நிலாவரை சூரணம் பயன்கள் | Nilavarai Uses in Tamil
வயிறு உப்பசம்
ஒரு சிலருக்கு அஜீரணம் வாயு வெளியேற்றம், சாப்பிட்ட உணவுகள் சேராமல் அதிக அளவு வாயு ஏற்படுகிறது.
இது போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் நில ஆவாரை இலையுடன் சிறிதளவு வெந்தயக் கீரை மற்றும் ஓமத்தினை சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அதனை தினசரி இரவில் தூங்குவதற்கு முன்பாக சாப்பிட்டு வருவதன் மூலமாக மேற்கண்ட தொந்தரவுகள் அனைத்தும் குணமாகும்.
தாதுக்கள்
ஒரு சிலருக்கு உயிர்த்தது வானது வலுவிழந்த நிலையில் நீர்த்துப்போய் இருக்கும்.
அப்படிப்பட்டவர்கள் நிலவாரை இலையினை நன்கு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
அந்தப் கொடியை ஆட்டுப் பாலில் சேர்த்து கலக்கி குடித்து வருவதன் மூலம் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து தாது வலுப்பெறும்.
அதுமட்டுமில்லாமல் நில ஆவாரை பொடியினை தேனில் கலந்தும் சாப்பிட்டு வருவதன் மூலமாக உயிர் அணுக்களின் ஆற்றல் அதிகரிக்கும்.
தலைமுடி ஆரோக்கியம்
இன்றைய காலகட்டத்தில் உள்ள நவீன ஷாம்புகள், ஒரு சில ஆங்கில எண்ணெய்களை பயன்படுத்துவதின் காரணமாகவும், உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக இளம் வயதிலேயே முடி உதிர்தல், இளம் நரை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்கள் நில ஆவாரை இலையை நன்கு மையாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
அதனை தலையில் தடவி வருவதன் மூலம் தலை முடியானது வலுப்பெறும். மேலும் முடிஉதிர்தல், இளநரை போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
மனநல பாதிப்பு
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொலைபேசி, மடிக்கணினி, தொலைக்காட்சி போன்றவற்றுடன் அதிக அளவு நேரத்தினை செலவழிக்கின்றனர்.
ஆகையால் அவர்கள் யாரிடமும் மனம் விட்டுப் பேசுவது கிடையாது. இது போன்ற ஒரு சூழலும் அவர்களுக்கு கிடைப்பதில்லை.
இதுபோன்ற காரணங்களினால் ஒரு சிலர் மனநலம் பாதிக்கப் படுகின்றார்கள். இவர்கள் நில ஆவாரை பொடி உடன் கடுக்காய்த் தோல், மஞ்சள் தூள், வேப்பம் கொழுந்து சிறிதளவு எடுத்து நன்றாக காயவைத்து பொடியாக்கி கொள்ளவும்.
இவை அனைத்தையும் நன்கு கலந்து தினசரி இரு வேளை 2 தேக்கரண்டி அளவில் சாப்பிட்டு வருவதன் மூலமாக மூளை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அனைத்தும் சரியாகும்.
மூட்டு வலி
40 வயதை கடந்து விட்டாலே அனைவருக்கும் வரக்கூடிய பொதுவான ஒரு வியாதி மூட்டு வலி தான்.
உடலிலுள்ள வாயுக்கள் வெளியேற முடியாமல் உடலில் தேங்கும் அதன் காரணமாக கை,கால் மூட்டுகளில் வலி ஏற்படுவது கழுத்து, இடுப்பு, முதுகு பகுதிகளில் வலி ஏற்படுவது இவற்றிற்கெல்லாம் வாயு தான் காரணம்.
ஒரு சில மேலை நாட்டு மருத்துவ சிகிச்சை முறைகள் இதற்கு எலும்பு தேய்மானம் ஆகிவிட்டது இதற்கு அறுவை சிகிச்சைதான் ஒரே ஒரு தீர்வு என்று கூறுவார்.
இருந்தாலும் சித்த மருத்துவ குறிப்புகள் மனிதர்கள் வாழும் வரை உடலிலுள்ள உறுப்புகள் வளர்ச்சி இருந்து கொண்டே தான் இருக்கும் என கூறப்படுகின்றது.
ஆகவேநிலாவரை பொடியை சிறிதளவு எடுத்து அதனை நீரில் நன்றாக சுண்ட காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
அதனை தேனீர் போல அருந்தி வருவதன் மூலமாக மூட்டு வலியானது நாளடைவில் சரியாகும். மேலும் இது உடலிலுள்ள இரத்தத்தினை சுத்திகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் உடல் நன்கு பொலிவடையும்.
மலச்சிக்கல்
உடலில் ஏற்படக்கூடிய ஒட்டுமொத்த வியாதிகளுக்கும் மூலகாரணமாக இருக்கக் கூடியது இந்த மலச்சிக்கல் தான்.
மலச்சிக்கல் சரிசெய்ய நில ஆவாரை பொடியை சிறிதளவு பாலில் சேர்த்து சுண்டும் வரை காய வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
தினசரி இரவில் உறங்குவதற்கு முன் இதனை சாப்பிடுவதன் மூலமாக மலச்சிக்கல் நீங்கும்.
நிலவாரை வயிற்றுப்போக்கு இருந்தாலும் வயிற்றுக்குள் கிருமிகள் இருந்தாலும் நிலவாரை பொடி சிறிதளவு ரோஜா இதழ்கள் அதனுடன் சுக்கு கிராம்பு இவற்றை நன்றாக இடித்து வைத்துக் கொள்ளவும்.
இதனை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து அது கால் லிட்டர் தண்ணீர் சுண்டும் வரை நன்றாக கொதிக்க விடவும்.
இதனை வடிகட்டி குடிப்பதன் மூலமாக மேற்கண்ட பிரச்சனைகள் குணமாகும்.
மேலும் உடல் தளராமல் சுறுசுறுப்பாக இருப்பதற்கு இது உதவுகிறது.
பக்கவாதம்
வாயு உடலில் சேர்வதாலும் மற்றும் உடலில் நச்சுக்கள் சேருவது ஆளும் பக்க வாதம் ஏற்படுகின்றது.
பக்க வாதம் உள்ளவர்கள் சிறிதளவு நிலாவரை பொடி அதனுடன் வேலிப்பருத்தி பொடி, முடக்கத்தான் பொடி ஆகியவற்றினை ஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்து அதை கால் லிட்டர் தண்ணீராக வரும் வரை சுண்ட காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
அதனை வடிகட்டி தினசரி காலையில் தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வருவதன் மூலமாக வாயுக்கள் மற்றும் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி பக்கவாதம் நாளடைவில் குணமாகும்.
உடல் பருமன்
உடல் பருமணினால் அவதிப்படுபவர்கள் உடல் எடையை குறைக்க நிலாவரை, பொன்னாங்கண்ணி, ஆவாரை ஆகியவற்றை சரியான விகிதத்தில் எடுத்த்து நன்றாக அரைத்து பொடியாக்கி வைத்து கொள்ளவும்.
ஆறு மாத காலம் வரை இரவில் தூங்குவதற்கு முன்பு 2கிராம் பொடியினை சுடு தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக நல்ல பலன் கிடைக்கும்.
தலைவலி
தலைவலியால் அவதிப்படுபவர்கள் நிலவாரை பொடியுடன் சோம்பு சீரகம் அதிமதுரம் ஆகியவற்றினை சம அளவில் எடுத்து பொடியாக்கி சுடு தண்ணீரில் கலந்து குடித்து வருவதன் மூலமாக நல்ல நிவாரணம் கிடைக்கும்.
விஷக்கடி
விசத்தன்மை வாய்ந்த பூச்சிகள், வண்டுகள், பாம்புகள் போன்றவை கடித்து பாதிக்கப்பட்டவர்கள் வேப்பமர பட்டை சாறினை எடுத்து அதில் நிலாவரை சூரணம் கை விரல் நுனியளவு அதனுடன் சேர்த்து சாப்பிடவேண்டும் .
மேலும் தேள் கடி பட்டவர்கள் குப்பைமேனி இலை சாறுடன் நில ஆவாரை பொடி தூதுவளை கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விஷம் முறியும்.
இதனையும் படிக்கலாமே
- உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil(Opens in a new browser tab)
- உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா(Opens in a new browser tab)
- முடக்கத்தான் கீரை பயன்கள் | Mudakathan keerai benefits in Tamil(Opens in a new browser tab)
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil(Opens in a new browser tab)
- கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil(Opens in a new browser tab)
- இலுப்பை எண்ணெய் பயன்கள் | Iluppai Oil Benefits(Opens in a new browser tab)
- சோற்றுக்கற்றாழை பயன்கள் | Katralai Benefits in Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்.
6 Comments
Comments are closed.