மூக்கிரட்டை கீரை பயன்கள் | Mookirattai Keerai Benefits in tamil
நாம் சர்வ சாதாரணமாக, சாலை ஓரங்களில் காணும் சில செடிகள், மிகப் பெரிய ஆற்றல் வாய்ந்ததாகவும், மருத்துவத்திற்கு பெரிய அளவில் பயனுள்ளதாகவும் இருக்கும். அதில் ஒன்று தான், இந்த மூக்கிரட்டை கீரை. இந்த
மூக்கிரட்டை கீரை விதை போட்டு வளர்வது இல்லை. இது தானாக வேலிகளில் சாதாரண தரையில் வேர் விட்டு வளர்ந்து கிடக்கும்.
மூக்கிரட்டை கீரை ஆடு, மாடுகள் சாப்பிடுவது என்று மட்டும் தான் பலரும் நினைத்து கொண்டு உள்ளார்கள். ஆனால், உண்மையில் மூக்கிரட்டை கீரை மற்ற அணைத்து கீரைகளை காட்டிலும் அதிக அளவில் நோய் தீர்க்கும் ஆற்றலை இந்த கீரைக்கு கொண்டுள்ளது.
மூக்கிரட்டை கீரை சத்துக்கள்
அவ்வாறு இந்த மூக்கிரட்டை கீரையில் உள்ள எண்ணிலடங்கா சத்துக்கள் என்ன? என்பதனை பற்றஇ பார்ப்போம்.
நூறு கிராம் அளவு கீரையில், வெறும் ஒண்ணு புள்ளி அறுவது சதவீதம் மட்டுமே கொழுப்புச்சத்து நிறைந்துள்ளது.
அதே சமயம், நூத்தி அறுவத்தி கிராம் மூக்கிரட்டை கீரையில் ஐந்து மில்லி கிராம் அளவுக்கு சோடியம் இருக்கிறது.
ஒரு நாளைக்கு நமது உடலுக்கு தேவையான புரதத்தில், ரெண்டு புள்ளி இருபத்தி ஆறு சதவீதத்தை இதுவே நிறைவு செய்து விடுகிறது.
நாற்பத்தி ஐந்து மில்லி கிராம் அளவு வைட்டமின் சி, நூத்தி நாற்பத்தைந்து மில்லி கிராம அளவுக்கு கால்சியமும், ஐந்து மில்லி கிராம் அளவுக்கு இரும்புச்சத்தும் நிறைந்து இருக்கிறது.
கல்லீரல் செயல்பாடு
உடல்நிலை சரியில்லாத நேரங்களில், மன அழுத்தம், நெஞ்சு வலி போன்ற சமயங்களில், கல்லீரலின் பணி மிகவும் முக்கியமானது.
அந்த சமயங்களில், அதி தீவிரமாக வேலை செய்து, நம்முடைய உயிரை காப்பாற்றும்.
இந்த மூக்கிரட்டை கீரையானது, செயல்பாட்டை தூண்டிவிட்டு வேகமாக துரிதமாக செயல்பட உதவுகிறது.
வாதம்
மூக்கிரட்டை இலையை உணவாகவும், மருந்தாகவும் கொண்டால், உடலில் உள்ள வாத நோய்கள் மிக விரைவில் சரியாகும்.
இது உடலில் அதிகரிக்கும் வாதம் காபத்தை சரி செய்யும் தன்மை கொண்டது.
கண் பார்வை
மூக்கிரட்டை கீரை இலை, பொன்னாங்கன்னி இலைகள் போன்றவற்றை உரிய அளவில் எடுத்து அவற்றை நன்கு அறிந்து சிறிது மோர் கலந்து தினமும் சாப்பிட்டு வர கலங்கலான பார்வை மற்றும் வெள்ளை எழுத்து குறைபாடுகளை விளக்கி கண் பார்வை தெளிவாகும் .
மூக்கு இரட்டை வேரை சற்று இடித்து, விளக்கெண்ணெய் விட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் பருகி வர, வயிற்று போக்கு ஏற்படும்.
உடலில் உள்ள நச்சுக்கள் நீங்க
இதன் மூலம் உடலில் சேர்ந்திருந்த நச்சுநீர், நச்சு கிருமிகள் யாவும்,மலத்துடன் வெளியேறிவிடும். இதுநாள் வரை, இந்த நச்சுக்களால் உடலில் ஏற்பட்டிருந்த சரும வியாதிகள், அரிப்பு மற்றும் வாதம் சார்ந்த வியாதிகள் அனைத்துமே சரியாகி விடும்.
மலசிக்கல்
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் மூக்கிரட்டை கீரையை டீ வைத்தோ அல்லது சூப்பாகவோ செய்து குடித்து வந்தால், வயிற்றில் செரிமான சக்தியை மேம்படுத்தும்.
மலச்சிக்கல் பிரச்சனைய போக்கி விடுங்ம்.
ரத்த சுத்திகரிப்பு
மாதம் ஒருமுறை, மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் வேர்களை காய வைத்து பொடி செய்து நீரில் வேகவைத்து குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் கழிவுகள் எல்லாம் நீங்கி ரத்தம் சுத்தமாகும்.
ரத்த சோகை
ரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், மூச்சிறைப்பு போக்க இந்தமூக்கிரட்டை கீரை இலையை சமைத்து சாப்பிடலாம்.
சிறுநீரக பிரச்சனை
அனைத்து விதமான சிறுநீர் நோய்களுக்கும், மூக்கிரட்டை கீரைய முக்கிய மருந்தாகின்றது. இதை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது, சிறுநீரக செயலிழப்பை தடுக்க உதவுகின்றது.
எனவே, இப்படி பல நன்மைகளைக் கொண்டுள்ள, இந்த மூக்கிரட்டை கீரை மாதத்திற்கு ஒரு முறையாவது உணவாக அதாவது சமைத்தோ, அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிட்டு பயன்பெறுங்கள்.
இதனையும் படிக்கலாமே
கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)