ஆளி விதை பயன்கள் | Ali Vithai Benefits in Tamil
ஆளி விதை மேலைநாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு அற்புதமான உணவுதான் இந்த ஆளி விதை.
இதை, ஒரு super natural food என்று தான் அழைக்க வேண்டும். ஏனென்றால் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான சத்துக்களும் அதன் மருத்துவ குணங்களும்தான் காரணம்.
தாவர உணவுகளிலேயே அதிகப்படியான ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்களும், நார்ச்சத்தும் அடங்கியது இந்த விதை.
இது தவிர கார்போஹைடிரேட், புரதம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஃபோலேட் என, ஏராளமான வைட்டமின் மற்றும் மினரல்களும் கொண்டது ஆளி விதை.
உடல் எடை
ஆளி விதையில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, கரையாத நார்ச்சத்து என இரண்டு வகையான நார்ச்சத்துக்களுமே அடங்கிஉள்ளது.
இது, வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும். எனவே அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்படும். இதில் இருக்கக்கூடிய, lignans எனும் ஆன்டி பாக்டீரியா உடலில் ஆங்காங்கே இருக்கக்கூடிய தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றவும் உதவி செய்யும்.
இதன் மூலமாக உடல் எடை வேகமாக குறைப்பதற்கு மிகவும் உதவி செய்யக்கூடியது இந்த ஆளி விதை.
இதய அடைப்பு
ஆளி விதையில் ஒமேகா மூன்று என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பு அமிலங்கள் மிக அதிக அளவில் நிறைந்திருக்கிறது.
உண்மையில் சொல்லப்போனால் மீனுக்கு சமமான சத்து இந்த ஆளி விதையில் உண்டு.
இருதயத்தில் அடைப்பை உண்டாக்கக்கூடிய கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
இருதய சுவர்களையும் நன்கு வலுப்படுத்தக்கூடியது. இந்த omega three. எனவே இந்த omega three அதிகம் நிறைந்த இந்த ஆளிவிதையை நம்ம தினசரி உணவில் எடுத்துக்கொண்டு வரும்பொழுது இருதயம் சார் ந்த பிரச்சனைகள் வராமல் நம்மை பாதுகாத்துக்க முடியும்.
செரிமானம் சீராகும்
ஆளி விதையில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்படக்கூடியது.
ஆகவே மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் ஆளிவிதையை சாப்பிட்டு வர இது மலக்குடலில் இருக்கக்கூடிய மலத்தை மிருதுவாக்கி எளிதில் வெளியேற்ற செய்யும்.
இதன் மூலமாக மலச்சிக்கலும் குணமாகும். மேலும் இதில் இருக்கக்கூடிய கரையக்கூடிய நார்சத்து செரிமானம் சீராக நடைபெறவும் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாவதற்கும் உதவி செய்யக் கூடியது.
புற்றுநோய்
ஆளி விதையில இருக்கக்கூடிய omega three கொழுப்பு அமிலம் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் உடலில் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய காரணிகளை அழிப்பதோடு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியும் தடுக்கும்.
இதில் இருக்கக்கூடிய lignin es என்னும், ஒரு பைட்டோ ஈஸ்ட்ரோஜன் பெண்கள் உடலில் உள்ள ஹார்மோன் அளவை சீராக வைத்து கொள்வதற்கு உதவி செய்யும்.
குறிப்பாக பெண்களுக்கு அதிகம் ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் வராமலும் தடுக்கும் ஆற்றல் இந்த ஆளி உண்டு என பல்வேறு ஆய்வுகளில் நிரூபணம் செய்துள்ளது.
சர்க்கரை நோய்
நீண்ட நாட்கள் சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் ஆளி விதையை தினசரி உணவில் சேர்த்து வர மிகவும் நல்லது.
இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து இன்சுலின் சுரப்பை ஒழுங்கு படுத்துவது மட்டும் இல்லாமல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இயங்குவதற்கு உதவி செய்யும்.
உட்காயம்
ஆளி விதைகள் இயல்பாக வே அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் கொண்டது. இதில் இருக்கக்கூடிய, ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் எலும்புகளில் உண்டாகக்கூடிய, வீக்கத்தை குறைக்கும்.
குறிப்பாக, மூட்டுகளில் உண்டா கூடிய வறட்சியை தடுத்து மூட்டுகளுக்கு நல்ல பலன் கொடுக்கும்.
இதன் மூலமாக மூட்டுகளில் உண்டாகக்கூடிய வீக்கங்களை தடுக்கக் கூடியது இந்த ஆளிவிதை.
மாதவிடாய் பிரச்சனை
ஆளி விதையில் இருக்கக்கூடிய, lignals என்ன தாவர வேதிப்பொருள் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்ஐ சமநிலையில் வைத்து கொள்ள உதவி செய்யும்.
இதன் மூலமாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் கோளாறுகள் குணமாகும். மேலும் ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறுகளையும் ஒழுங்குபடுத்தும் ஆற்றல் இந்த ஆளி விதைக்கு உண்டு.
ஆளிவிதை சாப்பிடும் முறை
இந்த ஆளிவிதையை, நன்கு அரைத்து பொடி செய்துதான் ஒரு தேக்கரண்டி ஆளி பொடியை ஒருடம்ளர் நீர் மோரில் சேர்த்து காலை மற்றும் மதிய உணவுக்கு இடையே குடித்து வரலாம்.
ஆளிவிதையை நேரடியாக சாப்பிட பிடிக்காதவர்கள் ஆளி விதை பொடியை இட்லி, தோசை மாவுடன் அல்லது சப்பாத்தி மாவு பிசையும் பொழுது இந்த ஆளி விதை பொடியை சேர்த்து பயன்படுத்தி வரலாம்.
தினசரி உணவில் இந்த ஆளி விதை எடுத்துட்டு வரும்போது அதிக அளவுல தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஆளி விதை பொடியை அளவுக்கு அதிகமா எடுக்கக்கூடாது. ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி முதல் இருந்து, இரண்டு தேக்கரண்டிக்கு மேல் எடுக்கக்கூடாது.
அளவுக்கு அதிகமாக, இந்த ஆளிவிதையை பயன்படுத்தும்போது அது மலச்சிக்கல் , வயிற்றுப்போக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
ஆளி விதை பொடியை யாரெல்லாம் சாப்பிடலாம்? சாப்பிடக் கூடாது?
ஆளி விதை பொடியை அனைவருமே சாப்பிடலாம். இது உடலுக்கு மிகவும் நல்லதுதான். ஆனால், கர்ப்பிணி பெண்கள், மற்றும் பாலூட்டும் தாய்மார்களும் மருத்துவருடைய ஆலோசனையின் பிறகு இந்த ஆளிவிதையை பயன்படுத்துவது மிகவும் நல்லது.
இதனையும் படிக்கலாமே
- கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil
- பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil
- மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்
- உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil
- கருப்பு உளுந்து பயன்கள் | Karuppu Ulunthu
- பலாப்பழம் சாப்பிட்டால் கிடைக்க கூடிய நன்மைகள்
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை படிக்கவும்.
5 Comments
Comments are closed.