செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள் | Semparuthi Poo Uses in Tamil
இயற்கையின் படைப்பு ஒவ்வொன்றுமே வியப்பானதுதான். அந்த வகையில் செம்பருத்திப் பூவை எடுத்துக் கொண்டால் அதன் கவர்ந்து இழுக்கும் நிறம் மட்டுமல்ல, அதன் மருத்துவ நன்மைகளும், அபாரமானது. எனவேதான், இதை சித்தர்கள் தங்க பஸ்பம் என்று அழைத்தார்கள்.
நிறைய பேருக்கு இது நன்மைகள் தெரியாமல், வெறும் அழகுக்காக வளர்க்கப்படும் சேதி நினைக்கிறோம். சொல்லப்போனால் இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ நன்மைகள் கொண்டது. உண்மையில் இது, இயற்கையின் கொடை என்பது மட்டுமன்றி பக்கவிளைவுகளும் இல்லாதது.
இந்தபதிவில்செம்பருத்திப் பூவை, நம்முடைய எந்தெந்த பிரச்சனைகளுக்கு, எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை பற்றிதான், பார்க்கப் போகிறோம்.
செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள் | Semparuthi Poo Uses in Tamil
இதய ஆரோக்கியம்
செம்பருத்திப் பூவை ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம். தினமும் காலையில் எழுந்து பல்துலக்கி விட்டு செம்பருத்திப் பூவை ஒன்றோ அல்லது இரண்டோ பறித்து சாப்பிட்டு வந்தால் நமது இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.
இதனால் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதைப் பாலில் காய்ச்சியும் குடிக்கலாம். அல்லது இந்தப் பூவை நிழலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு பாலில் கலந்தும் சாப்பிடலாம்.
அதே போன்று, இதய நோய் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில், இரண்டு பூக்களை சாப்பிட்டு வந்தால் இதய நோய் குணமாகும்.
ரத்த சோகை
நம்மில் நிறைய பேர் ரத்த சோகையை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். உண்மையில் ரத்த சோகையை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் அதுவே பல தீவிரமான நோய்களை கொண்டு வந்து விட்டுவிடும்.
நமது உடலில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவதால்தான் இந்த ரத்த சோகை ஏற்படுகிறது. அந்த வகையில் இந்த செம்பருத்திப் பூவில் உள்ள அதிக இரும்புச் சத்து
ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
இதற்கு தினமும் செம்பருத்திப் பூவை, பாலில் காய்ச்சியோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் நல்ல மாற்றத்தை உணர முடியும். அதே போன்று தண்ணீரில் இதன் பூக்களை சேர்த்து காய்ச்சி ஆறியவுடன், தேன் கலந்து குடித்தாலும் ரத்த சோகை நீங்கும்.
வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்
இதற்கு பல காரணங்கள் உண்டு. பொதுவாக இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்கள் ஆறும்.
இப்படி நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது, இந்த பிரச்சனைகள் முற்றிலும் குணமாகும்.
செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள் | Semparuthi Poo Uses in Tamil
மாதவிடாய் பிரச்சனை
இந்த பிரச்சனை உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்காது. பொதுவா இருபத்தி எட்டு நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஆவது பெண்களின் உடல் நலத்திற்கு நல்லது.
சொல்லப்போனால் இந்த பிரச்சனை உள்ள பெண்களுக்கு இதுவே ஒரு பெரிய மன உளைச்சலையும் ஏற்படுத்திவிடும். இவர்கள் செம்பருத்திப் பூவை நிழலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு அந்த பொடியை தேக்கரண்டி அளவு காலையிலும் மாலையிலும், ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை முற்றிலும் சரியாகும்.
வெள்ளைப்படுதல்
பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு பிரச்சனை வெள்ளைப்படுதல். இந்த பிரச்சனை உள்ளவர்கள் காலையில் எழுந்ததும் ஆறு பூக்களை பறித்து அதன் இதழ்களை மென்று சாப்பிட்டுவிட்டு, சிறிது தண்ணீர் அருந்த வேண்டும். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது, வெள்ளைப்படுதல் குணமாகும். வாய்ப்புண் வயிற்றுப்புண் இருந்தாலும், குணமாகிவிடும்.
சிறுநீர் பிரச்சனை
சிறுநீர் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் அதாவது சிறுநீர் எரிச்சல், நீர் குத்தல், சிறுநீர் போகும்போது, எரிச்சலுடன் போவது, போன்ற பிரச்சனைகளுக்கு செம்பருத்தி பூவை கஷாயமாக்கி சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனைகள் விரைவில் நீங்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள் | Semparuthi Poo Uses in Tamil
சரும ஆரோக்கியம்
சருமம் அழகா, நிறமா இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
இதற்கு செம்பருத்திப் பூவை பாலில் காய்ச்சியும் குடித்து வரலாம். அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டியும் குடிக்கலாம். இதனால் பொலிவான நல்ல சிவப்பான சருமத்தை பெற முடியும்.
அதே போன்று ஆவாரம் பூ பாசிப்பருப்பு, கஸ்தூரி மஞ்சள், செம்பருத்தி பூ கலந்த பொடியினை சோப்புக்கு பதிலாக பயன்படுத்தலாம். தோல் நோய்கள் கட்டுப்படுவதோடு தோலும் மினுமினுப்பாகும்.
அதே போன்று சீயக்காயுடன் கலந்து ஷாம்புக்கு பதிலாகவும் பயன்படுத்தலாம்.
குழந்தை பாக்கியம்
குழந்தை இல்லாத பெண்களுக்கும் இதை இயற்கை நன்கொடை என்றே சொல்லலாம். எனவே குழந்தை இல்லாத பெண்கள் செம்பருத்தியின் பூக்களையும் அதாவது அதன் மகரந்தத்தையும் சேர்த்து பாலில் காய்ச்சி கணவன் மனைவி இருவருமே தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் கருத்தரிக்கும்.
மேலும் உரிய வயது வந்தும் பருவமடையாத பெண்களுக்கு, செம்பருத்தி பூக்களை நெய்யில் வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ரத்தமும் சுத்தமாகும்
நமது உடலில் ரத்தம் சுத்தம் இல்லை என்றால் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். அந்த வகையில் இந்த செம்பருத்திப் பூவில் நச்சுக்களை அழிக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது.
தினமும் காலையில் செம்பருத்திப் பூக்களின் இதழ்களை நன்கு மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுக்கள் அனைத்தும் நீங்கி ரத்தம் சுத்தமாக்கி உடலை புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்யும்.
தலை முடி அடர்த்தி
தலை முடி அடர்த்தியாக கருமையாக வளர இதைக் கொண்டு எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தலாம்.
இதற்குத் தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி இதழ்களைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு தடவி வரும் பொழுது பொடுகு, ஈறு, பேன் தொல்லை, நரைமுடி, முடி உதிர்தல் போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
மேலும் உடலுக்கு குளிர்ச்சியையும், மனதுக்கு அமைதியையும் தரக்கூடியது இந்த செம்பருத்திப்பூ.
பேன் தொல்லை
பேன் தொல்லை உள்ளவர்கள் இரவில் தூங்கும் பொழுது செம்பருத்திப் பூக்களை தலையில் கட்டி வைத்துக் கொண்டு, படுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் தலையில் உள்ள பேண்கள் முற்றிலும் ஒழிந்து விடும்.
முக்கிய குறிப்பு
முக்கியமாக இந்த செம்பருத்தி பல நிறங்களில் காணப்படுகிறது. ஆனால், ஐந்து இதழ்கள் மட்டும் சிவப்பு நிறத்தில் உள்ள செம்பருத்திய மருத்துவ குணங்கள் கொண்டது.
மற்றவை வெறும் அழகுக்காக மட்டுமே வளர்க்கப்படுபவை. உண்மையில் நம்மை சுற்றியுள்ள இது போன்ற இயற்கையின் படைப்புகள் ஒவ்வொன்றுமே நமக்காக இயற்கையால் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பயன்படுத்திக் கொண்டாலே நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.
இன்னும் சொல்லப்போனால் நமதுவீட்டில் கட்டாயம் இது போன்ற செடிகளை வளர்த்தால் நம்மை நோயே அண்டாது. நீங்களும் இந்த செம்பருத்தி செடியை இன்றே நட்டு வையுங்கள்.
இதனையும் படிக்கலாமே
- கலாக்காய் பயன்கள் | Kalakai Benefits in Tamil
- ஆஸ்துமா முற்றிலும் குணமாக | Best Good for Wheezing in Tamil
- சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil
- பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும் | How to Reduce Pitham in Tamil
- மூங்கில் அரிசி பயன்கள் | Bamboo Rice Health Benefits in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயாமாக படிக்கவும்.
3 Comments
Comments are closed.