சிறுகீரை பயன்கள் | Siru Keerai Benefits

சிறுகீரை பயன்கள் | Siru Keerai Benefits

சிறுகீரை பயன்கள் Siru Keerai Benefits

மனிதர்களாகிய நமக்கு மாறிவரும் காலம் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளாலும் பல நோய்கள் நம்மை தாக்குகிறது.

இத்தகைய நோய்களிலிருந்து நம்ம எதிர் கொள்ள சக்தி நிறைந்த உணவுகளை, சாப்பிட வேண்டியது அவசியம்.

அவ்வாறு சக்தி நிறைந்த உணவு வகைகளாக, கீரைகள் இருக்கின்றன.

இதில் சிறுகீரை பயன்கள் குறித்து இன்று பார்ப்போம் .

மலச்சிக்கல்

நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள கீரைகளில் சிறுகீரையும் ஒன்று. சிறுகீரை சாப்பிடுவதன் மூலமாக வயிற்றில் உள்ள உணவுகள் எளிதில் செரிமானமாகிறது.

மேலும், தீவிரமான நிலையில் உள்ள மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை மிக சுலபமாக சிறுகீரை தீர்க்கிறது.

குழந்தைகள் முதல் பெரிய அனைவரும் சிறுகீரை சாப்பிடுவதால் பல நன்மைகள் பெறலாம்.

சிலருக்கு சாப்பிட்ட உணவு சரியாக செரிமானம் ஆகநிலை உண்டாகிறது.

இத்தகைய செரிமான கோளாறுகளை சிறுகீரை அற்புதமாக குணப்படுத்துகிறது.

மலச்சிக்கல் தீரவும், குடல் சுத்திகரிப்பாகவும் இருக்க சிறுகீரை சிறப்பாக செயல்படுகிறது.

வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனை தீர்ப்பது சிறுகீரையாகும்.

சிறுகீரை பயன்கள் Siru Keerai Benefits

சிறுநீரகம்

சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

சிறுகீரை நமது உடலின் முக்கிய உறுப்பான சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை மேலும் அதை சார்ந்து உள்ள அணைத்து உறுப்புகளும் சீராக உதவுகிறது.

சிறுகீரை பயன்கள் Siru Keerai Benefits

கல்லீரல் வீக்கம்

சில சமயங்களில் கல்லீரல் அதிக அளவு நச்சுக்கள் சேர்வதாலும் அதிர்ச்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது.

கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்வதில் சிறுகீரை இயற்கை மருத்துவ குணம் நிறைந்த உணவாக விளங்குகிறது.

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களில் காலை அல்லது மதிய உணவுகளில் சிறுகீரை சேர்த்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுக்கள் நீங்கி வீக்கம் குணமாகிறது.

சிறுகீரை பயன்கள் Siru Keerai Benefits

ஊட்டச்சத்து

சிறுகீரையில் உள்ள சத்துக்கள்

  • பொட்டாசியம்
  • மெக்னீசியம்
  • வைட்டமின் ஏ
  • வைட்டமின் பி
  • வைட்டமின் சி
  • இரும்பு சத்து

இவை அனைத்தும் உடலில் உள்ள எலும்புகள் வளர்ச்சியடைய, எலும்பின் உறுதி தன்மை அதிகரிக்க,இதயம், ரத்தம் ஓட்டம், நரம்புகளின் சீரான செயல்பாடு என நமது முழு உடலின் நலனுக்கு உதவுகிறது.

ரத்த சோகை

நமக்கு இரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க இந்த சிறுகீரை பார்த்துக் கொள்கிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் அளவானது எஅதிக அளவில் இருப்பது மிகவும் அவசியம்.

சிறுகீரை வாரத்தில் குறைந்தது ஒருமுறையாவது சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில்
உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு திறனும் அதிகரிக்கிறது.

மலட்டு தன்மை

இன்னைய தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் பல ஆண்களுக்கு அவர்களின் விந்தணுக்கள் குறைந்து மலட்டுத் தன்மை ஏற்படுகின்றது.

சிறுகீரை ஆண்களின் உடலில் உயிரணுக்களை பெருக்கும் திறன் கொண்டதாகும்.

சிறுகீரை சாப்பிடுவதன் மூலமாக ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கையானது அதிகரித்து மலட்டுத்தன்மை சரியாகும்.

சிறுகீரை பயன்கள் Siru Keerai Benefits

கண் பார்வை

காண் பார்வை நலமாக இருப்பது அனைவருக்கும் அவசியமாகும். சிறுகீரையில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்திருக்கிறது.

சிறுகீரை கண்களில் புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் கண்ணின் வெளிப்படலம், கண் கருவிழி ஆகியவற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.

சிறுகீரை பயன்கள் Siru Keerai Benefits

புண்கள்

உடலில் அடிபடும் போதும் ரத்த காயங்கள் ஏற்படுகின்றன.

ரத்த காயத்தினை மிக சீக்கிரமாக குணமடுத்தும் ஆற்றல் சிறுகீரை கொண்டுள்ளது.

இது கிருமி தொற்று ஏற்படாமல் தடுப்பதுடன் காயங்களை விரைவில் ஆற்றுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

உடலில் நோய் எதிர்ப்புதிறனானது வயது அதிகரிக்க அதிகரிக்க படிப்படியாக குறைகிறது.

சிறுகீரை சாப்பிடுவதால், அதில் இருக்க கூடிய சத்துக்கள் அனைத்தும் ரத்தத்தில் கலந்துநோய் எதிர்ப்பு திறனை, அதிகப்படுத்துகிறது.

சிறுகீரை பயன்கள் Siru Keerai Benefits

இதனையும் படிக்கலாமே

பெருஞ்சீரகம் பயன்கள் | PerunJeeragam Uses(Opens in a new browser tab)

தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா(Opens in a new browser tab)

மஞ்சள் தூள் பயன்கள் | Turmeric Powder Benefits(Opens in a new browser tab)

நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்(Opens in a new browser tab)

காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?(Opens in a new browser tab)

அழுகண்ணி மூலிகை | Alukanni Mooligai(Opens in a new browser tab)

அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil(Opens in a new browser tab)

முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)

ஓரிதழ் தாமரை பயன்கள் | Orithal Thamarai Side Effects(Opens in a new browser tab)

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning