துளசி மருத்துவ குணங்கள் | Thulasi Benefits in Tamil
மாதம் ஒரு பெயரில் புதுப்புது காய்ச்சல் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கான தீர்வை இன்னும் கண்டுபிடித்தபாடில்லை.
எந்த ஒரு வகை காய்ச்சலாக இருந்தாலும் சரி, துளசி இலை இருக்கிறது தீர்வாக. இதை உலக அளவில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஏற்கனவே, காய்ச்சல், மூளை காய்ச்சல் ஆகியவற்றுக்கு ஜப்பானியர்கள் துளசியை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர்.
காய்ச்சல் குணமாக
பத்து துளசி இலையுடன் ஐந்து மிளகை நசுக்கி இரண்டு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளர் ஆகும் வரை காய்ச்ச வேண்டும்.
காய்ச்சிய குடிநீரை சாப்பிட்டுவிட்டு சிறிது எலுமிச்சை சாறை அருந்தினால் மலேரியா காய்ச்சல் கூட குறையும் என்கிறது சித்தாள் மருத்துவம்.
துளசி பாணம் செய்முறை
சுத்தமான செம்பு பாத்திரத்தில் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை எடுத்து நீரினில் போடவும். இதை எட்டு மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.
இந்த துளசி நீரினை காலையில் வெறும் வயிற்றில் ஒன்றோ அல்லது இரண்டு டம்ளர் நீர் குடிக்க வேண்டும்.
சிறுநீரக ஆரோக்கியம்
இயற்கை துளசி பானம் சிறுநீரகங்களில் உள்ள நச்சுகளை வெளியேற்றி சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.
மன அழுத்தம்
துளசி பானத்தை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால் நரம்புகள் அமைதியாகி மூளையில் ரத்த ஓட்டம் அதிகரித்து நிவாரணம் பெறலாம்.
மேலும் துளசி பாணம் குடித்து வந்தால் சிறுநீரக கல் கரையும்.
இரத்த சுத்தி
துளசி பாணம் ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால், ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப்பொருட்கள், விஷ நீர்கள், சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.
வியர்வை நாற்றம்
உடலின் வியர்வை நாற்றத்தை தவிர்க்கும். குளிக்கும் நீரில், முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையை போட்டு வைத்து, அதில் குளித்தால் துர்நாற்றம் நீங்கும்.
மேலும்
அதே போன்று துளசி இலைக்கு, மன இறுக்கம், நரம்பு கோளாறு, ஞாபக சக்தியின்மை ஆஸ்துமா இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு என்றும் அத்துடன் தோல் சுருக்கம் மறையும் பார்வை கோளாறு குணமடையும் என்றும் சித்தாள் மருத்துவம் கூறுகிறது.
உடலின் எந்த பகுதியில் புற்றுநோய் இருந்தாலும் இந்த துளசி நீர் அருந்தினால் பூரணமாக குணம் கிடைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
மேலும் துளசி நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவு வியாதி நம்மை அண்டவே அண்டாது.
தோலில் பல நாட்களாக இருக்கும் படை சொறிகளையும், துளசி இலையால் குணமடைய செய்ய முடியும்.
முக்கிய குறிப்பு
வியாதி உள்ளவர்கள்தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும் தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.
இது எதிர்காலத்தில் நோய் வராத அளவுக்கு குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்தில் உள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன.
அதனால் சுத்தமான காற்று கிடைக்கிறது. துளசி அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது. அதனால் ஒவ்வொரு வீட்டிலும் துளசி வளர்ப்பது நல்லது.
செம்பு பாத்திரத்தில் துளசி நீர் கொடுக்கும் ஆன்மீக சடங்கினுள் ஒரு மிகப் பெரிய அறிவியல் உண்மை ஒளிந்திருப்பது இப்பொழுது உங்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன்.
எந்த நோயாக இருந்தாலும் சரி கவலைப்படாமல் துளசி நீர் அருந்தி வாருங்கள். அனைத்து நோய்களின் தாக்கமும் குறைந்துவிடும்.
இதனையும் படிக்கலாமே
- முருங்கை கீரை பயன்கள் | Murungai Keerai Soup Benefits in Tamil
- சேப்பங்கிழங்கு பயன்கள் | Seppankilangu Uses in Tamil
- திரிபலா சூரணம் பயன்கள் | Triphala Suranam Uses in Tamil
- நரம்பு தளர்ச்சி குணமடைய என்ன செய்ய வேண்டும் | Narambu Thalarchi Solution in Tamil
- உடல் சூடு குறைய சித்த மருத்துவம் | How to Reduce Body Heat in Tamil
- இயற்கை உணவு பட்டியல் | Healthy Food in Tamil
- சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil
- மொச்சை கொட்டை பயன்கள் | Mochai Kottai Health Benefits
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்
3 Comments
Comments are closed.