தண்டுக்கீரை பயன்கள் | Thandu Keerai Health Benefits
மனிதர்கள் தினசரி சாப்பிடக் கூடிய அசைவ உணவு மற்றும் சைவ உணவு உண்பவர்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படுவது மிகவும் குறைவு என பெரும்பாலான ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது.
கீரைகள் என்றாலே உடலுக்கு அதிக அளவு நன்மைகளை தரக்கூடியவை. அந்த வகையில் தண்டுக்கீரையில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
மேலும் எண்ணற்ற நன்மைகளை தரக்கூடிய கீரை வகைகளில் ஒன்றான தண்டுக்கீரை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்.
தண்டு கீரையில் உள்ள சத்துக்கள்
- கால்சியம்
- இரும்புச்சத்து
- புரதம்
- கொழுப்புச்சத்து
- நார்ச்சத்து
- தாமிரம்
- பொட்டாசியம்
- மெக்னீசியம்
- சோடியம்
- தையமின்
- வைட்டமின் ஏ
- வைட்டமின் பி
- வைட்டமின் சி
போன்ற சத்துக்களும் அதிக அளவில் அடங்கியுள்ளன.
வயிற்றுப்புண்
காலை பணிக்குச் செல்பவர்கள் உணவு அருந்தாமல் செல்வதாலும், நேரம் தவறி சாப்பிடுவதாலும்,மசாலாக்கள் அதிகம் உள்ள காரம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதாலும் வயிற்றுப் புண்கள் ஏற்படுகின்றன.
வயிற்று புண் காரணமாக செரிமானப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
தண்டுக்கீரை வாரத்தில் ஒருமுறையேனும் சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் புண்கள் சரியாகும்.
புற்றுநோய்
இன்றைய காலகட்டத்தில் உள்ள உணவு முறைகள் காரணமாக பெரும்பாலானவை தாக்கக்கூடிய புற்றுநோய்.
இது குறிப்பாக வயிறு மற்றும் இரு பகுதிகளை பெரும்பாலும் பாதிக்கிறது.
வயிறு சார்ந்த புற்றுநோய் அதனுடன் தொடர்பு கொண்டுள்ள பாகங்களையும் பாதிக்கின்றது.
எனவே கீரையை அதிக அளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.
கருத்தரித்தல்
ஒரு சிலருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பர்.
முக்கியமாக ஒரு சில பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.
அவர்கள் உணவில் வாரத்தில் குறைந்தது மூன்று முறையாவது தண்டுக்கீரை சாப்பிட்டு வருவதன் மூலமாக கருப்பை பலமடையும்.
மேலும் கருப்பையில் தங்கி இருக்கக்கூடிய நச்சுக்கள் முற்றிலும் வெளியேறி கருப்பை சுத்தமாகும். எனவே நாளடைவில் பெண்கள் கருத்தரிக்கும் நிலை உண்டாகும்
கருப்பை
பெண்களுக்கு கருப்பை தொடர்பான பிரச்சனைகளை, குறைக்கக்கூடிய தன்மை, தண்டுக்கீரையில் அதிகம் உள்ளது.
உடல் குளிர்ச்சி
தண்டுக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தன்மையை தரக்கூடியது. உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த கீரையை உணவை அடிக்கடி எடுத்து வந்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
ரத்த சோகை, மூட்டு வலி, முதுகு வலி
தண்டுகீரை இரும்புச் சத்தும், கால்சியம் சத்தும் அதிகமாக இருப்பதால் ரத்த சோகை மூட்டு வலி, முதுகு வலி போன்ற தொந்தரவுகள் இருப்பவர்கள் எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது.
மலச்சிக்கல்
தண்டுகீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மூல நோய் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் இப்பாதிப்புகள் குறைய தொடங்கும்.
உயர் ரத்த அழுத்தம்
தண்டுக்கீரையை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எடுத்துக்கொண்டு வரும் பொழுது ரத்த அழுத்தம் குறையத் தொடங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
தண்டுக்கீரை ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
உடல் பருமன்
அதிக உடல் பருமன் கொண்டவர்கள் மற்றும் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு தண்டுக்கீரை ஒரு அருமருந்தாகும்.
இளமை தோற்றம்
இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது முதுமை தோற்றத்தை தடுத்து உடலை என்றும் இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.
இதனையும் படிக்கலாமே
- அரைக்கீரை பயன்கள் | Arai Keerai Benefits in Tamil(Opens in a new browser tab)
- சப்போட்டா பழத்தின் நன்மைகள் | Sapota Fruit Benefits in Tamil(Opens in a new browser tab)
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil(Opens in a new browser tab)
- முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
- பலாப்பழம் சாப்பிட்டால் கிடைக்க கூடிய நன்மைகள்(Opens in a new browser tab)
11 Comments
Comments are closed.