் ஆயுளை கூட்டும். நார்ச்சத்துக்கள், தாதுச்சத்துக்கள் இதில் அதிகம் உள்ளது.இவை தசை வளர்ச்சிக்கும் உதவும்.
எனவே, நாம் செயற்கை உணவுகளை அதிகம் சேர்க்காமல் மேற்கண்ட இயற்கை உணவுகளை சாப்பிட்டு நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறோம்.
இதனையும் படிக்கலாமே
உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil
முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?
ஓரிதழ் தாமரை பயன்கள் | Orithal Thamarai Side Effects
பிரண்டை மருத்துவ குணங்கள் | Pirandai Benefits in Tamil
புளி மருத்துவ பயன்கள் | Tamarind Medical Benefits
பூந்திக்கொட்டை பயன்கள் | Boondi Kottai Uses in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
8 Comments
Comments are closed.