சப்ஜா விதை நன்மைகள் | Sabja Seeds Benefits in Tamil
சப்ஜா விதைக்கு துளசி விதைகள் அல்லது கருப்பு கசகசா என்ற வேறு பெயர்களும் உண்டு.
இந்த விதைகளால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது நிறைய பேருக்கு தெரியாது. திருநீற்றுப்பச்சிலை என்பது எல்லாருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன். இது துளசி இனத்தோடு சேர்ந்தது. இதன் விதைதான் சப்ஜா விதைகள்.
இதில் துத்தநாகம்,சல்பர் , ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் விட்டமின்கள் A, B, C உள்ளிட்ட பல சத்துக்கள் ஏராளமாக உள்ளன.
இறைவன் கொடுத்த அற்புதங்களில் இதுவும் ஒன்று. சப்ஜா விதைகளில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், பல வயிற்றுப் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கும்.
சப்ஜா விதைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். குறிப்பாக இந்த விதைகள் உடல் சூட்டினால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது.
இந்த சப்ஜா விதைய ஒரு தேக்கரண்டி அளவு தண்ணீரில் போட்டாலே பாதாம் பிசின் போன்று ஊறிய பின்பு, பல மடங்காக அதிகரிக்கும்.
உடல் சூடு
சப்ஜா விதைகளை கோடையில் எடுத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் இது கோடை வெப்பத்தை தாங்க முடியாதவர்களின் உடல் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
எனவே நீங்கள் மிகுந்த உடல் சூட்டினால் அவதிப்பட்டால் சப்ஜா விதைகளை இரவில் படுக்கும் போது இளநீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிடுங்கள்.
முக்கியமாக நீர்க்கடுப்பு, உடல் சூடு பிரச்சனையால் அவதி படுபவர்கள் இதை தினமும் கூட சாப்பிடலாம்.
குளிர்பானங்கள்
சப்ஜா குளிர்பானங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பார்ப்பதற்கு எள் மற்றும் கருஞ்சீரகத்தினைப் போல் இருக்கும். ஒரு தேக்கரண்டி விதைய இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்தால் நீரினை உறிஞ்சி வழவழப்புத் தன்மையுடன் இருக்கும்.
சர்பத் மற்றும் சோடாவிலும் இது சேர்க்கப்படுகிறது.இது பித்தத்தை குறைக்கும்.
குடல் புண்
ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றும். மேலும், குடல் மற்றும் வயிற்றுப் புண்களை முற்றிலும் ஆற்றக் கூடியது.
மலசிக்கல்
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும் சப்ஜா விதைகளை நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து படுக்கும் முன் அதனை பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாவதை கண்கூடாக உணர முடியும்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதைய நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
முதில் அதிக நார்ச்சத்து உள்ளதால் இதை சாப்பிடும் பொழுது நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
இதனால் உடல் எடை அதிகரிப்பது தடுக்கலாம். எனவே எடையை குறைக்க டயட்டில் இருக்கும் பொழுது இந்த விதைய சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும். மேலும் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது சிறந்த மருந்து.
நோய் எதிர்ப்பு சக்தி
சப்ஜா விதைகள் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுத்தும். அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகை வராமலும் தடுக்கும்.
எனவே பாதாம் பிசின் சப்ஜா விதை இவைகளை வாங்கி வைத்து கொண்டு தேவையான பொழுது இவை இரண்டையும் சம அளவில் எடுத்து இரவு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
காலையில் பார்த்தால் அவைகள் ஊறி நிறைய வந்திருக்கும். இதில் சிறிது நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
இப்படி வாரம் மூன்று முறை சாப்பிட்டால் உடல் சூடு சம்பந்தமான அத்தனை நோய்களும் விலகி விடும்.
சப்ஜா விதை பயன்படுத்தும் முறை
ஒரு தேக்கரண்டி சப்ஜா விதைய இருபது நிமிடங்கள் நூறு மில்லி நீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதனுடன் ஒரு எலுமிச்சம்பழ சாறு ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு ஒரு சிட்டிகை உப்பு இவற்றை சேர்த்து மேலும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த பானத்துடன் நன்னாரி சர்பத் இரண்டு தேக்கரண்டி கலந்தும் சாப்பிடலாம்.
இதே போன்று சப்ஜா விதைய தண்ணீரில் முப்பது நிமிடம் ஊற வைத்து இளநீர், தயிர், லெமன் ஜூஸ், ஐஸ் கிரீம் இவற்றில் கலந்தும் சாப்பிடலாம்.
ருசியாகவும் அருமையாகவும் இருக்கும். உடலும் நல்ல குளிர்ச்சியாகும்.
கூடவே, உடல் எடை நன்றாகக் குறையும். பொதுவாக உடல் சூட்டைக் குறைத்தாலே பல நோய்கள் வராமல் தடுக்கலாம்.
இதனையும் படிக்கலாமே
- அதிமதுரம் பயன்கள் | Athimathuram Uses in Tamil
- ஓமம் மருத்துவ பயன்கள் | Omam Benefits in Tamil
- கசகசா பயன்கள் | Kasa Kasa Health Benefits in Tamil
- பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா | Dandruff Treatment in Tamil
- அவல் நன்மைகள் | Aval Benefits in Tamil
- உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா
- பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil
- தோல் நோய் சித்த மருத்துவம் | Skin Allergy in Tamil)
- பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil
- மன அழுத்தம் நோயின் அறிகுறிகள் | How to Reduce Stress in Tamil
- ஆஸ்துமா முற்றிலும் குணமாக | Best Good for Wheezing in Tamil
- அங்கோர் வாட் கோவில் வரலாறு | Cambodia Angkor Wat Temple History in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
3 Comments
Comments are closed.