கொண்டைக்கடலை பயன்கள் | Sundal Benefits in Tamil

கொண்டைக்கடலை பயன்கள்  | Sundal Benefits in Tamil

கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெள்ளை நிற கொண்டக்கடலை. மற்றொன்று, நமக்கெல்லாம் நன்கு தெரிந்த கருப்பு கொண்டைக்கடலை.

கொண்டக்கடலையில் புரதம், மாவுச்சத்து, போலிக் ஆசிட் , நார்ச்சத்து, மற்றும் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிகம் உள்ளது.

இத்தனை சத்துக்கள் கொண்ட கொண்டக்கடலையின் மருத்துவ நன்மைகள் என்ன? எந்த கொண்டக்கடலை நல்லது? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது? என்பது பற்றி பார்ப்போம்.

வெள்ளை கொண்டைக்கடலை நன்மைகள்,

உடல் எடை

கொண்டக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் அவை உடல் எடை குறைய உதவி செய்கிறது. அதிலும், இதனை தினமும் அரை கப் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் வயிறு நிறைவதோடு நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

இதனால் கண்ட கண்ட உணவுப் பொருட்கள உட்கொள்ளாமல் உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியும்.

இரத்த சோகை

கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் அவை ரத்த அணுக்களின் அளவை அதிகரித்து ரத்த சோகை வரும் வாய்ப்பைத் தடுத்து உடல் ஆற்றலை அதிகரிக்கும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் தான் இதற்கு காரணம். மேலும் ரத்த நாளங்களில் கொழுப்புகள் தங்கி அடைப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.

kondakadalai benefits in tamil,

இரத்த சர்க்கரை

இதில் உள்ள கரையும் நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். மேலும், இதில் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது.

இதனால் அதிலுள்ள கார்போஹைட்ரேட் உடைந்து மெதுவாக செரிமானமாகும். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படும்.

அதிலும் தினமும் அரை கப் சுண்டலை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.

பெண்கள் ஆரோக்கியம்

கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால் பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும்.

மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரி செய்யவும் இது உதவும்.

அதுமட்டுமல்ல கர்ப்பிணிகளுக்கு அவசிய தேவையான போலிக் அமிலம்,ஆன்டிஆக்ஸிடென்ட் தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன.

Maono UC201R-P3 Micro USB Fast Charging Cable, with High Speed Data Syncs for Android, 0.5m+1.5m+2m, Red, Pack of 1 with 3 Charging Cables

முளைகட்டிய கொண்டைக்கடலை

முளைவிட்ட கொண்டக்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் நன்மை தரக்கூடியது.

எலும்புகள், நரம்புகள் பலமடைய ஏற்ற உணவு இது. சிலருக்கு இதை சாப்பிடு பொழுது வாயுத் தொல்லை ஏற்படும். ஊற வைத்த தண்ணீரை மாற்றி நல்ல தண்ணீர் ஊற்றி வேக வைத்தால் வாயு பிரச்சனை குறையும்.

மேல் தோல் வெடிக்கும் வரை நன்கு மெத்தென்று வேக வைத்தால் வாயுத் தொல்லை அதிகம் வராது. வேகும்போதே ஒரு சிறு துண்டு இஞ்சி சேர்க்கலாம்.

கொண்டைக்கடலை மருத்துவ பயன்கள்

எந்த கொண்டைகடலை சிறந்தது?

முக்கியமாக வெள்ளை கொண்டக்கடலையை காட்டிலும் கருப்பு நிற கொண்டக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

எனவே, கருப்பு கொண்ட கடலைதான் நல்லது. இது அளவில் சிறியதாக இருந்தாலும் உறுதியானது.

யார் கொண்டைகடலை சாப்பிட கூடாது?

பொதுவாக, வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மற்றும், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டக்கடலையை அளவுக்கு அதிகமா உட்கொள்வது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும்.

எனவே இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது. சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், கொண்டைக்கடலை சாப்புடவே கூடாது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning