சிறுநீரக கல் கரைய பாட்டி வைத்தியம் | Kidney Stone Treatment in Tamil

சிறுநீரக கல் கரைய பாட்டி வைத்தியம் | Kidney Stone Treatment in Tamil

சிறுநீரக கல்லை இயற்கை வைத்தியத்தின் மூலம் எப்படி வெளியேற்றுவது என்பது பற்றி பார்க்கப் போகிறோம்.
உண்மையிலேயே இதன் மூலம் நிரந்தர தீர்வை நீங்கள் பெற முடியும்.

சிறுநீரக கல் உருவாகும் விதம்

சிறுநீரக கல் பிரச்சனை என்பது இன்று நிறைய பேருக்கு ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. சிறுநீரில் உள்ள crystal எனப்படுகிற உப்புகள் அதாவது கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகிய இவை ஒன்று திரண்டு சிறுநீர் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது.

பொதுவாக சிறுநீர் சிறுநீரகத்தில் உற்பத்தியாகி சிறுநீர் குழாய் வழியே சிறுநீர்ப்பைகளுக்கு வந்து பிறகு வெளியேறிவிடும்.

சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி வளர்ந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இந்த கற்கள் வேறுபட்டிருக்கும்.

சிறியதாக இருந்தால் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். பெரிய கற்களாக இருந்தால் வலியை ஏற்படுத்துவதோடு வேறு சில அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.

சிறுநீரக கல் கரைய பாட்டி வைத்தியம்

சிறுநீரக கல் அறிகுறி

சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல், துர்நாற்றத்துடனான சிறுநீர் மற்றும் ரத்தம் கலந்த சிறுநீர் போன்றவையும் சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

அதே போன்று கற்கள் முற்றிய நிலையில் இருந்தால் தாங்க முடியாத அளவில் வலியை ஏற்படுத்துவதோடு உட்காரவோ நிற்கவோ அல்லது படுக்கவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.

பின்விளைவு

முக்கியமாக சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். முதலில் இந்த வலி, முதுகில் ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப் பகுதிக்கு மாறி அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும். பின் அந்தரங்க உறுப்புகளுக்கு பரவி காய்ச்சலை ஏற்படுத்தும்.

தன்னீரின் அவசியம்

பொதுவாக ஒருவர் தினமும் அதிகமான அளவில் தண்ணீர் குடித்தால் சிறுநீரில் உள்ள அதிகப்படியான கழிமசத்துக்கள் சிறுநீரின் வழியே வெளியேற்றப்பட்டு கற்கள் உருவாவது தடுக்கப்படும்.

மேலும், ஏற்கனவே இருக்கும் கற்களும் வெளியேறிவிடும். ஆனால், இன்று நிறைய பேர், தண்ணீரை குடிப்பதில்லை. மட்டுமல்ல இப்படி கற்கள் சிறுநீரகத்தில் சேர்வதற்கு ஒருவரது வாழ்க்கை முறையும் உணவு பழக்க வழக்கமும் காரணமாக அமைகிறது.

கிட்னி கல் தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஏழு நாட்களில் சிறுநீர் கற்கள் வெளியேற்றுவது எப்படி

இதற்கு, ஒரு அருமையான வீட்டு வைத்தியம் உள்ளது இதன் மூலம் ஏழே நாட்களில் சிறுநீர் கற்கள் வெளியே வந்துவிடும்.

சிலருக்கு மூன்றே நாளில் கூட,வெளிவந்துவிடும். இதற்கு கள்ளி வகையை சார்ந்த ஒரு மூலிகை தான் சிறுநீர் கற்களை வெளியேற்ற உதவுகிறது. அதன் பெயர் ரணகள்ளி.

ரணகள்ளி தோற்றம்

மற்ற கள்ளிகளை போன்ற குணங்களும் இதற்கும் உண்டு. ஆனால் இந்த ரணகள்ளி செடியில் பால் இருக்காது.

கல்லி இனங்களில் இந்த ரணக்கள்ளி செடியாக வளரும் தன்மை உடையது. இதன் இலைகள் ஆலமரத்து இலை போன்று இருக்கும் ஆனால் சற்று தடிப்பாக இருக்கும்.

இலையை கிள்ளி ஈர இடத்தில் போட்டாள் போதும் அங்கும் செடி உண்டாகும். இது, பரண்ட சமவெளிகளிலும், மலைகளிலும் தானாகவே வளரக்கூடியது.

தண்ணீரோ, மழையோ இதற்கு தேவையில்லை காற்றில் உள்ள நீரைக் குடித்து இது செழிப்பாக வளரும் தன்மை உடையது.

மருத்துவம்

இப்பொழுது இந்த ரணகள்ளி இலையை சிறுநீரக கல்ஐ வெளியேற்ற எப்படி பயன்படுத்துவது? என்று பார்ப்போம்.

முதலில் ரணகள்ளி இலையை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இலையை அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு நாளுக்கு ஒரு இலை வீதம் ஏழு நாட்களுக்கு ஏழு இலையை மென்று சாப்பிட வேண்டும்.

சாப்பிட்ட பின் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் அன்றைய பொழுதில் அவ்வப்போது, தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

ஏழாவது நாள் சிறுநீரகத்தில் உள்ள கல் வெளியேறி விடும். சிலருக்கு மூன்று நாட்கள் சாப்பிட்டாலே நான்காவது நாளே கூட வெளியேறிவிடும்.

முக்கியமாக ஒரு நாளுக்கு ஒரு இலைதான் சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிடக் கூடாது. ஏழு நாள் கழித்து நீங்கள் scan செய்து பார்த்தால் கல் வெளியேறி இருப்பது கண்கூடாக தெரியும்.

home remedies for kidney stone in tamil

ஏழு நாட்கள் சாப்பிட கூடாதவை

மீண்டும் கல் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை. முக்கியமாக இந்த ஏழு நாட்களில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிடக் கூடாது.

மேலும் எந்த விதமான அசைவ உணவுகளும், சாப்பிடக் கூடாது.

மேலும்

இந்த ரணகள்ளி மூலிகை, நர்சரி தோட்டங்களில் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதை தொட்டியில் வைத்து வீட்டிலே கூட வளர்க்கலாம். பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இந்த ரணகள்ளி செடியை வீட்டில் உயரத்தில் காட்டினாள் கொசுக்கள் இதன் வாடை தங்காமல் ஓடிவிடும்.

எனவே சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் மன உளைச்சல் அடையாமல் இந்த இயற்கை முறையை பயன்படுத்தி கற்களை வெளியேற்றி நோயின்றி நிம்மதியாக வாழுங்கள்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை  கட்டயாமாக படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning