அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil
அதிசயமாக கிடைக்கக்கூடிய அதிவிடயம் மருத்துவ குணம் பற்றி பார்ப்போம். அதிவிடயம் என்ற பெயர சிலருக்கு வினோதமாகத்தான் தோன்றும்.
கிராமங்களில் பேச்சு வழக்கில் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதை விடயம் என்பார்கள்.
அதே மாதிரி பல ஆற்றல் மிக்க பயன்களை தன்னகத்தே கொண்ட மூலிகைதான் அதிமதுரம் ஆகும்.
அதிவிடயம் மலைப்பகுதிகளில் வளரும் ஒரு குறுஞ்செடி ஆகும்.நன்றாக அகன்ற இலைகளுடன், நீல நிற பூக்களுடைய , நல்ல மருத்துவ குணம் உடையது.
சளி, ஜுரத்தினை சரிசெய்ய சித்தமருத்துவதில் அதிவிடையத்தை பயன்படுத்துவார்கள். அடுத்து ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மருத்துவ துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள்.
செரிமானத்தை உருவாக்கக்கூடியது. உடலை வலுவாகும். மூச்சுக்குழாய், நுரையீரல் பகுதிகளில், சுவா குரல் மற்றும் சளி ஆகியவற்றை சரி செய்யும்.
உடல் சூடு , பேதி, சளித்தொல்லை மற்றும் செரிமானம் போன்றவற்றை போக்குவதில் அதிக அளவில் பயன்படுகிறது அதிவிடயம்.
இருமல், வயிற்று போக்கு, காய்ச்சல்
அதிவிடயதினை தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், இருமல் மற்றும் வயிற்றுப் போக்கை குணமாக்கலாம்.
அதிவிடயம் நீரில் இட்டுக் காய்ச்சி, குடித்தால் சூட்டால் ஏற்படும் வயிற்று வலிக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.
இதனை பொடியாக்கி, தேனுடன் குழைத்து, ஒரு மணிக்கு ஒரு தடவை சாப்பிட விட்டுவிட்டு வரும் காய்ச்சல் சரியாகிவிடும்.
இதில் பாதி அளவாக, தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வர காய்ச்சல் விட்டபின் ஏற்படும் உடல் அசதியை சரியாக்கிவிடும்.
அதிவிடயம் சூரணத்தை தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர மூலை வியாதினால் ஏற்படும் எரிச்சல், வலி போன்ற பாதிப்புகள் மறைந்து படிப்படியாக குணமாகும்.
இதன் வேர் உடன் சுக்கு, கோரைக்கிழங்கு, இவற்றை நன்கு, நிழலில் உலர்த்தி, பின்பு இடித்து, பொடியாக்கி நான்கு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி, இரண்டு டம்ளர்வரும்வரை கொதிக்கவிட்டு வடிகட்டி குடிக்க வேண்டும்.
தொடர்ந்து வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் குடித்தால், நல்லா கட்டுக்கோப்பாக இருக்கும்.
காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ள சளித்தொல்லை இருந்தால், மேலே உள்ள மருந்துடன், திப்பிலியும் சேர்த்து பொடியாக்கி கொடுத்தால், சளி வெளியேறிவிடும்.
அந்நிய நிறுவனங்கள்
அதிவிடயம் எளிதில் கிடைக்க கூடிய மூலிகை கிடையாது. இது மிகப் பெரிய நாட்டு மருந்து கடைகளில்தான் கிடைக்கும்.
இது அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாட்டில் உள்ள மருந்து நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்கி வலி நிவாரணி மருந்தாக தயாரிக்கிறார்கள்.
சில நிறுவனங்கள் விலை அதிகமாக இருப்பதால், அதிவிடையத்தை சேர்க்காமல், கோரைக்கிழங்கை சேர்க்கிறார்கள்.
குழந்தைகள் நலம்
அறிவுடைய குழந்தைகளுக்கு அமிர்தம் போன்றவை. சிறுவர்களின் ஜலதோஷம் , காய்ச்சல் மற்றும் வாந்தி போன்றவற்றை சரி செய்து குழந்தைகளின் உடலை சீராக்க வல்லது.
கர்ப்பிணி பெண்கள்
நிறுவனங்கள் மஞ்சள், ஓமம், சித்தரத்தை, திப்பிலி, சுக்கு, இஞ்சி, ஏலக்காய், சாதிக்காய், கடுகு, மிளகு, கொத்தமல்லி, சீரகம், கிராம்பு, லவங்கப்பட்டை, கசகசா, சிறு நாகப்பூ, பெருங்காயத்தூள் மற்றும் நாட்டுச் சர்க்கரை உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளவும்.
பிரசவமான பெண்களுக்கு, சிறிதளவு பொடியுடன் தேன் கலந்து நெய் ஊற்று, சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிட உடலில் ரத்தம் ஊரும். பால் ஊரும். அவர்களின் உடல் நலம், நன்றாக இருக்கும்.
இதனையும் படிக்கலாமே
உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா(Opens in a new browser tab)
முருகை மரத்தின் பயன்கள் | Moringa Tree Benefits(Opens in a new browser tab)
முட்டை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா(Opens in a new browser tab)
பெருஞ்சீரகம் பயன்கள் | PerunJeeragam Uses(Opens in a new browser tab)
திராட்சை ஏன் சாப்பிடவேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
மஞ்சள் தூள் பயன்கள் | Turmeric Powder Benefits(Opens in a new browser tab)
நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்(Opens in a new browser tab)
காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?(Opens in a new browser tab)
தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா(Opens in a new browser tab)
10 Comments
Comments are closed.