மணத்தக்காளி கீரை பயன்கள் | Manathakkali Keerai Benefits

மணத்தக்காளி கீரை பயன்கள் | Manathakkali Keerai Benefits

கடவுள் நமக்கு தந்த இயற்கை மருந்து தான் இந்த கீரை வகைகள் என்று கூறலாம். ஏனென்றால் இதில் அதிக அளவு சத்துக்கள் இருக்கும் காரணத்தினால் தான் நமது முன்னோர்கள் கீரையை அடிக்கடி வீட்டில் சமைத்து சாப்பிட சொல்வார்கள்.

கீரை வகைகளில் ஒன்றான மணத்தக்காளி கீரையைப் பற்றி தான் நாம் இன்று பார்க்கப் போகிறோம்.

மணத்தக்காளி கீரையின் காய், பழம், தண்டு, கீரை போன்ற அனைத்து பாகங்களுமே உடலுக்கு நன்மை தரக்கூடியது.

நமது முன்னோர்கள் கீரை வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்து வந்ததால் தான் வலிமையுடனும், ஆரோக்கியமாகவும் எந்தவித நோய் நொடிகளும் இல்லாமலும் உயிர் வாழ்ந்தனர்.

நூறு கிராம் கீரையில் உள்ள சத்துக்கள்

  • நீர்ச்சத்து 82.1 %
  • புரோட்டின் 5.9 %
  • கொழுப்புசத்து  1 %
  • தாது உப்புகள் 2.1%

வாய்ப்புண்

பொதுவாக மணத்தக்காளி கீரை என்றாலே நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் வாய்ப்புண்.

வாய் மற்றும் வயிற்றில் புண்கள் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வருவதன் மூலமாக வாய்ப்புண் மிக விரைவில் குணமடையும்.

மணத்தக்காளி கீரை பயன்கள் Manathakkali Keerai Benefits

காசநோய்

காச நோயானது ஒருவகையான கிருமிகள் உடலுக்கு உட்பகுதியில் உள்ள நுரையீரலில் தங்கிக்கொண்டு நுரையீரலின் உள் உறுப்புகளை பாதிக்கும்.

அதன் காரணமாக வறட்டு இருமல், மூச்சு திணறல் போன்றவை ஏற்படக்கூடும்.

காச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி மணத்தக்காளி கீரையை அல்லது அதன் பழங்களையும் சாப்பிட்டு வருவதன் மூலமாக காச நோயின் கொடுமையில் இருந்து விடுபடலாம்.

புற்றுநோய்

இன்றைய காலகட்டத்தில் பல வகையான புற்றுநோய்கள் உள்ளன. அதில் மிகக் கொடிய புற்று நோயான ஒன்று வயிற்றுப் புற்றுநோய்.

இந்த வயிற்று புற்றுநோயானது அதனோடு தொடர்பு உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது.

ஆகவே புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மணத்தக்காளி கீரை தினசரி சாப்பிட்டு வருவதன் மூலமாக இதனுடைய தீவிர தன்மையிலிருந்து குணமடையலாம்.

மணத்தக்காளி கீரை பயன்கள் Manathakkali Keerai Benefits

மலட்டுத்தன்மை

இன்றைய கால கட்டத்தில் மலட்டுத்தன்மை என்பது சாதாரண ஒரு நோய் ஆக மாறிக்கொண்டு வருகின்றது.

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது உணவு பழக்கவழக்கங்கள் மேலும் சரியான சத்துக்கள் உள்ள உணவுகளை கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது இப்படி காரணங்கள் பல சொல்லிக்கொண்டே போகலாம்.

மலட்டுத்தன்மை என்பது உயிர் அணுக்கள் வலிமையின்றி இருப்பது ஆகும்.

மணத்தக்காளிக் கீரையினை வாரத்தில் இரு முறையேனும் சாப்பிட்டு வருபவர்களுக்கு உயிரணுக்களின் வலிமை அதிகமாகும்.

மேலும் இது உடலில் ஓடும் நரம்பு மற்றும் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளை வலுப்படுத்துகிறது.

மணத்தக்காளி கீரை பயன்கள் Manathakkali Keerai Benefits

கருத்தரித்தல்

ஒரு சில தம்பதியர்களுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பர்.

இவ்வாறு குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் தினசரி அல்லது வாரத்தில் குறைந்தது மூன்று முறையேனும் மணத்தக்காளிக் கீரையை பச்சையாகவோ அல்லது பக்குவம் செய்து சாப்பிட்டு வரவும்.

இவ்வாறு சாப்பிட்டு வருவதன் மூலமாக பெண்களின் கருப்பை பலம் பெறும். கருப்பையில் தேங்கி இருக்கக்கூடிய நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி கருப்பை சுத்தமாகும்.

ஆகவே விரைவில் கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

மணத்தக்காளி கீரை பயன்கள் Manathakkali Keerai Benefits

தொண்டைக்கட்டு

தொண்டை கட்டானது பெரும்பாலும் பாடகர்கள், ஆசிரியர்கள், மேடைப் பேச்சாளர்கள், பேச்சையே தொழிலாக கொண்டிருப்பவர்கள் போன்றவர்களுக்கு ஏற்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் பல மணி நேரம் கூட நீர் அருந்தாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பது தான்.

இவ்வாறு பேசும்போது தொண்டை பகுதியில் வறட்சி ஏற்படுகிறது. வறட்சி ஏற்படுவதன் மூலமாக தொண்டை கட்டி கொள்வதோடு மட்டுமல்லாமல் தொண்டை பகுதியில் வீக்கம் மற்றும் புண்கள் ஏற்படுகின்றன.

இந்த பிரச்சனை உள்ளவர்கள் மணத்தக்காளி கீரை இலை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதன் மூலமாக நிவாரணம் பெறலாம்.

காய்ச்சல்

ஜூரம், காய்ச்சல் போன்ற பிரச்சினைகளினால் அவதிப்படுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாகும். மேலும் உடல் பலவீனமாகும், கைகால் வலியானது உண்டாகும்.

இவர்கள் மணத்தக்காளி செடியின் இலைகளை நன்றாக கசக்கி சாறு பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

அந்த சாற்றினை நெற்றியிலும் கை கால்களில் தேய்த்து வருவதன் மூலமாகவும் உடலுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மணத்தக்காளி கீரை பயன்கள் Manathakkali Keerai Benefits

சிறுநீரக கல்

சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள உப்பினை சுத்திகரிக்கும் பணியை செய்கின்றது.

நாம் குறைந்த அளவு நீரினை குடிப்பதாலும் மேலும் உப்புத்தன்மை அதிகம் கொண்ட உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதாலும் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுகின்றன.

மணத்தக்காளி கீரை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலமாக சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைய தொடங்கும்.

மனதக்காளி கீரை சாப்பிடுவது மூலமாக சிறுநீர் பெருகி சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும்.

மணத்தக்காளி கீரை பயன்கள் Manathakkali Keerai Benefits

இதனையும் படிக்கலாமே

அனைவரும் வலைதளத்தின் Discalimer பக்கத்தினை கண்டிப்பாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning