மாப்பிள்ளை சம்பா அரிசி பயன்கள் | Mappillai Samba Rice Benefits in Tamil
மாப்பிளை சம்பா முன்பெல்லாம் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால் ஆண்கள் இளவட்டக்கல் என்று சொல்லக்கூடிய ஒரு கனமான கல்லை தூக்கி தன்னை ஒரு வலிமையான ஆண் என்பதனை நிரூபிக்க வேண்டியது வழக்கமா இருந்தது.
உடலளவிலும், மன அளவிலும் வலிமையாக இருக்கக்கூடிய ஒரு ஆணால்தான் இந்த கல்லை தூக்க முடியும்.
அதற்காக ஆண்கள் மாப்பிளை சம்பா அரிசியை தான் அதிகம் சாப்பிட்டு இருந்திருக்கிறாங்க இருந்திருக்கிறார்கள். பலவீனமான ஆணைக்கூட பலசாலியாக மாற்றக்கூடிய ஆற்றல் இந்த அரிசிக்கு உண்டு என்பதினால் தான் இதற்க்கு மாப்பிள்ளை சம்பா என்ற பெயர் பெற்றது.
ஆண்களுக்கு கடவுள் கொடுத்த அரிசி என்று சொல்லக்கூடிய இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் உள்ள சதுக்கள் வைட்டமின் பி, வைட்டமின் பி1, புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், மற்றும் அதிக அளவிலான நார்ச்சத்துக்களையும் கொண்டது இந்த மாப்பிள்ளை சம்பா.
இவ்வளவு சத்துக்களைக் கொண்ட இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை உணவாக சாப்பிடும்போது நமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? மற்றும் குணமாகக்கூடிய நோய்கள் என்ன? என்பதனை பற்றி பார்ப்போம்.
ஆண்மை குறைபாடு
மாறி வரக்கூடிய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக ஆண்கள் பலரும் ஆண்மை குறைபாடு பிரச்சனையினால் அவதிப்படுகிறார்கள்.
ஆண்மை குறைபாடு உடையவர்கள் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
ஏன் என்றால் ஆண்களின் உடல் வளர்ச்சி, தசை வளர்ச்சி, ரோம வளர்ச்சிக்கு போன்றவற்றிர்க்கு அடிப்படியாக இருக்கக்கூடிய டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்திக்கு தேவையான ஜிங்க் சத்து இந்த அரிசியில், நல்ல அளவில் இருப்பதுதான் காரணம்.
ஆண்கள் மாப்பிள்ளை சம்பாவை சாப்பிட்டு வர ஆண்களுக்கு ஏற்படக்கூடிய விந்தணு குறைபாடு போன்ற அனைத்து விதமான பாலியல் சம்பந்தமான நோய்களையும் குணமாக்கும்.
அது மட்டும் இல்லாமல் கடினமான வேலை செய்பவர்களின் உடை உடலுக்கு ஆற்றல் கொடுக்கக் கூடியது இந்த மாப்பிளை சம்பா அரிசி.
இதன் காரணமாகதான் மாப்பிளை சம்பாவை ஆண்களுக்கு ஏற்ற அரிசி என்று கூறுகின்றனர்.
இரத்த சோகை
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இரும்பு சத்து நல்ல அளவில் இருக்கிறது.
இது உடலில் புதிய சிவப்பணுக்களை உற்பத்தி செய்து ரத்த அளவை அதிகரிக்க உதவி செய்யும்.
இரத்த சோகை பிரச்சனையினால அவதிப்படுபவர்கள் இந்த மாப்பிள்ளை சம்பாவை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
அல்சர்
மாப்பிள்ளை சம்பாவில் உட்காயங்களை ஆற்றக்கூடிய, வைட்டமின் பி1 சத்து நல்லளவில் இருக்கிறது. எனவே அல்சர் மற்றும் வாய்ப்புண் போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் காலை வெறும் வயிற்றில் மாப்பிள்ளை சம்பா அரிசியை நீராகாரமாக அருந்தி வர அல்சர் விரைவில் குணமாகும்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பொதுவாக மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ள உணவுகளைதான் அதிகம் சாப்பிட சொல்வதுண்டு.
அந்த வகையில் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த அரிசி இந்த மாப்பிளை சம்பா. ரத்தத்தில் மெல்ல, மெல்ல குளுகோஸ் ஆக மாறும். எனவே சர்க்கரை நோயாளிகள் அதிகம் சந்திக்கக்கூடிய பிரச்சனையான திடீர் சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படும்.
இருதயம்
மாப்பிள்ளை சம்பா சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு இதில் இருக்கக்கூடிய நிறமி சத்துதான் காரணம். இது உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
இருதய தசைகளை பலப்படுத்தி இருதயத்திற்கு நல்ல வலு கொடுக்கக் கூடியது இந்த மாப்பிளை சம்பா. உடலில் எந்த பகுதியில் கொழுப்பு கட்டிகள் இருந்தாலும் அதையும் கரைக்கும் ஆற்றல் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு உண்டு.
எனவே இது போன்ற பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் இந்த மாப்பிள்ளை சம்பாவை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
நரம்புத்தளர்ச்சி
நரம்புத்தளர்ச்சியை குணமாக்கும். பயம், பதட்டம், கை, கால் நடுக்கம் போன்ற நரம்பு சம்பந்தமான பிரச்சனையால அவதிப்படுபவர்கள் மாப்பிள்ளை சம்பாவை பயன்படுத்தி வர நரம்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
இதில் இருக்கக்கூடியவைட்டமின் பி6, மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நரம்புகளை பலப்படுத்தவும், ரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவி செய்யும்.
எனவே அதிக ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனையினால அவதிப்படுபவர்களுக்கும் இந்த மாப்பிள்ளை சம்பாவை சாப்பிடுவது மிகவும் நல்லது.
செரிமானம் சீராக
செரிமானம் சார்ந்த பிரச்சனைகளான, அஜீரணம், வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைல் அவதிப்படுபவர்கள் மாப்பிள்ளை சம்பாவை சாப்பிடுவது மிகவும் நல்லது.
இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து செரிமானம் சீராக நடைபெற உதவி செய்வதோடு, செரிமானம் சார்ந்த பிரச்சனைகளையும், குணமாக்கும்.
வயிற்றில் புண்கள் மற்றும் கட்டிகள் வருவதையும் தடுக்கக் கூடியது இந்த மாப்பிள்ளை சம்பா.
நோய் எதிர்ப்பு சக்தி
மாப்பிள்ளை சம்பாவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான இரும்பு, துத்தநாகம், புரதம் போன்ற சத்துக்கள் நல்ல அளவில் இருக்கிறது.
இது உடலில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவா இருப்பவர்கள் மாப்பிள்ளை சம்பாவை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
மூட்டு வலி
மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளான மூட்டு வலி, மூட்டு தேய்மானம் மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் , மாப்பிள்ளை சம்பாவை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
இதில் இருக்கக்கூடிய கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் எலும்புகளை வலுவாக்கவும், எலும்புத் தேய்மானம் போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கும்.
உடல் சோர்வு
அரிசி வகைகளில் அதிக தாதுச் சத்துக்களையும், கனிமச் சத்துக்களையும் கொண்டது இந்த மாப்பிளை சம்பா. இது உடலுக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும்.
ஆகவே எப்போதும் அதிக சோர்வு, அசதி போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்களும், நீண்ட நேரம் பணியில் வேலை செய்பவர்களும் இந்த அரிசியை சாப்பிட்டு வர, உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சியாக இருக்க உதவி செய்யக்கூடியது இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி.
இதனையும் படிக்கலாமே
- கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)
- மூக்கிரட்டை கீரை பயன்கள் | Mookirattai Keerai Benefits in tamil(Opens in a new browser tab)
- கொடுக்காப்புளி பயன்கள் | Kodukapuli Benefits Tamil(Opens in a new browser tab)
- துவரம் பருப்பு பயன்கள் | Thuvaram Paruppu in Tamil(Opens in a new browser tab)
- விளாம்பழம் மருத்துவ குணங்கள் | Vilampazham Fruit Benefits(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை படிக்கவும்
9 Comments
Comments are closed.