எது சிறந்தது பச்சை மிளகாயை சிவப்பு மிளகாயா

எது சிறந்தது பச்சை மிளகாயை சிவப்பு மிளகாயா

இந்திய உணவுகளில் காரஅரிசிக்கு மிளகாய் ஒரு முக்கிய காரணம். பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய் இரண்டையும் நம் உணவில் சேர்த்துக் கொள்கின்றோம்.

இரண்டிற்கும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மக்களில் சிலர் பச்சை மிளகாயை விரும்புகின்றார்கள். சிலர் சிவப்பு மிளகாயை விரும்புகின்றார்கள்.

அனைத்து மசாலா பிரியர்களுக்கு மிளகாய் அவர்களின் உணவில் முக்கியப் பகுதியாக அமைகின்றது.

சிலர் பச்சை மிளகாயில் புத்துணர்ச்சியை விரும்பினாலும், மற்றவர்கள் தங்கள் உணவில் தூவபடும் சிவப்பு மிளகாய் தூளை விரும்புகின்றார்கள். ஆனால் எந்த மிளகாயில் உண்மையில் உங்களுக்கு சிறந்தது என்று பார்ப்போம்.

பச்சை மிளகாய் நன்மைகள்

இது காரம் நிறைந்தாக இருந்தாலும் பச்சை மிளகாயில் உடலிற்கு ஆரோக்கியமான நனைமகைள் உள்ளது.

பச்சை மிளகாயில் சில அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்துகள் இருப்பதும் நமக்கு தெரியும்.

அதோடு நம் உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பதுற்கும் பச்சை மிளகாய் பயன்படுகின்றது.
எல்லா வகையான உணவுகளிலும் நாம் காரத்திற்கு மிளகாய் சேர்ப்போம்.

எல்லா வகையான இந்திய உணவுகளிலும் காரத்திற்கு பச்சை மிளகாய் சேர்க்கப்படுகின்றது.

பச்சை மிளகாய் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகின்றது. செரிமானத்தை அதிகரிக்கின்றது.

அதிக அளவு நார் சத்து நிறைந்து இருக்கும் பச்சை மிளகாய், செரிமான செயல்முறையை எளிதாகக்குகின்றது மற்றும் உங்கள் குடலில் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றது. எடையை குறைக்க உதவுகின்றது.

பச்சைமிளகாய்க்கு கலோரி உள்ளடக்கம் இல்லை. இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றது. மேலும் இதை எடை இழப்பு செயல்முறைக்கு உதவுகின்றது.

பச்சை மிளகாயில் காணப்படும் பீட்டா கரோடின் உங்கள் இதய அமைப்பின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகின்றது.

மேலும் இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றது. புற்றுநோயிலிருந்து பாதுகாக்கின்றது.

பச்சை மிளகாய் உங்கள் உடலை நுரையீரல் வாய் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கின்றது.

சிவப்பு மிளகாய் நன்மைகள்

சிலர் பச்சை மிளகாயை விரும்புகின்றார்கள். சிலர் சிவப்பு மிளகாய் தூளை விரும்புகின்றார்கள். பச்சை மிளகாய் தண்ணீரில் உள்ளடக்கத்தை இழந்து சிவப்பு நிறமாக மாறும்.

சிவப்பு மிளகாய் இல் இருந்து நாம் சில ஆரோக்கிய நன்மைகளை பெறுகின்றோம். சிவப்பு மிளகாயில் பொட்டாசியம் நிரம்பி இருப்பதால் அது உங்கள் இரத்த அழுத்தத்தினை சரி பார்க்க உதவுகின்றது.

சிவப்பு மிளகாய் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது. நோய்களை எதிர்த்து போராடும் திறனை அதிகரிக்கின்றது.

இதய நோய்களை தடுக்கின்றது. ஆரோக்கியமான இதயத்திற்கு திறவுகோள் உங்கள் உணவில் சில சிவப்பு மிளகாய் சேர்ப்பது ஆகும்.

இரத்த உறைவு மற்றும் அடைப்புகளை அழிக்க உதவுகின்றது. இது இதய நோய்களை தடுக்கின்றது.

எது சிறந்தது?

பச்சை மற்றும் சிவப்பு மிளகாய் இரண்டும் அவற்றின் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன.

முக்கிய வேறுபாடு அது எவ்வாறு நுகரப்படுகிறது என்பதுதான். பச்சை மிளகாய் எப்பொழுதும் நாம் பச்சையாக உட்கொள்கின்றோம்.

ஆனால் சிவப்பு மிளகாயை நாம் அவ்வாறு உட்கொள்வது இல்லை. சிகப்பு மிளகாய் தூளினை அரைக்கும் பொது அதில் கலப்படம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பச்சை மிளகாய் உங்கள் உணவோடு பச்சையாக சாப்பிடலாம் என்றாலும் சிவப்பு மிளகாய் எண்ணெயில் வறுத்து தான் நாம் சாப்பிட விரும்புகின்றோம்.

பச்சை மிளகாய் இன் நன்மைகள் நமக்கு அப்படியே கிடைத்து விட்டாலும், சிவப்பு மிளகாயில் அது கேள்வி குறிதான்.

வயிற்றுப்புண், தொண்டைப் புண், அல்சர் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் அதிகம் பச்சை மிளகாய் எடுப்பது அல்லது முற்றிலும் தவிர்த்தல் நல்லது.

அல்லது மருத்துவரை அணுகி மேற்கொண்ட பிரச்சனைகளை சரி செய்த பின்பு பச்சை மிளகாய் அல்லது பிற காரம் சார்ந்த உணவுகளை எடுத்தல் அவசியம்.

இவை அனைத்திற்கும் மேலாக அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் வைத்துக்கொண்டு எதையும் அளவுக்கு அதிகமாக உண்பதை தவிர்க்க வேண்டும்.

 

 

Related Posts

Subscribe Our YouTube Channelபல பயனுள்ள தகவல் பெற நம்ம சேனல YouTube Channel Subscribe பண்ணுங்க

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning