வயிற்றில் பூச்சி இருந்தால் என்ன செய்ய வேண்டும் | Keeri Poochi Remedy in Tamil
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சினை தான் இந்த குடற்புழு அல்லது வயிற்று பூச்சி தொல்லை.
வயிற்று பூச்சி உருவாக கரணம் என்ன? வயிற்று பூச்சி இருந்தால் என்ன என்ன அறிகுறி இருக்கும், எவ்வாறு வயிற்று பூச்சியினை உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றுவது பற்றி பார்ப்போம்.
வயிற்றல் பூச்சி உருவாக கரணம்
முதலில் குடற்புழு வருவதற்கான காரணங்கள் என்ன என்பதனை பற்றி பார்ப்போம். கை கழுவாமல் உணவு உண்பது, சுய சுத்தம் இல்லாமல் இருப்பது, சரியாக கழுவாத காய்கறிகள் மட்டும் பழங்களை உண்பது, அது மட்டுமில்லாமல் அளவுக்கு அதிகமாக சாக்லேட் மற்றும் இனிப்பு பண்டகங்களை சாப்பிடுவது இது போன்ற பழக்கவழக்கங்களினால் குடற்புழுக்கள் உருவாகின்றன.
வயிற்று பூச்சி அறிகுறிகள் என்ன?
ஆசனவாய் பகுதியில் எரிச்சல் மற்றும் குடைச்சல் இருக்கும். பசியின்மை, அடிவயிற்று வலி, ஊட்டச்சத்து குறைபாடு, உடல் எடை குறைவது, சிறு குழந்தைகளாக இருந்தால் அடிக்கடி பின்புறத்தில் கை வைத்துக் கொண்டு இருப்பது போன்றவை ஆகும்.
மேலும் விளையாடும் போது செங்கல் துண்டுகள் அல்லது மணலை எடுத்து சாப்பிடுவது, தூங்கும் பொழுது பல் கடிப்பது இது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
குழந்தைகள் வெளியேற்றுகின்ற மலத்தில் சிறு, சிறு புழுக்கள் தென்படும். இது போன்ற அறிகுறிகளை வைத்து குடற்புழு பிரச்சினை உள்ளது என்பதனை நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த குடற்புழு பிரச்சினையினை இயற்கையான முறையில் எவ்வாறு சரி செய்வது என்பதனை பற்றி பார்ப்போம்.
பூசணி விதை
பூசணி விதையினை எடுத்து நன்றாக உலர்த்தி மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த பவுடரை காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் தேன் கலந்து சுடு தண்ணீரில் கலந்து சாப்பிட வேதேன்ண்டும்.
சிறுவர்களுக்கு கால் தேக்கரண்டி போதும். இதனை தொடர்ந்து ஐந்து நாள் எடுத்துக் கொண்டு வரும் பொழுது நல்ல ஒரு தீர்வு கிடைக்கும்.
பப்பாளி விதை
நல்ல ஒரு பழுத்த பப்பாளியில் உள்ள விதைகளை எடுத்து வெயிலில் உலர்த்தி காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பப்பாளி விதை பொடியினை காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
நீரிழிவு நோயாளியாக இருந்தால் ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். குடித்த பிறகு இரண்டு மணி நேரம் எதுவும் உண்ணக்கூடாது.
இந்த பப்பாளி விதை பொடியும் வயிற்றில் பூச்சி தொல்லைக்கு நல்ல ஒரு தீர்வை கொடுக்கும்.
மாதுளை தோல்
மாதுளை தோளினை எடுத்து வெயிலில் நன்றாக உலர்த்தி நன்கு காய்ந்த பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொடியினை ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் தேனை கலந்து சாப்பிட வேண்டும்.
நீரிழிவு நோயாளியாக இருந்தால் மேற்கூறியவாரே ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஐந்து நாள் செய்து வருவதன் மூலமாக வயிற்றுப் பூச்சி தொல்லைக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும்.
இதனையும் படிக்கலாமே
- ஓரிதழ் தாமரை பயன்கள் | Orithal Thamarai Side Effects
- பிரண்டை மருத்துவ குணங்கள் | Pirandai Benefits in Tamil
- புளி மருத்துவ பயன்கள் | Tamarind Medical Benefits
- பூந்திக்கொட்டை பயன்கள் | Boondi Kottai Uses in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்
7 Comments
Comments are closed.