சிவப்பு அவல் பயன்கள் | Sivappu Aval Uses in Tamil

சிவப்பு அவல் பயன்கள் | Sivappu Aval Uses in Tamil

இன்றைய அவசர உலகில் சத்தான உணவுகளை நிறைய பேர் சாப்பிடுவதே கிடையாது. காரணம் கேட்டால் இதெல்லாம் செய்ய நேரம் எங்கே இருக்கு? என்று புலம்புவோர்கள் நிறைய பேர். உண்மையில் சத்தான தரமான உணவுகளை சில நிமிடங்களில் தயார் செய்து விடலாம்.

அப்படிகூட இருக்கிறதா என்றால், நிச்சயம் உண்டு. அவற்றில் முக்கியமானது, அவளில் செய்யக்கூடிய உணவுகள்.

சிவப்பு அவல் பயன்கள் | Sivappu Aval Uses in Tamil

 சிவப்பு அவல்   

அவல் இல்  சிவப்பு அவல், வெள்ளை அவல் என்று இருந்தாலும் சத்துகள் என்று பார்க்கும் பொழுது வெள்ளை அவளை விட சிவப்பு அவளில் மருத்துவ நன்மைகள் அதிகம். அதாவது அரிசியின் வகையைப் பொறுத்து அவளின் நிறத்திலும் ஊட்டச்சத்திலும் மாற்றங்கள் ஏற்படும்.

இதில் சிவப்பு அரிசியிலிருந்து தயார் செய்யப்படும் சிவப்பு அவல் என்பது பட்டை தீட்டப்படாத சிவப்பு அரிசியிலிருந்து தயாரிக்கப்படுவதால் சத்துக்களின் விலை அதிகம்.

முக்கியமாக இதன் சிவப்பு நிறத்திற்கு காரணமான, அந்தோசயனின் என்ற நிறமி மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட்  ஆகும். இந்த சிவப்பு அவளை ஊற வைத்து நாட்டு சர்க்கரை, துருவிய தேங்காய், ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டால் நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடக்கிறது.

முக்கியமாக இது எளிதில் ஜீரணமாகக்கூடியது. உடல் சூட்டை குறைக்கக்கூடியது.

 Sivappu Aval images

புற்றுநோய் 

இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட், அந்தோசயனின் என்ற நிறமி நமது உடலில் எந்தவித புற்றுநோய் செல்களையும் வளர விடாது. அதாவது சிவப்பு அவல் புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களை உடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கிறது. எனவே இதை அடிக்கடி சாப்பிட்டு வரும் பொழுது புற்றுநோய் ஏற்படும் அபாயமே தேவையில்ல.

இரத்த சோகை 

இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கக்கூடியது இதில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்து வரும் பொழுது நமது உடலில் இரத்த சிவப்பு  அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ரத்த சோகை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

 Sivappu Aval benefits in Tamil

சர்க்கரை நோய் 

இந்த ​சிவப்பு அவல் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டதால் இதை சாப்பிடு பொழுது இரத்த சர்க்கரை உடனே உயராது. இதனால் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

இதில் இருக்கும் நார்ச்சத்து இரத்தத்தில் உடனடியாக குளுக்கோஸ் கலக்காமல் இருக்க செய்கிறது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, இது மிக நல்லது.

உண்மையில், பட்டை தீட்டப்படாத அரிசியிலிருந்து தயாரிக்கப்படுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ​சிவப்பு அவல் மிக மிக நல்லது. குறைந்த  கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவும் கூட.

எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காமல் இதை உப்புமா போன்று செய்து சாப்பிடலாம்.

 Sivappu Aval Uses in Tamil

கொழுப்பு 

உடலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்தால் உடல் பருமன் இதயக் கோளாறுகள் ரத்த அழுத்தம் என பல விதமான பிரச்சனைகள் உருவாகும்.

அந்த வகையில் இந்த அவல் உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும். இதனால் இதயம் மட்ல் டுமல்ல ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

சிவப்பு அவல் பயன்கள் | Sivappu Aval Uses in Tamil

குடல் ஆரோக்கியம் 

இந்த அவல் குடலை ஆரோக்கியமாக வைத்து குடல் இயக்கத்தை சீராக வைக்கும். அதாவது குடலுக்கு ஆரோக்கியம் செய்வதில் தயிர் போன்று இதுவும் புரோபயாடிக் நன்மைகளை கொண்டுள்ளது.

முக்கியமாக அவல் தயாரிக்கும் முறையில் இது நொதித்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. இதனால் இது மருத்துவ நன்மைகள் அதிகம் கொண்டதாக மாறுகிறது.

அதே போன்று இது புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டின், வளர்ச்சிதை மாற்று விளைவாக ஏற்படும் நல்ல பாக்டீரியாக்களை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

இதனால், குடல் ஆரோக்கியமாக இருக்கும். இப்படி குடல் ஆரோக்கியமாக இருப்பதால் மாலாசிக்கல் ஏற்படாமல் தடுக்கும். இது பட்டை தீட்டப்படாத அரிசியிலிருந்து தயாரிக்கப்படுவதால் இதில், நார்ச்சத்து நிறைந்துள்ளது.

சிவப்பு அவல் பயன்கள்

குழந்தைகள்  ஆரோக்கியம் 

இந்த சிவப்பு  அவலை அவசியம். வளரும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். காரணம் இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய வைட்டமின் சி, துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மேலும் மூளை செல்களையும் புத்துணர்ச்சியாக்கும்.

எனவே இதை ஊற வைத்து நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட கொடுக்கலாம்.

சிவப்பு அவல் பயன்கள் | Sivappu Aval Uses in Tamil

சிவப்பு அவல் சமைக்கும் முறை பயன்கள்

இதை பாயாசம், புட்டு, கஞ்சி, உருண்டை, உப்புமா என்று, விதவிதமாக, எளிதில் உடனே தயாரித்து சாப்பிட கொடுக்கலாம். முக்கியமாக காலையில் அவல் உணவுகளை எடுத்து வந்தால் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கும்.

எனவே ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைக்கக்கூடிய எளிதில் தயாரிக்கக்கூடிய இந்த s​சிவப்பு அவலை  நீங்களும் அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்.

சிவப்பு அவல் பயன்கள்  Sivappu Aval Uses in Tamil

இதனையும் படிக்கலாமே 

அனைவரும்  வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

5 Comments

  1. Pingback: fox888
  2. Pingback: trustbet
  3. Pingback: kurvana
  4. Pingback: university iraq

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning